Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.100 கோடி சம்பளத்தில் ஐஐடி பட்டதாரிக்கு வேலை! ஆனா ஒரே ஆண்டில் வேலை போச்சு.. அடுத்து 248 கோடியில்..

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐஐடி மும்பையில் படித்த மாணவர் ஒருவருக்கு ரூ.100 கோடி சம்பளத்தில் கிடைத்த வேலை சில மாதங்களில் போய்விட்டது. இருப்பினும், மனம் தளராமல் அடுத்து அவர் செய்த காரியம் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

நமது நாட்டில் ஐஐடி நிறுவனங்களில் படித்தவர்கள் தான் இப்போது உலகின் பல முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் டாப் இடங்களில் வேலை செய்து வருகிறார்கள்.

 IIT graduate with Rs 100 crore salary package fired within a year, now got Rs 249 crore

ஐஐடியில் படிக்கும் மாணவர்களுக்குக் கல்லூரியை விட்டுக் கிளம்பும் முன்பே பல லட்சம் சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. ஆனால், அனைவரது வாழ்க்கையும் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் செல்வதில்லை.

ஐஐடி பட்டதாரி: அப்படித்தான் ஐஐடி பட்டதாரி ஒருவருக்குக் கடந்தாண்டு ரூ. 100 கோடிக்கும் அதிகமான சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக சில காரணங்களால் அவர் ஒரே ஆண்டில் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், அந்த முன்னாள் ஐஐடி மாணவர் இப்போது தனியாக ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளாராம். இதற்காக அவர் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கிய நிலையில், கொஞ்சக் காலத்திலேயே அவருக்கு சுமார் ரூ.249 கோடி நிதி கிடைத்துள்ளது.

இந்த ஐஐடி பட்டதாரி வேறு யாரும் இல்லை பராக் அகர்வால் தான்.. இவர் வேறு யாரும் இல்லை, எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கும் முன்பு அதில் சிஇஓவாக பணிபுரிந்து வந்தவர்தான் இவர்.. ட்விட்டர் தளத்தில் சிஇஓவாக இவர் நியமிக்கப்பட்ட போது இவர் தான் டிரெண்டிங்கில் இருந்தார். மும்பை ஐஐடியில் படித்த பராக் அகர்வாலுக்கு சம்பளம் ரூ. 94 கோடி. இது தவிர போனஸ், பங்குகள் ஆகியவற்றைச் சேர்த்து அவரது ஆண்டு சம்பளம் 100 கோடி ரூபாயை தாண்டியது.

டிஸ்மிஸ்: இருப்பினும், எலான் மஸ்க் அதிபராகப் பதவியேற்ற உடன் அவர் டிஸ்மிஸ் செய்த முதற்கட்ட ஊழியர்களில் இந்த பராக் அகர்வாலும் ஒருவர்.. வேலை போன பிறகு அவர் என்ன செய்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் ஏஐ துறையில் அவர் போட்டுள்ள திட்டம் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

பராக் அகர்வால் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடியை போல லார்ஜ் லாங்குவேஜ் மாடல்களுக்கு மென்பொருளை உருவாக்கக் கூடியதாகும். வினோத் கோஸ்லா என்பவர் தலைமையிலான கோஸ்லா வென்ச்சர்ஸ் நிறுவனம் பராக் அகர்வாலின் நிறுவனத்தில் நிதியுதவி செய்துள்ளது. இது தவிர, இன்டெக்ஸ் வென்ச்சர்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் ரவுண்ட் கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளது.

பராக் அகர்வால்: இந்த பராக் அகர்வால் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்தவர்.. அவரது தந்தை இந்திய அணுசக்தித் துறையில் மூத்த அதிகாரியாகவும், தாயார் ஓய்வு பெற்ற பொருளாதாரப் பேராசிரியராகவும் இருந்தார். அகர்வால் தனது பட்டப்படிப்பை 2005இல் ஐஐடி பாம்பேயில் பயின்றார். அவர் சர்வதேச அளவில் 77 ரேங்கை பெற்றார். பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற அமெரிக்கா சென்றார்.

அங்கே பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய கடந்த 2021இல் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக நியமனம் செய்யப்பட்டார். இருப்பினும், எலான் மஸ்க் உள்ளே வந்ததும் ட்விட்டர் நிறுவனத்தையே மொத்தமாக தலைகீழாக மாற்றிப்போட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+