சிக்கலில் உலக பொருளாதாரம்! லேசாக சரிந்தாலும் வீழாது இந்திய பொருளாதாரம்! சர்வதேச நாணய நிதியம் கணிப்பு

வரும் நிதியாண்டின் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்த கணிப்புகளைச் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சினாப்: வரும் நிதியாண்டின் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்த கணிப்புகளைச் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது

வாஷிங்டன்: உலக பொருளாதாரமே சிக்கலில் உள்ள நிலையிலும், இந்தியா ஓரளவுக்கு நல்ல நிலையில் உள்ளதாகவும் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் என்ற நிலையில் இருந்து, 6.1%ஆக குறையும் என்றபோதிலும், சர்வதேச நாடுகளை ஒப்பிட்டால் இது நல்லநிலைதான் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலக பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒவ்வொரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எந்தளவுக்கு இருக்கும் என்பது குறித்த கணிப்புகளைச் சர்வதேச நாணய நிதியம் வெளியிடும். அதன்படி இந்தாண்டு பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு அனைத்து நாடுகளையும் பாதித்து உள்ளது. இதில் அமெரிக்கா தொடங்கி அனைத்து வல்லரசு மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.

 இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரத்தில் அடுத்த நிதியாண்டில் சில மந்தநிலையே இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8%ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்த நிலையில், அடுத்தாண்டு பொருளாதார வளர்ச்சி மேலும் குறைந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.1%ஆக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இது மட்டுமின்றி உலக நாடுகளின் வளர்ச்சி எந்தளவுக்கு இருக்கும் என்பது குறித்த கணிப்புகளையும் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.

 உலக பொருளாதாரம்

உலக பொருளாதாரம்

அதன்படி சர்வதேச வளர்ச்சி 2022இல் 3.4 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், 2023இல் பொருளாதார வளர்ச்சி மேலும் குறைந்த 2.9 சதவீதமாகக் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. 2024இல் இது மெல்ல 3.1 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சர்வதேச நாணய நிதியத்தின் ஆராய்ச்சித் துறை இயக்குநர் பியர்-ஆலிவியர் கௌரிஞ்சாஸ் கூறுகையில், "கடந்த அக். மாதம் வெளியிட்ட கணிப்பில் இருந்து இந்தியாவின் வளர்ச்சி கணிப்புகள் மாறவில்லை.

 எவ்வளவு

எவ்வளவு

இந்த நடப்பு நிதியாண்டில் 6.8 சதவீத வளர்ச்சி இருக்கும் எனக் கணித்துள்ளோம். அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்து 6.1ஆக இருக்கும். பெரும்பாலும் வெளிநாடுகளில் ஏற்படும் காரணங்களே இந்த பொருளாதார வளர்ச்சி குறைவதற்குக் காரணமாகும். 2022இல் இந்தியாவின் வளர்ச்சி 6.8%ஆக இருக்கும். அது 2023இல் 6.1%ஆகக் குறையும் நிலையில், அடுத்து 2024 நிதியாண்டில் வளர்ச்சி மீண்டும் 6.8% ஆக அதிகரிக்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 என்ன காரணம்

என்ன காரணம்


ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி 2023 மற்றும் 2024 நிதியாண்டுகளில் முறையே 5.3 சதவீதம் மற்றும் 5.2 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. 2022இல் உலக பொருளாதாரம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைந்து 4.3 சதவீதமாக இருந்த நிலையில், வரும் நிதியாண்டில் அது அதிகரிக்கவுள்ளது நல்லதொரு செய்தியாகும். சீனாவின் பொருளாதாரம் திடீரென குறைந்ததே உலக பொருளாதாரம் கடந்தாண்டு மெதுவானதற்கு முக்கிய காரணமாகும்.

 சீனா

சீனா

கடந்த 40 ஆண்டுகளில் உலக பொருளாதாரத்தை விட காட்டிலும் சீன பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ளது இதுவே முதல்முறையாகும். அதேநேரம் 2023இல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு சீனாவின் பொருளாதாரம் 5.2% அதிகரிக்கும் என்றும் அதைத் தொடர்ந்து 2024இல் அதன் பொருளாதாரம் 4.5%ஆக குறையும் என்று கூறப்பட்டுள்ளது. அங்குச் சீர்திருத்தங்கள் பெரியளவில் செய்யாததால் பொருளாதார வளர்ச்சி வரும் காலங்களில் தொடர்ந்து குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

 இந்தியா + சீனா

இந்தியா + சீனா

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, 2022 உடன் ஒப்பிடுகையில் 2023இல் வளரும் நாடுகளின் பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. மேலும், 2023 உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மற்றும் சீனாவின் பங்கு மட்டும் 50% வரை இருக்கும் என்றும் சர்வதேச நிதியத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். அதேநேரம் வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் 2022இல் 2.7%ஆக இருந்த நிலையில், அது இந்தாண்டு 1.2% அடுத்தாண்டு 1.4% எனக் குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+