இந்தியாவுக்கு ஆதரவாக எலான் மஸ்க்? டிரம்பின் ஆலோசகரின் மூக்கை உடைத்த எக்ஸ் வலைதளம்! கவனிச்சீங்களா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவேரோ கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டார். அந்த பதிவை உண்மை சரிபார்ப்புக்கு எக்ஸ் வலைதள பக்கம் அனுமதித்தது. அதில் பீட்டர் நவரோவின் குற்றச்சாட்டின் உள்நோக்கம் தோலுரிக்கப்பட்டது. இதனால் ஆக்ரோஷமான பீட்டர் நவரோ எலான் மஸ்கை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். முட்டாள்தனமான பதிவை அவர் அனுமதிக்கிறார் என்று சாடினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மீதான நம்பிக்கையை நம் நாடு இழந்துள்ளது. இதனால் இந்தியாவும், சீனாவும் கைகோர்க்க தொடங்கி உள்ளது.

india-russia-crude-oil-row-donald-trump-aide-peter-navarro-tears-into-elon-musk-as-x-debunks-his

இப்படியான சூழலில் தான் டிரம்ப் மற்றும் அவரது நிர்வகத்தில் உள்ளவர்கள் நம் நாட்டை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் ஒருவர் தான் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ. இவர் தொடர்ந்து இந்தியாவை சீண்டி வருகிறார். குறிப்பாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை விமர்சனம் செய்து வருகிறார்.

இதையடுத்து பீட்டர் நவ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ Fact Check: ரஷ்ய எண்ணெய் இறக்குமதியிலிருந்து இந்தியா லாபம் ஈட்டுவதாக எக்ஸ் தனது பதிவை கொடியிட்டதை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உதவியாளர் பீட்டர் நவரோ, எலோன் மஸ்க்கை கடுமையாக சாடியுள்ளார். மாஸ்கோவிலிருந்து எரிசக்தி கொள்முதல் தொடர்பாக புது தில்லியை பல நாட்களாக குறிவைத்து வரும் வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர், இந்தியா "முற்றிலும் லாபத்திற்காக" மற்றும் உக்ரைனில் உள்ள ரஷ்ய "போர் இயந்திரத்திற்கு" உணவளிக்க ரஷ்ய எண்ணெயை வாங்குவதாகக் குற்றம் சாட்டினார்.

இந்தியா அதிக வரி விதிப்பதால் அமெரிக்காவில் வேலை இழப்பு ஏற்படுகிறது. ரஷ்யாவின் போர் இயந்திரத்திற்கு எரிபொருள் ஊற்றவும், அந்த நாட்டின் வருவாய்க்காகவும் மட்டுமே இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதனால் உக்ரேனியர்கள்/ரஷ்யர்கள் இறக்கின்றனர். அமெரிக்க வரி செலுத்துவோருக்கு அதிக செலவு ஏற்படுகிறது'' என கூறியிருந்தார்.

இந்த பதிவுக்கு நம் நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவே யுரேனியம் உள்பட பல தாதுக்களை ரஷ்யாவிடம் இருந்து தான் வாங்குகிறது என்று பலரும் பதிலடி கொடுத்தனர். அதுமட்டுமின்றி அவரது பதிவை உண்மை சரிபார்ப்புக்கு எக்ஸ் வலைதள பயனர்கள் உட்படுத்தினர். இதையடுத்து அடுத்த சில நிமிடங்கள் அவரது பதிவின் கீழ் "Readers added context they thought people might want to know," என்ற தலைப்பில் பதிவு காட்டப்பட்டது.

அதில், ‛‛ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது எரிசக்தி பாதுகாப்பு தொடர்பானது. லாபத்துக்கானது இல்லை. இதில் பொருளாதார தடைகள் மீறப்படவில்லை. அமெரிக்காவே, ரஷ்யாவிடம் இருந்து சில பொருட்களை வாங்குகிறது. இது பாசாங்குத்தனமானது'' என்று போஸ்ட் செய்யப்பட்டது.

அதாவது எக்ஸ் பக்கத்தில் ஒருவரின் போஸ்ட்டில் உண்மை சரிபார்க்கும் ஆப்ஷன் உள்ளது. அந்த வகையில் பீட்டர் நவ்ரோவின் பதிவை எக்ஸ் நிறுவனம் சரிபார்த்து இந்த கருத்தை மக்களுக்கு காட்டியது. இதனால் கோபமடைந்த பீட்டர் நவ்ரோ, எக்ஸ் வலைதள பக்கத்தில் உரிமையாளராக எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதுதொடர்பாக பீட்டர் நவரோ, "ஆஹா, எலான் மஸ்க் மக்களின் பதிவுகளில் பிரச்சாரத்தை அனுமதிக்கிறார். கீழே உள்ள அந்த முட்டாள்தனமான குறிப்பு தான் அது. இது முட்டாள்தனமானது. இந்தியா லாபம் ஈட்டுவதற்காக மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது.ரஷ்யா உக்ரைனில் போர் தொடுப்பதற்கு முன்பு கச்சா எண்ணெயை வாங்கவில்லை உக்ரேனியர்களைக் கொல்வதை நிறுத்துங்கள். அமெரிக்காவில் வேலை பறிபோவதை தடுத்து நிறுத்துங்கள்'' என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+