"கோடி கோடியா சம்பாதிக்கலாம் போலயே!" எலக்ட்ரானிக் கழிவுகளிலிருந்து தங்கம்.. மிரள வைக்கும் ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: நாம் தேவையில்லை என்று தூக்கி வீசும் எலக்ட்ரானிக் கழிவுகளிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கும் புதிய முறையை ஆய்வாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர்.
எலக்ட்ரானிக் கழிவுகளிலிருந்து தங்கத்தை எடுக்கும் புதிய பயனுள்ள முறையை ஆய்வாளர்கள் இப்போது உருவாக்கியுள்ளனர். இந்த முறையில் நாம் ஒரு டாலரை செலவு செய்தால் அதற்குப் பதிலாக $50 மதிப்புள்ள தங்கம் கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மின் கழிவுகளிலிருந்து தங்கத்தை மீட்டெடுக்க ஆய்வாளர்கள் புரோடின் ஸ்பான்ஜ், சீஸ் தயாரிக்கும் போது கிடைக்கும் துணைப் பொருட்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துகின்றனர். எலக்ட்ரானிக் கழிவுகளிலிருந்து தங்கத்தை எடுக்க ஏற்கனவே சில முறைகள் இருந்தாலும் அவை மிகப் பெரியளவில் செய்யும் போது அதிக லாபத்தைத் தருவதாக இல்லை. ஆனால், அந்த நிலையை மாற்றுவதாக இது இருக்கிறது.
மிகப் பெரிய தொழிற்சாலை அமைத்துச் செய்தாலும் இந்த புதிய முறையில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த முறையில் வெறும் 20 பழைய கம்ப்யூட்டர் மதர்போர்டுகளில் இருந்து ஆய்வாளர்கள் 22 காரட் தங்கம் 450 மில்லிகிராமை மீட்டுள்ளனர்.
இந்த முறையில் தங்கத்தைப் பிரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் செலவுகள் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட எனர்ஜி செலவுடன் ஒப்பிடும் போது இந்த முறையில் கிடைக்கும் தங்கத்தின் மதிப்பு 50 மடங்கு அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். தங்கத்தைப் பிரித்தெடுக்க, ஆய்வாளர்கள் அதிக வெப்பத்தில் அமில நிலைகளில் புரதங்களைக் குறைத்துள்ளனர்.

இந்த ஆய்வில் 20 மதர்போர்டுகளில் இருந்து ஆய்வாளர்கள் உலோக பாகங்களை அகற்றி, அவற்றை ஒரு அமிலத்தில் கரைத்துள்ளனர். பின்னர் தங்க அயனிகளை ஈர்க்க ஒரு புரத இழை ஸ்பான்ஜை கரைசலில் வைத்தார்கள். இதைச் செய்த உடன் அதில் இருந்த தங்க அயனிகள் இதில் ஒட்டிக் கொள்கிறதாம். அதன் பிறகு ஆய்வாளர்கள் அந்த ஸ்பான்ஜை சூடு செய்து தங்க அயனிகளை கட்டிகளாக மாற்றுகிறார்கள்.
இந்த முறையைப் பயன்படுத்தி, அவர்கள் 20 கணினி மதர்போர்டுகளில் இருந்து சுமார் 450 மில்லிகிராம் தங்கத்தை எடுத்துள்ளனர். அவர்கள் கையில் கிடைத்ததில் 91% தங்கமாகவும் 9% செம்பாகவும் இருக்கிறது. அதாவது 22 கேரட் தங்கமாக இருக்கிறது. இதில் செலவாகும் தொகையைக் காட்டிலும் 50 மடங்கு அதிகமாகத் தங்கம் கிடைப்பதால் இதை மிக பெரியளவில் செய்தாலும் லாபம் அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சீஸ் செயல்முறையில் நமக்குக் கிடைக்கும் ஒன்றில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்க முடிகிறது என்பது மகிழ்ச்சியாக உள்ளதாகத் தெரிவித்த ஆய்வாளர்கள், இதை பெரியளவில் டெவலப் செய்ய வேலைகள் நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications