மோடி தலைவராக இருக்கும் வரை.. இந்தியாவுக்கு நிச்சயம் உதவுவோம்! உறுதியாக சொன்ன டிரம்ப்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: "பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தலைவராக இருக்கும் பட்சத்தில், அந்த நாடு ஏதேனும் தாக்குதலுக்கு உள்ளானால், அமெரிக்கா நிச்சயம் இந்தியாவுக்குத் துணையாக நிற்கும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய டிரம்ப், இந்தியாவுடனான உறவு மற்றும் பிரதமர் மோடி மீதான தனது மதிப்பைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

trump us narendra modi

"இந்தியா ஒரு அற்புதமான நாடு. பிரதமர் மோடி ஒரு மிகச்சிறந்த தலைவர் மற்றும் எனது நெருங்கிய நண்பர். ஒருவேளை மோடி ஆட்சியில் இருக்கும்போது இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நாங்கள் அவர்களுக்கு உதவ அங்கே இருப்போம். இந்தியாவுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அமெரிக்கா வழங்கும்." என்று கூறியிருக்கிறார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு மற்றும் நட்புறவு குறித்து டிரம்ப் பேசியுள்ள இந்த கருத்துக்கள் தற்போது சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக, மோடியின் தலைமையின் கீழ் இந்தியா அடைந்துள்ள வலிமையை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

கடந்த காலங்களிலும் பிரதமர் மோடியும் டிரம்பும் நெருங்கிய நட்புறவைப் பேணி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வரும் நிலையில், டிரம்பின் இந்த கருத்து இந்திய-அமெரிக்க உறவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஏன் மோடிக்கு முக்கியத்துவம்?

அமெரிக்க அரசியலை பொறுத்தவரை, அந்நாட்டில் ஜனநாயக கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது எனில், அந்த அரசு இந்தியாவில் காங்கிரஸுக்கு சப்போர்ட் செய்யும். அதுவே குடியரசுக் கட்சி (டிரம்ப்) ஆட்சிக்கு வருகிறது எனில், இந்தியாவில் பாஜகவுக்கு சப்போர்ட் செய்யும். ஏனெனில் குடியரசுக் கட்சியின் சிந்தாந்தமும், பாஜகவும் ஐடியாலஜியும் ஒத்துபோகிறது. இதன் காரணமாகத்தான் மோடியை, டிரம்ப் இஷ்டத்துக்கும் புகழ்ந்து வருகிறார். இது தவிர அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரின் வாக்குகளை கவரவும் மோடியை டிரம்ப் பயன்படுத்துகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+