ஏஐ படங்களால் பெரிய ஆபத்து! அச்சு அசலாக இருந்தாலும் ஈஸியா கண்டுபிடிக்கலாம்! இதை பண்ணுங்க போதும்
வாஷிங்டன்: ஏஐ மூலம் உருவாக்கப்படும் போலி படங்கள் என்பது இப்போது இணையத்தில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. இதற்கிடையே இந்த போலி படங்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த நவீன உலகில் தொழில்நுட்பம் வேற லெவலில் வளர்ந்து வருகிறது.. அதிலும் குறிப்பாக இந்த ஏஐ தொழில்நுட்பம் என்பது கடந்த சில மாதங்களில் ஒட்டுமொத்தமாக உலகைப் புரட்டிப் போட்டு இருக்கிறது. அந்தளவுக்கு இது மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

ஏஐ நமக்குப் பல விதங்களில் உதவும் என்ற போதிலும், போலி செய்திகள் பரவுவதும் ஏஐ மூலம் மிக எளிதாகவும் வேகமாகவும் நடக்கும் விஷயமாக மாறிவிடுகிறது. இதனால் ஏஐ தொழில்நுட்பத்தை நாம் எச்சரிக்கையுடனேயே அணுக வேண்டி இருக்கிறது.
ஏஐ தொழில்நுட்பம்: கடந்த சில மாதங்களாகவே ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் பல போட்டோக்களை நாம் பார்த்திருப்போம். இவை பார்க்க அப்படியே அச்சு அசலாக உண்மை போல இருந்தாலும், அவை முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போட்டோக்களாக இருக்கிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்கலும் பீச்சில் சில் செய்வது, நமது இந்தியப் பிரதமர் மோடி கிட்டார் வாசிப்பது எனப் பல போலி படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
இதற்கிடையே இப்போது அமெரிக்க அதிபர் பைடன், முன்னாள் அதிபர் ஒபாமா ஆகியோர் பார்பி திரைப்படத்தில் வருவது போன்ற ஆடையை அணிந்து செல்வது போன்ற படம் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. இது குறித்து நெட்டிசன்கள் பலரும் பல வித கருத்துகளைத் தெரிவித்தனர். அங்குள்ள எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் நிறமாக ரெட் கருதப்படும் நிலையில், அதற்கு ஆதரவு தரும் வகையிலேயே இவர்கள் பிங்கை அணிந்துள்ளதாக எல்லாம் அடித்து விட்டார்கள். இருப்பினும், அதன் பின்னரே இது போலியான இமேஜ் என்பது தெரிய வந்தது.
போலியான படம்: ஒபாமாவின் பிரச்சாரத்திற்கு $1 மில்லியன் திரட்டிய ஜனநாயகக் கட்சியின் ஜான் கூப்பர், கடந்த ஜூலை 24ஆம் தேதி இந்தப் படத்தைப் பகிர்ந்திருந்தார். உடனடியாக இந்த படம் இணையத்தில் டிரெண்டானது. பலரும் இது உண்மையான படம் என்று நினைத்தே கருத்துகளைப் பதிவிட்டனர். இருப்பினும், சில மணி நேரத்தில் ஜான் கூப்பரே இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான படம் என்பதைக் கூறிவிட்டார்.

ஆனால், அவர் மட்டும் இது போலியான ஏஐ படம் என்பதைக் கூறவில்லை என்றால் பலரும் இதை உண்மை என்றே கருதியிருப்பார்கள். அந்தளவுக்கு மிகவும் தத்ரூபமாக இது இருந்தது. அவர்கள் மீது விழும் நிழல் தொடங்கி, அவர்களின் சிரிப்பு வரை அனைத்தும் அப்படியே பார்க்க உண்மை போலவே இருந்தது. இதுபோன்ற ஏஐ படங்கள் இணையத்தில் அதிகரித்துள்ள நிலையில், இதை எப்படிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை நாம் பார்க்கலாம்.
டூல்கள்: இதற்கு நாம் 'Optic AI or Not' என்ற டூலை பயன்படுத்தலாம்.. Stable Diffusion, MidJourney, Dall-E, GAN ஆகிய ஏஐ செயலிகள் மூலம் இது உருவாக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய இது உதவும். இந்த சாப்ட்வேர்கள் அனைத்தும் நாம் கொடுக்கும் டெக்ஸ்ட்களை அப்படியே தத்ரூபமாக இருக்கும் படமாக உருவாக்கும் திறன் கொண்டதாகும். அதேபோல படங்கள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா இல்லையா என்பதைக் கண்டறியவும் தனியாகப் பல செயலிகள் இருக்கவே செய்கிறது.
அடுத்தது ஏஐ மூலம் உருவாக்கப்படும் படங்களில் மிஸ்டேக்குகள் இருக்கும். இதைக் கூர்ந்து கவனித்தாலும் இது போலியான படமா இல்லையா என்பதை நாம் கண்டுபிடிக்கலாம். அதாவது கடந்த மாதம் போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஸ்டைலாக குளிருக்கு லெதர் ஜாக்கெட் எல்லாம் போட்டு நிற்பது போன்ற படம் இணையத்தில் டிரெண்டானது. ஆனால், கூர்ந்து கவனித்தால் அது போப்பிற்கு 4 விரல்கள் மட்டுமே இருந்தது தெரியும்.
எப்படி: மேலும், அந்த தலைவர்கள் இப்போது இருக்கும் படத்தை ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஏஐ படத்தில் முகம், தோல், முடி என அனைத்தும் மிகவும் பக்காவாக இருக்கும். ஆனால், வாழ்வில் இப்படி அனைத்துமே பக்காவாக இருக்க வாய்ப்பில்லை. அதேபோல படத்தில் பின்னணியில் இருக்கும் பொருட்கள் சரியாகத் தெரியாது. அவை சரியாகத் தெரியாது. மேலும், சில இடங்களில் பின்னணியில் ஒரே நபர் இரண்டு மூன்று முறை கூட தெரிவார். இதையெல்லாம் வைத்து நாம் அது ஏஐ படமா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

இதுபோக கூகுள் தளத்தில் இருக்கும் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் (reverse image search) மூலமாகவும் நம்மால் எது உண்மையான படம் எது போலியான படம் என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.












Click it and Unblock the Notifications