Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபாச பட நடிகை வழக்கு: குற்றம் நிரூபணம் ஆனால் டிரம்பிற்கு என்ன நடக்கும்? தேர்தலில் போட்டியிட முடியுமா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பிற்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.. அவரால் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்ற விவரங்களை பார்ப்போம்.

அமெரிக்காவில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021 வரை அதிபராக இருந்தவர் டொனால்டு டிரம்ப்.
அதிபர் பதவியில் இருந்த போதே அடிக்கடி சர்ச்சையில் சிக்கினார்.

அதன்பிறகு அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததும் அந்த தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தனது ஆதரவாளர்களை வன்முறைக்கு தூண்டிவிட்டார். இதனால், அமெரிக்க வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய தலைவர்களில் ஒருவராகவே டிரம்ப் கருதப்பட்டார்.

பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு

பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு

பெரும் தொழில் அதிபரான டிரம்ப் அதிபர் பதவி வருவதற்கு முன்பாக ஒரு பிளேபாயாகவே வலம் வந்து இருக்கிறார். டிரம்பின் இளைமைக்காலம் முதல் பல்வேறு பெண்களுடன் உறவில் இருந்துள்ளார். மேலும், சில பெண்கள் அவர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளையும் வைத்திருந்தனர். இருந்தாலும் தனக்கு பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்தாத வண்ணம் இந்த விவகாரதை டிரம்ப் பார்த்துக் கொண்டார்.

ஆபாச நடிகை குற்றச்சாட்டு

ஆபாச நடிகை குற்றச்சாட்டு

இந்த நிலையில் தான், 2016-ல் நடந்த அதிபர் தேர்தலின்போது தன்னுடன் நெருக்கமான உறவில் டிரம்ப் இருந்ததாக பிரபல ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரிவித்திருந்தார். அதிபர் தேர்தலுக்கு சில மாதங்களே இருந்த நிலையில் ஆபாச நடிகை வெளியிட்ட இந்த குற்றச்சாட்டு அதிரவைத்தது. ஆபாசப் பட நடிகையுடன் அமெரிக்க அதிபர் வேட்பாளர் நெருக்கமாக இருந்தார் என்று டிரம்பிற்கு எதிரான தரப்பு அவரை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

1.30 லட்சம் டாலர்

1.30 லட்சம் டாலர்

தேர்தலுக்கு சில காலம் முன்பு வரை ஸ்டோர்மி டேனியல்ஸ் இது குறித்துத் தொடர்ந்து பேசி வந்தார். எனினும், இந்த குற்றச்சாட்டுக்களை டிரம்ப் மறுத்து இருந்தார். இதற்கிடையில், தன்னைப் பற்றியும் தன்னுடன் இருந்த உறவு குறித்தும் பேசக் கூடாது என்று ஸ்டோர்மி டேனியல்ஸ் உடன் டிரம்ப் ஒரு ஒப்பந்தம் போட்டார். இதற்காக அவர் 1.30 லட்சம் டாலரும் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி) கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தாம் தற்போது டிரம்பிற்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்பிற்கு எதிராகவே வாக்குமூலம்

டிரம்பிற்கு எதிராகவே வாக்குமூலம்

அதாவது டிரம்ப் இந்த தொகையைச் சட்டவிரோதமாகத் தேர்தல் நிதியில் இருந்து கொடுத்ததாக புகார்கள் எழுந்தது. டிரம்பின் வழக்கறிஞராக இருந்த மைக்கேல் கோஹன் இப்போது டிரம்பிற்கு எதிராகவே வாக்குமூலம் அளித்தது சிக்கலுக்கு வித்திட்டது. அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் இன்று நீதிமன்றத்தில் டொனால்டு டிரம்ப் சரண் அடைந்தார்.

எத்தனை ஆண்டுகள் தண்டனை

எத்தனை ஆண்டுகள் தண்டனை

இதையடுத்து டிரம்பை கைது செய்யப்பட்டதோடு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி முன்பாக தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று டொனால்டு டிரம்ப் வாதிட்டார். டொனால்டு டிரம்பின் கைரேகை பதிவு செய்யப்பட உள்ளது. இதனிடையே, டொனால்டு டிரம்பிற்கு இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டால் அவருக்கு எத்த்தனை ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

 தேர்தலில் போட்டியிட முடியுமா?

தேர்தலில் போட்டியிட முடியுமா?

*டிரம்ப் மீதான குற்றம் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபணமானால் வரி மோசடி குற்றச்சாட்டில் IRC §7201 சட்டப்படி அவருக்குத் தண்டனை விதிக்கப்படும்.
* வரி ஏய்ப்பு குற்றச்சாட்டிற்கு $100,000 (இந்திய மதிப்பில் 82 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும்.
* இந்த குற்றச்சாட்டிற்காக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஆனால், விசாரணை முடிந்த பின்னரே இது தெரிய வரும்.
* டொனால்டு டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலும் அவரால் தேர்தலில் போட்டியிட முடியும்.

குற்றமற்றவராக இருக்க அவசியமில்லை

குற்றமற்றவராக இருக்க அவசியமில்லை

* அமெரிக்க சட்டப்படி ஒருவர் குற்றவாளியாக இருப்பது அவரை தேர்தலில் போட்டியிடுவதை எந்த விதத்திலும் தடுக்காது.
* அமெரிக்க அரசமைப்பு சட்டத்தின், அதிபர் பதவியில் இருப்பவர் குற்றமற்றவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
* செய்த தவறுக்கு சிறையில் இருக்கும் போதும் கூட, ஒருவர் பிரசாரம் செய்யவும் அதிபராகச் செயல்படவும் முடியும் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+