திருமணம் முடிந்ததும்.. மனைவியின் EX கணவரை வீட்டிற்கு அழைத்து வந்த மாப்பிள்ளை.. உருக வைக்கும் காரணம்
வாஷிங்டன்: திருமணம் முடிந்த கையோடு மணப்பெண்ணை மட்டும் இன்றி அவரது முன்னாள் கணவரையும் தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் புது மாப்பிள்ளை. முன்னாள் கணவரை அவர் அழைத்து வந்ததற்கு பின்னால் இருக்கும் காரணம் நம் மனதை உருக்கும் விதமாக உள்ளது.
திருமணம் முடிந்ததும் கணவர் தனது வீட்டிற்கு புதுமணப்பெண்ணை அழைத்து வருவதுதான் பொதுவாக சமூகத்தில் அதிகம் கடைபிடிக்கும் நடைமுறையாக உள்ளது. ஆனால் வினோதமாக, மணபெண்ணின் முதல் கணவரையும் தன்னுடன் வாழ வீட்டிற்கு கணவர் அழைத்து வந்த ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து பார்க்கலாம்.

கிரிஸ் என்ற 36 வயது பெண், முதல் கணவரிடம் விவாகரத்து பெற்ற நிலையில், 2-வதாக ஜேம்ஸ் ஆர்ம்ஸ்டராங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் செய்து கொள்ளும் முன்பாகவே ஜேம்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்கிடம் ஒரு கண்டிஷன் ஒன்றை கிறிஸ் போட்டுள்ளார். அதாவது, திருமணம் முடிந்த பிறகு தனது குழந்தை பருவ நண்பரும் முன்னாள் கணவருமான பிரண்டன் என்பவரையும் தன்னுடன் அழைத்து வருவேன் என்று கூறியுள்ளார்.
கார்டியனாக இருக்க முடிவு செய்தார்: உடனே ஆர்ம்ஸ்டராங்கும் புதுமனைவி போடும் கண்டிஷனையும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் காரணம்தான் நெஞ்சை உருக வைக்கும் விதமாக உள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு கிறிஸ்க்கும் அவரது நண்பருமான பிரண்டனுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமண வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்த போது, ஒருநாள் பிரண்டன் கார் விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்தால், பிரண்டனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. முதலில் பிரண்டனுடன் இருந்துவிடலாம் என்று எண்ணிய கிறிஸ்.. நாளடைவில் ஒரு திருமணம் செய்தால் என்ன? என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. ஆனால், பிரண்டனை விட்டுவிட்டு வர மனம் வரவில்லை. இதனால், விவாகரத்து செய்துவிட்டு சட்டப்பூர்வ கார்டியனாக இருக்க முடிவு செய்தார்.
நெட்டிசன்கள் பாராட்டு: அதன்பிறகு தான் ஜேம்ஸ் மீது கிறிஸ்க்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தனது உண்மையான நிலையை ஏற்றுக்கொள்வாரா ஜேம்ஸ் என்ற அச்சம் கிரிஸ்க்கு இருந்துள்ளது. இருந்தாலும் கல்யாணத்திற்கு முன்பாக இதை சொல்லிவிட வேண்டும் என்று கூறி ஜேம்ஸிடம் தனது கண்டிஷனை கூறியுள்ளார். ஜேம்ஸும் அவரது நிலையை புரிந்து கொண்டு, முன்னாள் கணவரை உடன் அழைத்து வர சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.
இதன்படியே திருமணம் முடிந்த கையோடு, தனது மனைவியின் முதல் கணவரையும் வீட்டிற்கு அழைத்து வந்து இருக்கிறார் ஜேம்ஸ். இவரது செயலை பாராட்டி நெட்டிசன்கள் தற்போது பதிவிட்டு வருகின்றனர். இந்த நிகழ்வு இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட்












Click it and Unblock the Notifications