இந்தியாவில் இந்த வருடம் 'வரலாறு காணாத' பொருளாதார வீழ்ச்சி.. சர்வதேச நாணய நிதியம் கணிப்பு
வாஷிங்டன்: இந்தியாவில் வரலாறு காணாத பொருளாதார சரிவு ஏற்படும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) கணக்கீடு செய்துள்ளது. 2020ஆம் ஆண்டில் 4.5 சதவீதம் அளவுக்கு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணக்கிட்டுள்ளது.
அதேநேரம் 2021 ஆம் ஆண்டு பொருளாதாரம் மறுபடி ஏற்றம் காண்பதற்கான வாய்ப்பிருப்பதாகவும், 6 சதவீதம் என்ற அளவுக்கு பொருளாதாரம் உயரும் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 4.9 சதவீதம் என்ற அளவுக்கு இருக்குமாம். ஏப்ரல் மாதம் உலக பொருளாதார அவுட்லுக் (WEO) கணித்ததைவிட இது 1.9 சதவீதம் குறைவு ஆகும்.
சர்வதேச நாணயநிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இதுபற்றி கூறுகையில், 2020ம் ஆண்டில் 4.5 சதவீதம் அளவுக்கு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியுடன் இருக்கும் என்று நாங்கள் அறிந்துள்ளோம். பெரும்பாலான நாடுகளில் இதுதான் நிலவரமாக இருக்கப் போகிறது. இந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் என்பது இதுவரை இல்லாத அளவுக்கு குறைவாகும் என்று தெரிவித்துள்ளார்.
2020ம் ஆண்டில் முதல் அரையாண்டு காலகட்டத்தில் எதிர்பார்த்ததை விடவும் குறைவாக, பொருளாதார பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது. அதேநேரம் 2021 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி என்பது 5.4 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரிக்கும்.
இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக அனைத்து மண்டலங்கள் மற்றும் பிராந்தியங்களின் பொருளாதார வளர்ச்சியில் பின் நோக்கி பயணிக்கின்றன. இந்தியாவில் நீண்டகாலமாக லாக்டவுன் நடைமுறையை பின்பற்றுவது மற்றும் ஏப்ரலில் எதிர்பார்த்ததை விடவும் குறைவாக பொருளாதார வளர்ச்சி இருப்பது ஆகியவை இந்தியாவில் 4.5 சதவீதம் என்ற அளவுக்கு பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்பதற்கான காரணம் என்கிறது சர்வதேச நாணய நிதியம்.
1961 பிறகு சர்வதேச நாணய நிதியம், இந்தியா தொடர்பாக அளித்துள்ள மிக குறைவான வளர்ச்சி விகிதம் இதுவாகும். ஏனெனில் அதற்கு முந்தைய ஆண்டுகளில் எந்த மாதிரி பொருளாதார வளர்ச்சி இருந்தது என்பது தொடர்பான டேட்டா கிடையாது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications