நடுவானில் அநாகரீகம்.. "அந்த செயலில்" ஈடுபட்ட இந்திய வம்சாவளி டாக்டர்.. அதுவும் சிறுமி முன்பு.. ஷாக்
வாஷிங்டன்: விமானத்தில் 14 வயது சிறுமி இருந்த சீட்டுக்கு அருகே அமர்ந்திருந்த இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவர் சீட்டில் இருந்தபடி சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை எப்.பி. ஐ கைது செய்துள்ளது.
அமெரிக்க விமானத்தில் சென்று கொண்டிருந்த போது 14-வயது சிறுமி முன்பாக சுய இன்பத்தில் ஈடுபட்டு முகம் சுளிக்கும் வகையில் அநாகரீக செயலில் ஈடுபட்ட இந்திய-அமெரிக்க மருத்துவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் மத்திய விசாரணை அமைப்பான எப்.பி.ஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எப்.பி.ஐ வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:-

கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் ஹோனோலுலுவில் இருந்து போஸ்டன் நகருக்கு விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் மாஸ்சாசுசெட்ஸ் நகரை சேர்ந்த இந்திய வம்சாவளி மருத்துவரான சுதிப்தா மோஹண்டி என்பவர் பயணம் செய்து உள்ளார். போஸ்டனில் உள்ள பெத் இஸ்ரேல் டியோகனெஸ் மருத்துவ மையத்தில் மருத்துவராக பணியாற்றும் இவர் விமானத்தில் பெண் ஒருவருடன் பயணம் செய்து கொண்டு இருந்தார்.
மருத்துவரின் சீட்டிற்கு அடுத்தாற் போல் 14-வயது சிறுமி தனது தாத்தா பாட்டியுடன் பயணம் செய்து கொண்டு இருந்தார். விமானத்தில் பல இருக்கைகளும் காலியாக கிடந்துள்ளது. போஸ்டன் நோக்கி புறப்பட்ட விமானம் நடுவானில் சென்று கொண்டு இருந்த போது, கழுத்து வரை போர்வையை வைத்து மூடிய படி மருத்துவர் மோஹண்டி இருந்துள்ளார். அப்போது அவரது கால்கள் மட்டும் அசைந்துள்ளது.
சிறிது நேரத்தில் போர்வை கீழே விழுந்து இருக்கிறது. அப்போதுதான் அந்த அநாகரீமகான செயலில் மருத்துவர் ஈடுபட்டதை சிறுமி கவனித்து இருக்கிறார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சிறுமி உடனடியாக தனது இருக்கையில் இருந்து எழுந்து காலியாக கிடந்த வேறு இருக்கைக்கு சென்று விட்டார். விமானம் போஸ்டனில் தரையிறங்கியதும் விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் சிறுமி தெரிவித்து இருக்கிறார்.
இதைக் கேட்டதும் அதிர்ந்து போன பெற்றோர் உடனடியாக அதிகாரிகளிடம் புகாரளித்தனர். இது குறித்து எப்.பி.ஐ அதிகாரிகள் மருத்துவர்களிடம் விசாரித்த போது தன் மீதான குற்றச்சாட்டை மருத்துவர் மோஹண்டி மறுத்துள்ளார். மேலும் தனக்கு சம்பவம் குறித்து நியாபகம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த எப்.பி.ஐ அதிரடியாக அண்மையில் கைது செய்து இருக்கிறது.
மேலும் சொந்த பிணையில் நிபந்தனைகளுடன் விடுவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் கடந்த வியாழக்கிழமை மருத்துவர் மோஹண்டி அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்க வழி வகை செய்யும் சட்டப்பிரிவின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications