Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்து" ஒருவர் எப்படி அமெரிக்க அதிபர் ஆகலாம்? விவேக் ராமசாமி நறுக் பதில்.. வாவ் இதை எதிர்பார்க்கல

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் ரேஸில் இருக்கும் விவேக் ராமசாமி, இந்து மதம் குறித்தும் தனது மத நம்பிக்கைகள் குறித்தும் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கே இருப்பது இரண்டு பிரதான கட்சிகள் தான். ஒன்று குடியரசு கட்சி மற்றொன்று ஜனநாயக கட்சி.

 How US can have Hindu President Vivek Ramaswamy answer is now shared by many

அங்கே இப்போது ஜனநாயக கட்சியின் பைடன் அதிபராக இருக்கும் நிலையில், அடுத்த முறையும் அவரே தான் போட்டியிட உள்ளார். மறுபுறம் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் பலரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

குடியரசு கட்சி: அப்படி அங்கே குடியரசு கட்சி சார்பில் அதிபர் ரேஸில் முன்னணியில் இருப்பவர்களில் ஒருவர் விவேக் ராமசாமி. இவரது பெற்றோர் கேரளாவில் வசித்த தமிழ் பேசும் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அமெரிக்காவில் இப்போது குடியரசு கட்சி சார்பில் இவர் அதிபர் ரேஸில் முக்கிய இடத்தில் இருக்கிறார். டிரம்பிற்கு அடுத்து இவருக்குத் தான் குடியரசு கட்சியில் அதிக செல்வாக்கு இருக்கிறது.

தனக்கான ஆதரவை அதிகரிக்க விவேக் ராமசாமி தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கிடையே சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் இந்து மத நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஐவோவாவில் நடந்த நிகழ்ச்சியில், "நீங்கள் வேறு ஒரு மதத்தைப் பின்பற்றும் நபராக இருக்கிறீர்கள்.. இந்த மத வேறுபாடு காரணமாக உங்களால் அதிபராக முடியாது என்று சொல்வோருக்கு உங்கள் பதில் என்ன" என்று கேட்கிறார்.

மத நம்பிக்கை: அவரது கேள்விகளைப் பொறுமையாகக் கேட்ட விவேக் ராமசாமி, "அவர்கள் சொல்வதை என்னால் ஏற்க முடியாது. நான் ஒரு இந்து. நான் எனது அடையாளத்தைப் போலியாக மாற்ற மாட்டேன். இந்து மதமும் கிறிஸ்தவமும் பொதுவான விஷயங்களையே குறிப்பிடுகிறது.

இந்து மதத்தின்படி ஒவ்வொரு நபரும் ஒரு காரணத்திற்காக இங்கே இருக்கிறார்கள் என்று நான் புரிந்துகொள்கிறேன். அந்த காரணத்தை நிறைவேற்றுவது தான் எங்கள் தார்மீகக் கடமை. நம் அனைவருக்குள்ளும் கடவுள் இருக்கிறார். நாம் அனைவரும் சமம்" என்று அவர் தெரிவித்தார்.

பொதுவான விஷயங்கள்: தொடர்ந்து இந்து மதம் மற்றும் கிறிஸ்தவத்திற்கு இடையே இருக்கும் பொதுவான விஷயங்கள் குறித்துப் பேசிய அவர், "பாரம்பரியம் என்றால் என்ன.. அது எவ்வளவு முக்கியமானது என்பதையெல்லாம் சொல்லித் தான் வளர்த்தார்கள். திருமணங்கள் புனிதமானது, குடும்பங்கள் சமூகத்தின் அடித்தளம்.

திருமணத்திற்கு முன் உடலுறவு கூடாது.. விபச்சாரம் தவறு. வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிக்க எதையாவது விட்டுத் தர வேண்டி இருக்கும் வேண்டும் என்று என் பெற்றோர் எனக்குக் கற்றுக் கொடுத்தனர். இவை எல்லாம் இரண்டு மதத்திற்கும் பொதுவானது.

மதத்தைப் பரப்ப நான் சரியான நபர் இல்லை: இந்த நாட்டில் கிறிஸ்தவத்தைப் பரப்ப நான் சிறந்த அதிபராக இருப்பேனா என்று கேட்டால்.. இல்லை அதற்கு ஏற்ற நபர் நான் இல்லை. ஆனால், அமெரிக்கா எதற்காக நிறுவப்பட்டதோ அதற்கு நான் எப்போதும் நிற்பேன். குரல் கொடுப்பேன்" என்றார்.

38 வயதான விவேக் ராமசாமி அமெரிக்காவின் தென்மேற்கு ஓஹியோவைச் சேர்ந்தவர்.. அவரது தாயார் ஒரு மனநல மருத்துவர் மற்றும் அவரது தந்தை ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்தார். இவரது பெற்றோர் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+