ரஷ்ய எண்ணெய்க்கு செக் வைத்த டிரம்ப்.. ஐநா சபையில் பதிலடிகொடுத்த இந்தியா! சிக்கலில் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே உடனடியாக, முழுமையான, நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் வரைவுத் தீர்மானம் நேற்று கொண்டுவரப்பட்டது. இதன் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. இதன் மூலம் ரஷ்யாவுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது என்பதை அமெரிக்காவுக்கு தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் வரி நெருக்கடி காரணமாக ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை இந்தியா நிறுத்தியிருந்தது. இதன் மூலம் ரஷ்யா-இந்தியா உறவு முடிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது என்று பலரும் பேசியிருந்தனர். இப்படி இருக்கையில் ரஷ்யாவுடனான நட்பை இந்தியா ஐநா சபையில் நிரூபித்திருக்கிறது.

India Maintains Neutrality as UN

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் 4வது ஆண்டு நிறைவையொட்டி ரஷ்யாவுக்கு எதிராக ஐநா சபையில் போர் நிறுத்த தீர்மானம் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானம், ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட பொதுச் சபையில் 107 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது.

'உக்ரைனில் நிரந்தர அமைதிக்கு ஆதரவு' என்ற தலைப்பிலான இத்தீர்மானத்திற்கு 12 நாடுகள் எதிராக வாக்களித்தன. அதேவேளையில் 51 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன. உக்ரைன் மூலம் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்தில், பஹ்ரைன், வங்கதேசம், பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் வாக்கெடுப்பில் பங்கேற்காத 51 நாடுகளில் ஒன்றாக இருந்தது.

இந்தத் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சாசனம் உட்பட பன்னாட்டு சட்டங்களுக்கு இணங்க, ஒரு முழுமையான, நியாயமான மற்றும் நிரந்தர அமைதியை உருவாக்க வலியுறுத்தியது. போர்க் கைதிகள் முழுமையாகப் பரிமாறிக்கொள்ளப்பட வேண்டும், சட்டவிரோதமாக சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும், அத்துடன் நாடு கடத்தப்பட்ட பொதுமக்கள், குறிப்பாகக் குழந்தைகள், அவர்களது இருப்பிடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் போன்றவற்றை முதன்மையான நம்பிக்கையை வளர்க்கும் நடவடிகைகளாக இத்தீர்மானம் சுட்டிக்காட்டியது.

ரஷ்ய கொடூர தாக்குதலை நடத்துவதாகவும், உக்ரைன் தரப்பில் நியாயம் இருப்பதாகவும் இந்த தீர்மானம் கூறியிருந்தது. ஆனால், உக்ரைனுக்கு பின்னால் அமெரிக்கா இருந்து செய்யும் ஆயுத உதவிகள் குறித்து இந்த தீர்மானம் பேசவில்லை. ஒரு வகையில் இந்த தீர்மானம் ரஷ்ய எதிர்ப்பு, அமெரிக்க ஆதரவு கொண்டதுதான். இதில் இந்தியா ரஷ்ய ஆதரவு நிலை எடுத்து, வாக்கெடுப்பை புறக்கணித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+