முட்டுக்கட்டையா போடுறீங்க? அமெரிக்காவை கழற்றிவிடும் இந்தியா? ரஷ்யாவுடன் சேர்ந்து செய்யும் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நம் நாட்டுக்கு 5ம் தலைமுறையை சேர்ந்த எஃப் 35 ரக போர் விமானத்தை தருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இப்படியான சூழலில் மத்திய அரசின் எச்ஏஎல் நிறுவனம் சார்பில் நம் நாட்டின் விமானப்படையை வலிமைப்படுத்தும் வகையிலான தேஜஸ் இலகுரக விமானம் தயாரிக்கும் பணிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் அமெரிக்காவுக்கு பாடம் புகட்ட ரஷ்யாவுடன், நம் நாடு விரைவில் கைகோர்க்கலாம் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

நம் நாட்டின் பாதுகாப்புக்கு ராணுவம், விமானப்படை, கப்பற்படை உள்ளிட்டவை மிகவும் முக்கியமானவை. இதனால் ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி என்பது ஒதுக்கப்படும்.நம் நாட்டை பொருத்தவரை பாதுகாப்பு துறைக்கு தேவையான போர் விமானங்கள், ஆயுதங்கள் உள்பட பல்வேறு ராணுவ தளவாடங்கள் வெளிநாடுகளில் இருந்து தான் வாங்குகிறோம்.

America India Russia

இந்த விஷயத்தில் காலம் காலமாக நாம் வெளிநாட்டை தான் சார்ந்து இருக்கும். பாதுகாப்பு துறையை பொறுத்தவரை நமக்கு உற்ற நண்பனாக இருப்பது ரஷ்யா தான். நம் நாட்டின் பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்படும் போர் விமானங்கள், ஏவுகணைகள், ஆயுதங்கள் என்று பெரும்பாலானவை ரஷ்யாவில் இருந்து வாங்கியது தான்.

ரஷ்யா நம் நாட்டுக்கு நெருங்கிய நட்பு நாடு தான். ஆனாலும் எவ்வளவு நாள் தான் பாதுகாப்பு துறையில் மற்ற நாடுகளை நம்பியே இருப்பது. சொந்தமாக போர் விமானங்கள், ராணுவ தளவாடங்களை தயாரிப்பதில் இந்தியா ஆர்வமாக உள்ளது. இதற்கான பணிகள் காலகாலமாக நடந்து வருகிறது. ஆனாலும் கூட நம் நாட்டுக்கான ராணுவ தளவாடங்களை தயாரிப்பதில் தன்னிறைவு பெற நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. இருப்பினும் முந்தைய காலத்தை ஒப்பிடும்போது நம் நாடு பல ராணுவ தளவாடங்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்கிறது. இதனை தொடர ‛மேக் இன் இந்தியா' திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.

சரி இது இருக்கட்டும். இனி மேட்டருக்கு வருவோம். அதாவது சமீபத்தில் பெங்களூரில் சர்வதேச விமான கண்காட்சி நடந்து முடிந்தது. இந்த கண்காட்சியில் இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏபி சிங் பங்கேற்று அளித்த பேட்டி பேசும்பொருளானது. அவர் கூறுகையில், ‛‛பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்ஏஎல் விமான நிறுவனம் (HAL or Hindustan Aeronautical Limited) எங்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் செயல்படவில்லை. அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. விமான கண்காட்சிக்கு வரும்போது 11 தேஜஸ் எம்கே 1 ஏ என்ற இலகுரக விமானங்கள் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிவித்தது. ஆனால் ஒன்று கூட இல்லை'' என்று கூறியிருந்தார்.

இது தான் பேசும் பொருளானது. எச்ஏஎல் என்பது மத்திய அரசின் நிறுவனமாகும். நம் நாட்டுக்கு தேவையான போர் விமானங்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. இப்போது தேஜஸ் எம்கே 1 ஏ ரக இலகு ரக தயாரிப்பில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிதி ஆண்டில் மொத்தம் 18 தேஜஸ் எம்கே 1 ரக இலகு ரக விமானங்களை இந்திய விமானப்படையிடம் எச்ஏஎல் ஒப்படைத்து இருக்க வேண்டும். ஆனால் 2 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்தை தான் இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏபி சிங் வெளிக்காட்டி இருந்தார்.

இதுபற்றி எச்ஏஎல் நிறுவனம் சார்பில், ‛‛சில தொழில்நுட்ப பிரச்சனை மற்றும் இன்ஜின் தாமதம் உள்ளிட்டவற்றில் தேஜஸ் எம்கே 1 ரக விமானம் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனமான ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் இருந்து ஜிஇ-404

ரக இன்ஜின் வருவதில் சிக்கல் உள்ளது. விரைவில் இன்ஜின் கிடைத்தவுடன் விமானங்கள் டெலிவரி செய்யப்படும்'' என்றார். அதாவது 99 ஜிஇ -404 ரக இன்ஜினுக்காக அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் ரூ.5,375 கோடிக்கு கடந்த 2021ல் எச்ஏஎல் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இந்த இன்ஜினை அமெரிக்க நிறுவனம் வழங்காமல் தாமததித்து வருகிறது.

இந்த தாமதம் என்பது நம் விமானப்படையின் பலத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. ஏனென்றால் தேஜஸ் எம்கே 1ஏ இலகுரக விமானம் கிடைக்காமல் விமானப்படை தவித்து வருகிறது. ஏற்கனவே நம் நாட்டின் விமானப்படையில் போர் விமானம் பற்றாக்குறையாக உள்ளது. இப்படியான சூழலில் இந்த தாமதம் என்பது விமானப்படையின் எண்ணிக்கையை குறைக்கம் வகையில் உள்ளது. இதனால் நம் நாடு உடனடியான போர் விமானங்களின் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதனால் அமெரிக்காவை கைவிட்டு ரஷ்யா பக்கம் இந்தியா செல்லலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நல்ல உறவு என்பது உள்ளது. அதேபோல் நம் நாட்டின் பாதுகாப்பு துறையை பொருத்தமட்டில் ரஷ்யா நெருக்கமான கூட்டாளியாக உள்ளது. அதோடு ரஷ்யாவும், அமெரிக்கா, சீனாவை போல் பாதுகாப்பு துறையில் பலமாக உள்ளது. அதிநவீன போர் விமானங்களை தயாரிப்பதில் ரஷ்யா கைதேர்ந்து உள்ளது. குறிப்பாக ரஷ்யாவின் யுனைடெட் இன்ஜின் கார்ப்பரேஷன் நிறுவனம் முன்னணியில் உள்ளது.

இந்த நிறுவனம் சார்பில் பெங்களூர் விமான கண்காட்சியில் 5ம் தலைமுறை விமானமான 177எஸ் விமான இன்ஜின் உள்பட பிற பாதுகாப்பு சார்ந்த உபகரணங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. இது ஏஎல் - 31எப்பி உள்ளிட்ட பழைய மாடல்களை மாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர் விமான கண்காட்சியின்போதே யுனைடெட் இன்ஜின் கார்ப்பரேஷனின் அதிகாரிகள், நம் நாட்டின் விமானப்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

அப்போது தேஜஸ் எம்கே 1 ஏ ரக போர் விமானத்துக்கான இன்ஜினை தங்கள் நிறுவனத்தால் தயாரித்து வழங்க முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். அதாவது ஜிஇ 404க்கு மாற்றாக தங்கள் நிறுவனம் சார்பில் 177எஸ் இல்லாவிட்டால் ஐ177எஸ் இன்ஜின்களை உருவாக்கி தர முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இன்ஜின்கள் 5ம் தலைமுறை இன்ஜினை சேர்ந்தது.

இந்த இன்ஜினால் குறைந்த எரிபொருளை பயன்படுத்தி நீண்டதூரம் பயணிக்க முடியும். இந்த இன்ஜினின் லைப் என்பது 6 ஆயிரம் மணிநேரமாக உள்ளது. அதோடு பராமரிப்பு செலவு என்பது குறையும். அதேபோல் இந்திய விமானப்படையில் பல விமானங்கள் ரஷ்யாவை சேர்ந்தவை. இதன்மூலம் ரஷ்யாவின் தொழில்நுட்பங்களை இந்தியா விமானப்படையால் எளிதில் புரிந்து கொண்டு செயல்படவும் இது வழிவகுக்கும். இதனால் அமெரிக்கா நிறுவனம் வழங்கும் ஜிஇ -404 ரக இன்ஜினுக்கு பதில் ரஷ்யா நிறுவனத்திடம் இருந்து இன்ஜின் தயாரிக்க இந்தியா ஒப்பந்தம் போட வாய்ப்புள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதேபோல் ரஷ்யாவின் இந்த யுனைடெட் இன்ஜின் கார்ப்பரேஷன் நிறுவனம் என்பது புதிய விகே - 650 வி டர்போஷாஃப்ட் இன்ஜினையும் தயாரித்துள்ளது. இந்த நிறுவனங்கள் இலகுரக ஹேலிகாப்டர்களில் பொருத்த முடியும்.
மேலும் கடந்த ஆண்டு நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே ஏஎல் 31எப்பி இன்ஜின் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த இன்ஜின் என்பது SU -30 MKI ரக விமானங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். அதோடு விமான இன்ஜின் தயாரிப்பில் நம் நாடும் தன்னிறையை அடையும் வகையில் ஒப்பந்தம் என்பது மேற்கொள்ளப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+