அமெரிக்காவில் குறையும் பாதிப்பு.. தினசரி பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்!
வாஷிங்டன்: உலகளவில் கொரோனா பாதிப்பு 152,782,818 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து உலகளவில் முதலிடம் பிடித்து தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இந்தியாவில் 3,92,562 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,688 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அதிக தொற்று பாதிப்பில் 2-ம் இடத்தில் உள்ள பிரேசிலில் 60,013 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 2,278 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா விஸ்வரூபம்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் கொரோனா தொடர்ந்து போட்டு தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 152,782,818 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 3,205,673 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 130,707,206 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் குறைகிறது
அமெரிக்காவில் கொரோனா முன்பை விட குறைந்து வருகிறது. அங்கு 41,489 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 657 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பிரேசிலில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாகி வருகிறது. அங்கு ஒரே நாளில் 60,013 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,278 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

இந்தியாவில் ஆதிக்கம்
இந்தியாவிலும் கொரோனா தொடர்ந்து அடங்காமல் ஆட்டம் போட்டு வருகிறது. உலகளவில் கொரோனா தினசரி பாதிப்பில், உயிரிழப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உச்சபட்ச அளவாக 392,562 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 3,688 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 3,352,361 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இந்தியாவில் இதுவரை மொத்தம் 19,549,656 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை மொத்தம் 215,523 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் தொற்று வெகுவாக குறைந்துள்ளது. அங்கு 1,907 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவால் மேலும் 7 பேர் பலியாகியுள்ளனர்.

இத்தாலி பாதிப்பு
பிரான்சில் 25,670 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மேலும் 192 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் புதிதாக 12,965 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 226 பேர் இறந்துள்ளனர். ரஷ்யாவில் புதிதாக 9,270 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனாவுக்கு 392 பேர் பலியாகியுள்ளனர். ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 20,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 160 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. அங்கு மேலும் 28,817 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மேலும் 373 பேர் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications