இந்தியாவுக்கு தலைவலி.. சீனா ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறாரா டிரம்ப்? பெரிய சிக்கலாகிவிடுமே! பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டிரம்ப் இன்று எலான் மஸ்கிற்கு அளித்த பேட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அவர் சீனாவை ஆதரிக்கும் வகையிலான சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஒரு வேளை அவர் அதிபர் தேர்தலில் வென்று சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் அது இந்தியாவுக்குப் பெரிய தலைவலியாக மாறும். இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கிற்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப் பேட்டியளித்தார். இந்த நேர்காணல் எலான் மஸ்கிற்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் (ட்விட்டர்) நேரலை செய்யப்பட்டது.

US Presidential Election 2024 Donald Trump China

முதலில் சில நிமிடங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நேர்காணலைப் பலராலும் கேட்க முடியவில்லை. இருப்பினும், சில நிமிடங்களில் அது சரி செய்யப்பட்ட நிலையில், சுமார் 13 லட்சம் பேர் இந்த 45 நிமிட நேர்காணலைக் கேட்டனர்.

மாறிய டோன்: இதில் டிரம்ப் தன் மீதான கொலை முயற்சி, பைடனின் கொள்கைகள், கமலா ஹாரிஸ் தேர்தலில் போட்டியிடுவது எனப் பல விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசியிருந்தார். குறிப்பாக அவர் சீனா குறித்துப் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்தது. 2017- 2021 வரை டிரம்ப் அதிபராக இருந்த போது சீனாவைத் தொடர்ச்சியாக மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் இந்த நேர்காணலில் அவர் தனது டோனை மொத்தமாக மாற்றினார்.

சீன ஆதரவு: எலான் மஸ்க்கிற்கு அளித்த பேட்டியில் டிரம்ப், "புதின், ஜி ஜின்பிங், கிம் ஜாங் உன் ஆகியோர் இப்போது தங்கள் ஆட்டத்தில் டாப் லெவலில் உள்ளனர். இந்த தலைவர்கள் தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள், ஆனால் அவர்களின் அன்பின் வடிவமே வேறாக இருந்து இருக்கும். நான் அதிபராக இருந்த போது புதின் உடன் நல்லுறவு ஏற்பட்டது. நான் அதிபராக இருந்து இருந்தால் உக்ரைன் மீது ரஷ்யா நிச்சயம் போரை ஆரம்பித்து இருக்காது" என்றார்.

US Presidential Election 2024 Donald Trump China

டிரம்ப்பிற்கு ரஷ்யா மற்றும் வடகொரிய அதிபர்களுடன் நல்லுறவு இருந்தது என்னவோ உண்மை தான். அமெரிக்காவுக்கு எப்போதும் ரஷ்யா, வடகொரியா நாடுகளுடன் நல்லுறவு இருந்தது இல்லை. ஆனால், கடந்த 2018இல் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து கிம் ஜாங், புதின் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார் டிரம்ப். அது உலகமே கவனிக்கும் செயலாக இருந்தது.

மோதல் போக்கு: ஆனால், டிரம்ப் காலத்தில் சீனா உடன் தொடர்ந்து மோதல் போக்கே இருந்தது. சீனாவுக்கு எதிராக டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். சீனாவில் இருந்து சில பொருட்களை இறக்குமதி செய்யக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும், சில பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது. இதை சில வல்லுநர்கள் வரிப் போர் எனக் குறிப்பிடும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. மேலும், கொரோனா காலகட்டத்திலும் டிரம்ப் சீனாவை எந்தளவுக்கு எதிர்த்தார் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. கடைசி வரை டிரம்ப் கொரோனாவை சீன வைரஸ் என்றே குறிப்பிட்டார்.

அந்தளவுக்குச் சீனாவை எதிர்த்து வந்த டிரம்ப் இப்போது திடீரென சீனாவைப் பாராட்டியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஆனால், இதற்குப் பின்னணியில் எலான் மஸ்க் இருக்கக்கூடும் என்ற பேச்சும் இருக்கிறது.

பின்னணியில் மஸ்க்? எலான் மஸ்க் தனது டெஸ்லா கார்கள் விற்பனையைச் சீனாவில் அதிகரிக்கத் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். டெஸ்லாவுக்கு முக்கிய சந்தையாகச் சீனா இருக்கும் என்று அவர் கருதுகிறார். ஆனால், சீனாவின் கட்டுப்பாடுகளால் எலான் மஸ்கால் அதைச் செய்ய முடியவில்லை. மேலும், மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் சாட்டிலைட் இணையச் சேவை வழங்கவும் சீனா அனுமதிக்கவில்லை. இதனால் சீனா உடன் நல்லுறவையே அவர் விரும்புகிறார்.

எலான் மஸ்க்கிற்கு அமெரிக்காவில் குறிப்பிடத்தக்கச் செல்வாக்கு இருக்கும் நிலையில், அவர் டிரம்பை ஆதரித்துள்ளது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் (எலான் மஸ்க்கால்) கூட டிரம்ப் சீனா குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றக்கூடும். டிரம்ப் இதைச் செய்வாரா என்று சிலருக்குக் கேள்வி வரலாம்.. ஆனால், யாருமே எதிர்பார்க்காததைச் செய்வதே டிரம்ப் ஸ்டைல்.. புதின், கிம் ஜாங் சந்திப்புகள் கூட அப்படி யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் நடந்தவை தான். டிரம்ப் அதிபர் தேர்தலில் வென்று, அவர் சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கலாம். இதற்கு வாய்ப்பு குறைவு என்றாலும் இதை நம்மால் புறம் தள்ளிவிட முடியாது.

இந்தியாவுக்குப் பெரிய சிக்கல்: ஒரு வேளை அவர் சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் அது இந்தியாவுக்கு மிகப் பெரிய சிக்கலாகவே இருக்கும். ஏற்கனவே, இந்தியா தன்னை சுற்றி இருக்கும் எல்லை நாடுகளுடன் சிக்கலான உறவையே கொண்டு இருக்கிறது. வங்கதேசத்தில் இருந்த இந்தியா ஆதரவு அரசும் கவிழ்ந்துவிட்டது. இந்த நேரத்தில் இந்தியாவின் பிரச்சினைக்குரிய அண்டை நாடுகளில் ஒன்றான சீனா குறித்த நிலைப்பாட்டை மாற்றினால் அது இந்தியாவுக்குத் தலைவலியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

அமெரிக்க அதிபர் தேர்தலில் என்ன நடக்கப் போகிறது.. அதைத் தொடர்ந்து புவிசார் அரசியலில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கப் போகிறது என்பதே இப்போது உலகமே கவனித்து வரும் நிகழ்வுகளாக உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+