"பிகினி" போட்டோ.. ஆசை பேச்சு.. காதலர் தின கவுண்டமணி ஸ்டைலில் அமெரிக்கர்களை ஏமாற்றிய இந்திய மாணவர்
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த வலதுசாரி இளைஞர்களைச் சாதாரண ஏஐ டூல் மூலம் இந்தியா இளைஞர் ஏமாற்றி இருக்கிறார். தன்னை ஒரு அமெரிக்கப் பெண் போலக் காட்டிக் கொண்டு போட்டோ, வீடியோக்களை அவர் பதிவிடவே.. இதன் மூலம் அவர் பல லட்ச ரூபாயை அசால்டாக சம்பாதித்து இருக்கிறார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
அமெரிக்காவில் வலதுசாரி அடிப்படைவாதம் கடந்த சில ஆண்டுகளாகவே வளர்ந்து வருகிறது. அதிலும் டிரம்ப் வந்த பிறகே இவர்கள் வளர்ச்சி அதிகரித்தது. வெளிநாட்டில் இருந்து வருவோரால் தான் தங்களுக்கு வேலை கிடைப்பதில் என்பது இவர்கள் எண்ணம்.. இவர்கள் தங்களை MAGA- Make America Great Again என்று அழைத்துக் கொள்வார்கள். இதற்கிடையே இந்த வலதுசாரிகளை ஏமாற்றி, இந்திய மாணவர் ஒருவர் பல லட்சம் சம்பாதித்து இருக்கிறார்.

என்ன நடந்தது
அதாவது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளராகவும், கிறிஸ்துவ மதப்பற்று கொண்டவராகவும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்த 'எமிலி ஹார்ட்' என்ற பிரபலம், உண்மையில் ஒரு ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட உருவம் என்பது அம்பலமாகியுள்ளது. இந்த மாய பிம்பத்தை உருவாக்கி, அமெரிக்க ஆண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பார்த்தது ஒரு 22 வயது இந்திய மருத்துவ மாணவர் என்ற தகவல் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. WIRED இதழ் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதேநேரம் அந்த இந்திய மாணவரின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.
பல கோடி
அமெரிக்காவின் வலதுசாரி சிந்தனை கொண்டவர்களைக் கவரும் வகையில், ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் சாயலில் ஒரு அழகியை அந்த இந்திய மாணவர் உருவாக்கினார். செவிலியராகப் பணிபுரிவது போலவும், துப்பாக்கிகளைச் சுடுவது, மீன் பிடிப்பது எனப் பக்கா அமெரிக்கப் பெண்ணாகவே அவர் எமிலி ஹார்ட்டை வடிவமைத்திருந்தார்.
ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கிய சாம், தனது கணக்கை எப்படிப் பிரபலப்படுத்துவது என்று கூகுளின் 'ஜெமினி' AIயிடமே யோசனை கேட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள தீவிர வலதுசாரி ஆண்களை, அதாவது MAGA ஆதரவாளர்களை டார்கெட் செய்து வீடியோ, போட்டோக்களை வெளியிட்டால் குறுகிய காலத்தில் அதிக பாலோயர்ஸ்களை பெற முடியும் என்று ஏஐ கூறியுள்ளது.
அமெரிக்க வலதுசாரி இளைஞர்கள்
அதன்படியே, "கிறிஸ்துவமே கிங்..", "கருக்கலைப்பு ஒரு கொலை..", "சட்டவிரோதக் குடியேறிகள் வெளியேற்றப்பட வேண்டும்.." என்பது போன்ற அதிரடியான கருத்துகளை எமிலி ஹார்ட் பெயரில் பதிவிட்டுள்ளார். அவரது போஸ்ட்கள் உடனடியாக அமெரிக்காவில் வலதுசாரி அடிப்படைவாதிகள் மத்தியில் டிரெண்டானது. இலவசமாக AI மூலம் உருவாக்கப்பட்ட இந்தப் படங்கள் மற்றும் வீடியோக்கள், மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்றன.
இன்ஸ்டாகிராமில் 10,000க்கும் மேற்பட்ட பாலோயர்ஸ்களை பெற்ற பிறகு, அவர்களைப் பணம் பார்க்கும் மற்ற தளங்களுக்கு வரும்படி கூறியுள்ளார். அங்கு இந்த ஏஐ எமிலியின் பிரத்தியேக போட்டிகளைப் பார்க்க அமெரிக்க ஆண்கள் பணம் செலுத்தினர். ஒரு மருத்துவ மாணவரான அந்த இளைஞர், இதற்கு ஒரு நாளைக்கு வெறும் 30 முதல் 50 நிமிடங்கள் செலவழித்துள்ளார். ஆனால், இதன் மூலம் அவருக்கு மாதம் சில ஆயிரம் டாலர்கள் (சுமார் ரூ.2 லட்சம் முதல் 4 லட்சம் வரை) வருமானம் கிடைத்துள்ளது.
லட்சங்களில் வருமானம்
இந்தியாவில் ஒரு மருத்துவராக இருந்தால் கூட இவ்வளவு சின்ன வேலைக்கு இந்தளவுக்குப் பணம் சம்பாதிக்க முடியாது. ஆன்லைனில் பணம் ஈட்ட இதைவிட எளிதான வழி எதுவுமில்லை என அந்த மாணவரே கூறியிருக்கிறாராம். அதாவது அமெரிக்காவில் உள்ள வலதுசாரி அடிப்படைவாதிகளை வெறும் ஏஐ மூலம் இந்தியாவில் இருந்தபடியே ஏமாற்றி இருக்கிறார் இந்த இளைஞர்!
இந்த ஏமாற்று வேலை குறித்து புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் எமிலி ஹார்ட்டின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது. இப்போது அவரது பேஸ்புக் பக்கமும் நீக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் வளர வளர, நாம் திரையில் பார்க்கும் ஒரு முகம் உண்மையா அல்லது செயற்கையா என்பதைக் கண்டறிவது சவாலாக மாறி வருகிறது. இது பார்க்க வேடிக்கையாக இருந்தாலும் கூட ஆன்லைனில் நாம் பார்க்கும் விஷயங்கள் உண்மை தானா என்ற கேள்வியை இது ஆழமாக ஏற்படுத்துகிறது.
-
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
கொத்தடிமை முறையை ஒழிக்க இந்தியா தவறிவிட்டதாம்.. கூடுதல் வரிக்கு காரணம் சொல்லும் டிரம்ப்! -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications