"டிராகன்" உள்ளே சுபான்ஷு சுக்லா.. மின்னல் வேகத்தில் பூமிக்கு திரும்புகிறார்! தரையிறங்குவது எப்போது?
வாஷிங்டன்: கடந்த இரு வாரங்களாகச் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா நேற்று அங்கிருந்து கிளம்பினார். டிராகன் விண்கலத்தில் அவர் இப்போது பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் இன்று மாலை 3 மணியளவில் பூமியை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளாகவே இஸ்ரோ விண்வெளி ஆய்வில் புதிய முத்திரையைப் பதித்து வருகிறது. உலகின் வளர்ந்த நாடுகள் கூட திணறும் விஷயங்களை இஸ்ரோ தொடர்ச்சியாகச் சாதித்து வருகிறது. சந்திரயான் 3 கூட பூமியின் தெற்குப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. உலகில் வேறு எந்த நாடும் தெற்குப் பகுதியில் தரையிறங்கியதே இல்லை. அதையும் இந்தியா சாதித்தது.

இந்தியா விண்வெளி ஆய்வு
அடுத்த கட்டமாக மனிதர்களை விண்வெளியில் அனுப்பும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. இந்த ககன்யான் திட்டத்திற்காக 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாகத் தீவிரப் பயிற்சி பெற்று வருகிறார்கள். அதற்கு முன்பு அமெரிக்கா உதவியுடன் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா முடிவு செய்தது.
இதன் மூலம் அவருக்குக் கிடைக்கும் அனுபவம் ககன்யான் திட்டத்திற்கு உதவும் என்பதால் இஸ்ரோ இந்த முடிவை எடுத்தது. நாசாவுடன் இதற்காக ஒப்பந்தமும் போட்டது. பயிற்சி, நாசாவுக்கான கட்டணம் என இஸ்ரோ இந்தச் சிறப்புத் திட்டத்திற்கு இஸ்ரோ ரூ.500 கோடி வரை செலவிட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் ஜூன் 25ம் தேதி சுபான்ஷு சுக்லா விண்வெளிக்குப் புறப்பட்டார்.
எப்போது
ஒரு நாள் முழுக்க பயணித்து அவர் ஜூன் 26ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தார். இரு வாரங்கள் அங்கேயே தங்கியிருந்த சுக்லா பல ஆய்வுகளை மேற்கொண்டார். இந்தச் சூழலில் தான் அவர் நேற்றைய தினம் விண்வெளி மையத்தில் இருந்து கிளம்பினார். மாலை 5 மணியளவில் அவர் விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டார். இன்று மாலை 3 மணியளவில் அவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள்.
தாமதம் ஏன்
அவருடன் 3 விண்வெளி வீரர்கள் பூமியை நோக்கிய பயணத்தைத் தொடங்கினர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பூமியை வந்தடைகிறார். வெறும் 400 கிமீ வர 22 மணி நேரமா என்று உங்களுக்குச் சந்தேகம் வரலாம். பூமி வேகமாகச் சுழன்று கொண்டு இருக்கும் நிலையில், துல்லியமான நேரத்தில் தான் பூமியின் புவி ஈர்ப்பு மண்டலத்தில் நுழைய முடியும். கொஞ்சம் மிஸ்ஸானாலும் எங்கோ ஒரு மூலையில் தரையிறங்குவது போல ஆகிவிடும். இப்படிக் காத்திருந்து வரவேண்டி இருப்பதாலேயே அதிக நேரம் ஆகிறது.
1600 டிகிரி
மேலும், பூமிக்குள் திரும்பும்போது அந்த கேப்சியூல் 1600 டிகிரி செல்சியஸ் வரை சூடாகும். அந்தளவுக்கு வேகமாக அது பூமியை நோக்கி வரும். இன்று மாலை 3 மணியளவில் அவர்களின் விண்கலம் பூமியை அடையும். அமெரிக்காவின் கலிபோர்னியா கடலில் அவர்களின் விண்கலன் தரையிறங்கும். அங்கு அவர்களை மீட்கச் சிறப்புக் குழு தயாராக இருக்கிறது.
இரு வாரங்கள் விண்வெளியில் இருப்பதால் அவர்கள் உடலில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்திருக்கும். இதனால் பூமிக்குத் திரும்பிய உடனேயே வழக்கம் போல எழுந்து நடமாட எல்லாம் முடியாது. இதனால் அவர்களை 24 மணி நேரம் வரை சிறப்பு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications