ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் என்ன இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? லிஸ்ட் இதோ
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: மத்திய கிழக்கில் வெடித்துள்ள ஈரான் மீதான போர், வெறும் எல்லைப் போராக மட்டும் நின்றுவிடாமல், இன்று உங்கள் வீட்டுச் சமையலறை முதல் குழந்தைகளின் பலூன்கள் வரை அனைத்தையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. 'நியூயார்க் டைம்ஸ்' (NYT) ஆதாரத்துடன் வெளிவந்துள்ள இந்தத் தகவல்கள், உலகம் எந்தளவுக்கு ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளது என்பதை நமக்கு உணர்த்துகின்றன.
ஈரானுடன் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திவரும் யுத்தம் எந்தெந்த நாடுகளை எப்படி பாதித்துள்ளது என்பது குறித்த ஒரு பார்வை.

விவசாயமும் உணவும்
- ஆஸ்திரேலியாவின் கோதுமை பாதிப்பு: உலக உர விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கு 'ஹார்முஸ்' ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகவே செல்கிறது. போர் காரணமாக உர விலை விண்ணைத் தொடுவதால், ஆஸ்திரேலிய விவசாயிகள் கோதுமை பயிரிடுவதைக் குறைத்துள்ளனர்.
- இனிப்பு கசக்கிறது: உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளரான பிரேசில், தற்போதுள்ள எரிசக்தி தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட, சர்க்கரைக்கு பதில் 'பயோ-ஃபியூயல்' (Biofuel) தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சர்க்கரை விலை உயர வாய்ப்புள்ளது.
எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகள்
- குறுகிய நேரக் குளியல்: தென் கொரியா தனது குடிமக்களைக் குறைந்த நேரம் குளிக்குமாறு (Shorter showers) அறிவுறுத்தியுள்ளது. அங்கு தண்ணீர் சூடுபடுத்தப் பயன்படுத்தப்படும் எரிசக்தி இறக்குமதி செய்யப்படுகிறது.
- அரைக்கை சட்டைகள் (Short Sleeves): தாய்லாந்து பிரதமர் தனது அமைச்சரவை மற்றும் அரசு ஊழியர்களை அரைக்கை சட்டைகள் அணியுமாறு கூறியுள்ளார். இதன் மூலம் ஏசி பயன்பாட்டைக் குறைத்து மின்சாரத்தைச் சேமிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
- மின் தூக்கி (Elevator) தவிர்த்தல்: பிலிப்பைன்ஸ் அரசு ஊழியர்களை லிஃப்ட் பயன்படுத்துவதைத் தவிர்க்கக் கேட்டுக்கொண்டுள்ளது. எகிப்து நாடு வாரத்தில் 5 நாட்கள் கடைகள் திறக்கும் நேரத்தைக் குறைத்துள்ளது.
போக்குவரத்து மற்றும் வர்த்தகம்
- தேங்கி நிற்கும் ஆடைகள்: வங்கதேசத்தின் பின்னலாடை ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஏற்றுமதி செய்ய வேண்டிய ஆடைகள் விமான நிலையங்களிலேயே மலைபோல் குவிந்து கிடக்கின்றன.
- மருந்து தட்டுப்பாட்டு அபாயம்: துபாய் மற்றும் தோஹா போன்ற சரக்கு போக்குவரத்து மையங்கள் மூடப்பட்டுள்ளதால், புற்றுநோய் மருந்துகள் மற்றும் குளிர்சாதன வசதியில் வைக்கப்பட வேண்டிய முக்கிய மருந்துகள் உரிய நேரத்தில் நோயாளிகளைச் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொருளாதாரம் மற்றும் முதலீடு
- வீடு வாங்குவது கடினம்: அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்து, அதன் விளைவாக வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் (Mortgage rates) உயர்ந்துள்ளன. இதனால் சாமானியர்கள் வீடு வாங்குவது எட்டாக்கனியாகி வருகிறது.
- தங்கத்தின் வீழ்ச்சி: வியப்பாகத் தோன்றினாலும், முதலீட்டாளர்கள் பணப்புழக்கத்திற்காகத் தங்கத்தை விற்று வருவதால் அதன் விலை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்பாராத பாதிப்புகள்
- கூடுதல் விலை டிராக் சூட்கள்: பெட்ரோலியப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் செயற்கை இழைகளால் (Petrochemicals) உருவாக்கப்படும் டிராக் சூட் மற்றும் விளையாட்டு உடைகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- காணாமல் போகும் பலூன்கள்: உலகின் ஹீலியம் (Helium) தேவையில் மூன்றில் ஒரு பங்கு கத்தாரில் இருந்து கிடைக்கிறது. போர் சூழலால் ஹீலியம் தட்டுப்பாடு ஏற்பட்டு, பார்ட்டி பலூன்கள் கிடைப்பது அரிதாகலாம்.
கலை மற்றும் விளையாட்டு
- ரத்து செய்யப்பட்ட போட்டிகள்: பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியாவில் நடைபெறவிருந்த புகழ்பெற்ற 'ஃபார்முலா-1' (Formula-1) கார் பந்தயங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளன.
- ஒத்திவைக்கப்பட்ட இசை நிகழ்ச்சிகள்: ஷகிரா (Shakira), கிறிஸ்டினா அகுலேரா போன்ற உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
- இலங்கை ஏற்கனவே புதன்கிழமைகளைப் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. லாவோஸ் நாடு பள்ளிகளை வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே நடத்த முடிவு செய்துள்ளது. இவை அனைத்தும் எரிபொருள் மற்றும் போக்குவரத்துச் செலவைக் குறைப்பதற்கான தீவிர முயற்சிகளாகும்.
More From
-
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications