‛யெஸ்’.. ஜோ பைடனுக்கு பதில் அமெரிக்க அதிபராகும் கமலா ஹாரீஸ்? நிருபர் கேள்வியால் வெளியான பரபர தகவல்
வாஷிங்டன்: ஜோ பைடனுக்கு பதில் அமெரிக்க அதிபர் பதவியில் கமலா ஹாரீஸ் அமர்த்தப்படலாம் என்ற தகவல்கள் பரவி வருகிறது. இத்தகைய சூழலில் தான் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு கமலா ஹாரீஸ் அளித்த பதில் என்பது அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து ஜோ பைடன் விலகுகிறாரா? என்ற கேள்வியை அதிகப்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் உள்ளார். துணை அதிபராக கமலா ஹாரீஸ் இருக்கிறார். அமெரிக்காவை பொறுத்தமட்டில் அதிபர், துணை அதிபர் பதவிக்காலம் என்பது 4 ஆண்டுகளாகும். கடந்த 2020ல் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிட்டனர். இதில் டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தி ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபரானர். 2021 ஜனவரி மாதம் முதல் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட ஆர்வமாக இருக்கிறார். அதேபோல் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் களமிறங்க தயாராக இருக்கிறார். இருப்பினும் அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் ஜோ பைடனுக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் அவரது வயது முதிர்வு தான். தற்போது ஜோ பைடனுக்கு 80 வயது ஆகிறது. அவருக்கு ஞாபக மறதி பிரச்சனை உள்ளது. அதோடு அவர் அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். இதுபோன்ற காரணங்களால் தான் அடுத்த முறை ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் என கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க அதிபர் பதவிக்காலத்தை முடிக்கும் முன்பே ஜோ பைடன் அதில் இருந்து விலகலாம் என்ற தகவல் தற்போது பரவி வருகிறது.
அதாவது ஜோ பைடன் செயல்பாட்டால் அமெரிக்க மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. அவரது ஞாபக மறதி மற்றும் வயது முதிர்வு உள்ளிட்டவற்றால் உலக நாடுகள் மத்தியில் அமெரிக்கா மீதான மரியாதை குறைவதாக சிலர் நம்புகின்றனர். இது வரும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இதனை சரிசெய்யும் வகையில் தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபர் பதவியை துணை அதிபர் கமலா ஹாரீசிடம் ஒப்படைக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இந்தோனேசியா நாட்டின் ஜகார்த்தா நகரில் தென்கிழக்கு ஆசிர நாடுகளின் உச்சி மாநாட்டில் அமெரிக்கா சார்பில் துணை அதிபர் கமலா ஹாரீஸ் பங்கேற்றார். இந்த மாநாட்டில் கமலா ஹாரீசிடம் அமெரிக்க அதிபர் மாற்றம் தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு கமலா ஹாரீஸ் கூறிய பதில் தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அதாவது அசோசியேட்டட் பிரஸ் நிருபர் கிறிஸ் மெகேரியன் ‛‛ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வயதை மையப்படுத்த பல தகவல்கள் பரவி வருகிறது. தேவை என்றால் நீங்கள் அவரது ஜனாதிபதி பொறுப்பை கவனிப்பீர்களா? அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு கமலா ஹாரீஸ் ‛யெஸ்' என பதிலளித்தார். இதன்மூலம் அமெரிக்க அதிபர் பதவியை ஜோ பைடனுக்கு பதில் ஏற்க தயாராக இருப்பதாக கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விடாத நிருபர், ‛‛அமெரிக்க அதிபர் மாற்றம் எப்படி நடக்கும் அதற்கான நடைமுறையை விளக்க முடியுமா?'' என கேட்டார். அதற்கு கமலா ஹாரீஸ், ‛‛நீங்கள் அனுமானங்களுடன் கேள்வி கேட்கிறீர்கள். ஆனாலும் உங்களின் அனுமானத்துக்கு நான் பதிலளிக்கிறேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஜோ பைடன் நன்றாக இருக்கிறார். இதனால் உங்களின் தற்போதைய கேள்வி என்பது எந்த பலனையும் அளிக்கப்போவது இல்லை.
அதோடு நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். துணை அதிபராக பொறுப்பேற்கும் ஒவ்வொருவரும் அதிபர் பதவியை ஏற்பதற்கான சூழல் ஏற்படும் என்பதை முன்கூட்டியே புரிந்து கொள்கிறார். இத்தகைய புரிதலில் இருந்து நான் மட்டும் வேறுபட்டவள் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்'' என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications