நேற்று பின்தொடர்ந்தது.. இன்று முந்திவிட்டது.. புதிய கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.97 கோடியாக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்படும் புதிய கேஸ்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. உலகில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கொரோனா இதுவரை 19,794,206 பேருக்கு பாதிப்பை கொடுத்துள்ளது. இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 7.28 லட்சமாகும்.

இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1.2 கோடியாகும். அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 51 லட்சத்தை தாண்டியது. இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 54 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 26 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். பிரேசிலில் 30 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 46,395 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இங்கு 1,00,543 பேர் பலியாகிவிட்டனர்.
இந்தியாவில் 21 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று ஒரே நாளில் புதிதாக 65,156 நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. உலகளவில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக கொரோனா பாதித்த நாடுகளில் முதலிடத்தில் இந்தியாவும், இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும் உள்ளது. இதுவரை இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை 43,453 ஆக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8.82 லட்சமாக உயர்ந்துள்ளது. இங்கு பலியானோரின் எண்ணிக்கை 14,854 ஆக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இதுவரை 5.53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 10,210 பேர் பலியாகிவிட்டனர்.
மெக்சிக்கோவில் 4,69,407 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெருவில் 4.71,012 பேருக்கும் சிலியில் 3.68 லட்சம் பேருக்கும், கொலம்பியாவில் 3.76 லட்சம் பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் 3.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications