இந்திய ஐடி ஊழியர்களுக்கு பெரிய சிக்கல்.. குண்டை தூக்கி போட்ட டிரம்ப்! அமெரிக்காவே அப்படித்தாங்க!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் மைக்ரோசாப்ட், அடோப் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல், காக்னிசென்ட் போன்ற இந்திய ஐடி நிறுவனங்களை PERM திட்டத்திலிருந்து தற்காலிகமாக நீக்கியிருக்கிறது. இதனால் இந்நிறுவனங்களை சேர்ந்த அமெரிக்க இந்தியர்கள் இனி H-1B விசாவுக்காக விண்ணப்பிக்க முடியாது.

இந்த நிறுவனங்களை சேர்ந்த இந்தியர்கள் பலர் அமெரிக்காவில் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பார்கள். ஆனால் தற்போது டிரம்பின் உத்தரவு காரணமாக இனி இப்படி விண்ணப்பிக்க முடியாத நிலைக்கு இந்தியர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

Indian IT Giants

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தை கடுமையாக சாடிய வான்ஸ் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அதாவது மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 6000 அமெரிக்க ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது. அதே காலகட்டத்தில் தகுதி வாய்ந்த அமெரிக்கர்கள் கிடைக்கவில்லை என்று பொய் சான்றளித்து, 6300 புதிய H-1B விசாக்களையும் சுமார் 3000 கிரீன் கார்டுகளையும் அந்நிறுவனம் பெற்றிருக்கிறது. அப்படியெனில் வெளிநாடுகளிலிருந்து ஆட்களை கூட்டி வந்து.. அவர்களுக்கு குடியுரிமையை வாங்கி கொடுத்திருக்கிறது.

இதை கணக்கிட்டு பார்த்தால்.. நீக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்க ஊழியருக்கும் பதிலாக 1.5 மடங்கு கூடுதலான வெளிநாட்டு ஊழியர்களை குறைந்த ஊதியத்தில் கட்டாய ஊழியர்களாக மைக்ரோசாப்ட் மாற்றியுள்ளது. இது ஒரு மிக மோசமான விசா முறைகேடு என்று வான்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

H-1B விசா என்பது அமெரிக்காவில் ஆட்கள் கிடைக்காத மிக உயர்தர தொழில்நுட்பப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அதைவிடுத்து அமெரிக்க ஊழியர்களை நீக்கிவிட்டு மலிவான விலையில் வெளிநாட்டு பணியாளர்களை அமர்த்துவதற்கு பயன்படுத்த கூடாது என்று டிரம்ப் நிர்வாகம் திட்டவட்டமாக கூறியுள்ளது. மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களை சரி செய்து கொண்டு அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வரை இந்த தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடி நிறுவனங்கள் மட்டுமின்றி, அமெரிக்காவின் புகழ்பெற்றற 9 முன்னணி பல்கலைக்கழகங்கள் மீதும் J-1 விசா முறைகேடு தொடர்பாக பெரிய அளவிலான வரலாற்று விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. ஹார்வர்ட், யேல், ஸ்டான்போர்ட், பிரவுன், எம்ஐடி, கால்டெக் போன்ற உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுக்கு தொழிலாளர் நலத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சர்வதேச மாணவர் பரிமாற்றத்திற்கான J-1 விசாக்களை தவறாக பயன்படுத்தி அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பையும் ஊதியத்தையும் இந்த நிறுவனங்கள் குறைப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு நாளுக்கு முன்புதான் அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்கள் தங்களது படிப்பிற்கு பிறகு அங்கு வேலை செய்வதற்கான OPT திட்டத்திற்கு கட்டணத்தை உயர்த்தும் மசோதாவை கொண்டு வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+