பிரிக்ஸ் முடிவுகளுக்கு முடிவுரை... மீண்டும் சீண்டும் டிரம்ப்.. அமெரிக்காவில் இருந்து வார்னிங்
வாஷிங்டன்: இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், ஈரான் உள்பட பல நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து சீண்டி வருகிறார். இந்நிலையில் டாலருக்கு மாற்றாக உலகளாவிய வர்த்கத்தில் வேறு கரன்சியை பயன்படுத்த நினைக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் முடிவுகளுக்கு மிக விரைவாக முடிவுரை எழுதப்படும் என்று மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார். அதன்பிறகு அவர் தொடர்ந்து பிரிக்ஸ் கூட்டமைப்பை சீண்டி வருகிறார். பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்டவை இருந்தன.

அதன்பிறகு தென்ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளும் இணைந்தன. இந்த கூட்டமைப்பில் இன்னும் பல நாடுகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த கூட்டமைப்பில் அமெரிக்கா இல்லை. அதேவேளையில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளும், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடும் இந்த கூட்டமைப்பில் இருப்பது அமெரிக்காவின் தூக்கத்தை கெடுத்து வுருகிறது.
அதுமட்டுமின்றி இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு உலகளாவிய வர்த்தகத்துக்கு டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இது நடக்கும் பட்சத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பு சரியும். இதனால் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பிரிக்ஸ் கூட்டமைப்பை எதிர்த்து வருகிறார். இந்நிலையில் தான் பிரிக்ஸ் நாடுகளை குறிப்பிட்டு அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும். டாலருக்கு நிகராக மாற்று கரன்சியை பயன்படுத்தினால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். இதில் எந்த விதிவிலக்கும் இருக்காது என்பதை டிரம்ப் திட்டவட்டமாக ஏற்கனவே கூறியிருந்தார்.
இப்போது மீண்டும் பிரிக்ஸ் கூட்டமைப்பை டிரம்ப் சீண்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ‛‛டாலரை மதிப்பிழப்பு செய்யும் நடவடிக்கையை பிரிக்ஸ் கூட்டமைப்பு எடுத்தால் அதன் உறுப்பு நாடுகளுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் கூறினேன். பிரிக்ஸில் உள்ள முக்கிய 6 நாடுகளை கடுமையாக தாக்கினேன். இதனால் அவர்கள் அர்த்தமுள்ள வகையில் ஏதேனும் ஒன்றை கையில் எடுத்தால் அதற்கும் விரைவில் முடிவுரை எழுதப்படும். ஏனென்றால் அமெரிக்காவுடன் எந்த நாட்டையும் விளையாட அனுமதிக்க முடியாது. உலகளவில் டாலரின் இருப்பை உறுதி செய்வதில் நான் உறுதியாக இருக்கிறேன். டாலருக்கு மாற்றாக உலகளவில் இன்னொரு டிஜிட்டல் நாணயத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்'' என மிரட்டல் விடுத்துள்ளார்.
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications