27 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த இந்திய பெண் கைது.. கிரீன் கார்டு இருந்தும் டிரம்ப் அரசு அடாவடி!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் 27 ஆண்டுகளாக சட்டப்பூர்வமாக வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர், கிரீன் கார்டு வைத்திருந்த போதிலும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வழக்கு ஏற்கனவே முடிந்த போதிலும், அவரை கைது செய்துள்ளனர். மேலும், அவருக்கு தேவையான மருந்துகளை கூட தராமல் அதிகாரிகள் துன்புறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் டிரம்ப் அரசு பொறுப்பேற்ற பிறகு அங்கு வசிக்கும் வெளிநாட்டினர் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் மட்டுமின்றி, சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் மீதும் டிரம்ப் அரசு கடுமையான நடவடிக்கைகளைத் தேவையில்லாமல் எடுத்து வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

US Green card Visa America Donald Trump

அமெரிக்க வாழ் இந்தியர்

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் மாற்று திறனாளி மாணவர்களுக்கு ஆசிரியராக பணியாற்றி வரும் வெங்கடா வசம்செட்டி என்பவரை அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகள் கைது செய்தனர். அவருக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை.. சுமார் 27 ஆண்டுகளாக அவர் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார். அவரது இரு குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் ஆவர். அப்படி இருந்தாலும் அந்த பெண்ணை குடியேற்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

2013ஆம் ஆண்டு முதல் கிரீன் கார்டை கூட வசம்செட்டி வைத்திருக்கிறாராம். அப்படியிருக்கும்போது கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி சார்லோட்டில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் வழக்கமான சோதனைக்காக சென்றபோது அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பின்னர் அவர் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள தடுப்பு மையத்திற்கு வசம்செட்டியை அழைத்து சென்றுள்ளனர்.

என்ன நடந்தது

கடந்த 2022 ஜூலை மாதம் வயதான பெற்றோரை கவனித்து கொள்ள வசம்செட்டி இந்தியா சென்றுள்ளார். இந்தியாவில் இருந்தபோது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்ததால், அவர் சுமார் இரண்டு வாரங்கள் இந்தியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஏற்பட்ட உடல்நல பிரச்சனைகளால் உடனடியாக அமெரிக்கா திரும்ப முடியவில்லை. இதையடுத்து, சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு 2023 பிப்ரவரியில் அவர் அமெரிக்கா திரும்பியுள்ளார்.

கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டாலும், நீண்ட காலம் அமெரிக்காவுக்கு வெளியே இருப்பது அவர்களின் நிரந்தர குடியிருப்பு குறித்து கேள்விகளை எழுப்பும். அதன்படியே இப்போது வசம்செட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், வசம்செட்டி இரு மாதங்கள் மட்டுமே அமெரிக்காவுக்கு வெளியே இருந்ததாகவும் அமெரிக்காவில் தனது வீடு, வேலை மற்றும் குடும்பத்துடன் தொடர்ந்து தொடர்புகளை வைத்திருந்ததாக அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.

குட்டு வைத்த நீதிமன்றம்

இருப்பினும், அமெரிக்கா திரும்பிய பின்னர், வசம்செட்டி மீது நாடுகடத்தல் நடவடிக்கைகள் டிரம்ப் அரசு மேற்கொண்டது. இதற்கிடையில், அவர் தொடர்ந்து குடியேற்ற அலுவலகத்தில் ஆஜராகி வந்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதை கைவிடும் நோக்கம் அவருக்கு இல்லை என்பதற்கான ஆவணங்களை அவர் சமர்ப்பித்துள்ளார்.

அடாவடியாக கைது

இந்த சூழலில் தான் கடந்த மே 19ம் தேதி அவர் மீதான நாடுகடத்தல் வழக்கை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது நாடுகடத்த தேவையான போதிய ஆதாரத்தை அரசு தரப்பு வழங்கவில்லை என கூறி நீதிபதி வழக்கை முடித்து வைத்தனர். இந்த சூழலில் தான் ஆகஸ்ட் 11ம் தேதி அவர் தனது நீதிமன்ற உத்தரவோடு குடியேற்ற அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது தங்களுக்கு நீதிமன்ற உத்தரவு வரவில்லை என சொல்லி அதிகாரிகள் அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது.

வசம்செட்டி எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், வசம்செட்டி கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கைது செய்யப்பட்டபோது அவரிடம் இன்சுலின் மற்றும் மருத்துவப் பொருட்கள் கூட இல்லை என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தடுப்பு மையத்தில் அவருக்கு போதிய மருத்துவ சேவை வழங்கப்படவில்லை என்றும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த திடீர் கைது தொடர்பாக அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அனைத்து விதிகளையும் முறையாக கடைப்பிடித்து சுமார் 27 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த பெண் திடீரென கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+