உலக அரசியல் மொத்தமா மாறுதே.. இந்திய அதிகாரி மீது அமெரிக்கா வழக்குப்பதிவு! மத்திய அரசு பதில் என்ன
வாஷிங்டன்: காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்கை கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாக இந்திய அரசு அதிகாரி ஒருவர் மீது அமெரிக்கா வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியா பதிலளித்துள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் என்பவரைக் கொலை செய்ய இந்திய அரசு அதிகாரி ஒருவர் திட்டமிட்டதாகக் கூறி அமெரிக்க அரசு அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இந்தியா முக்கிய விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது.
இந்தியா விளக்கம்: இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ""சர்வதேச அளவில் நடக்கும் க்ரைம், கடத்தல், துப்பாக்கி விற்பனை மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையேயான வர்த்தகம் ஆகியவற்றை கூர்ந்து கண்காணித்து வருகிறோம். இதன் காரணமாகவே உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது, அவர்கள் தரும் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் என்பவரைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா 52 வயதான இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்க மண்ணில் குர்பத்வந்த் சிங்கை கொல்லும் சதியை அமெரிக்கா முறியடித்ததாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியான நிலையில், இப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யார் இவர்: குர்பத்வந்த் சிங் அமெரிக்கா மற்றும் கனடா என இரு நாடுகளிலும் குடியுரிமை பெற்றவர். மேலும், அவர் சீக்கிஸ் ஃபார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இந்தியாவில் பல தீவிரவாத செயல்களைத் திட்டமிட்டதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், அவரை இந்தியா தேடப்பட்டு வரும் குற்றவாளியாகவும் அறிவித்துள்ளது.

இவர் தான் சமீபத்தில் சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியாவில் செல்ல வேண்டாம் என்றும் ஏர் இந்தியாவில் மோசமான சம்பவம் நடக்கும் என்றும் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவரைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாகத் தான் இந்தியர் ஒருவர் மீது அமெரிக்கா வழக்குப்பதிவு செய்துள்ளது.
அமெரிக்கா சொல்வது என்ன: இது தொடர்பாக அமெரிக்கச் சட்டத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசு அதிகாரி ஒருவர் மற்றவர்களுடன் இணைந்து வேலை செய்துள்ளார். அவர் இந்தியா அல்லது வேறு இடங்களில் இருந்து செயல்பட்டு இருக்கலாம். அவர் அமெரிக்க மண்ணில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் ஒருவர் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், "அந்த இந்திய அரசு அதிகாரி தன்னை 'சீனியர் ஃபீல்ட் ஆபீசர்' என்றும், 'உளவுத்துறை' ஆகிய துறைகளில் பணியாற்றியவர் என்றும் தன்னைப் பற்றியே கூறியிருக்கிறார். அமெரிக்க மண்ணில் அமெரிக்கக் குடிமக்களைப் படுகொலை செய்யும் முயற்சிகளை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். மேலும் அமெரிக்கா அல்லது வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எவரையும் விசாரிக்கவும், தடுக்கவும் மற்றும் வழக்குத் தொடரவும் நாங்கள் ரெடியாக இருக்கிறோம்" என்றார்.
சிக்கியது எப்படி: அமெரிக்காவின் குற்றச்சாட்டின்படி, குப்தா என்ற இந்த நபர் குர்பத்வந்த் சிங்கை கொலை செய்யக் கொலையாளி ஒருவரை அணுகியுள்ளார். இதற்காக ஒரு லட்சம் டாலரைக் கொடுப்பதாகவும் சம்மதித்துள்ளார். இதற்காகக் கடந்த ஜூன் மாதம் 15,000 டாலர் முன்பணமும் கொடுத்துள்ளார்.
இருப்பினும், கொலை செய்ய அவர் கொண்ட அந்த நபர் அமெரிக்க பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர் என்பதும் அவர் பாதுகாப்புத் துறையில் ரகசியமாக பணியாற்றி வந்ததும் அதன் பின்னரே தெரிய வந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் மட்டும் நிரூபிக்கப்பட்டால் குப்தா நிகில் குப்தா 20 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க வேண்டி இருக்கும்.
-
துபாய்க்கு விழுந்த மரண அடி.. மத்திய கிழக்கு மோதலால் பெரிய நஷ்டம்.. இனி பழையபடி வருவதே கஷ்டம் தான் -
விஷயம் ரொம்ப தீவிரமாகுது! டிரம்ப் பேச்சை கேட்டு.. ஈரான் மேட்டரில் நுழையும் பிரிட்டன்! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
மோடிக்கு சிக்கல்.. அமெரிக்காவிலிருந்து வந்த முக்கிய அறிக்கை! முதுகில் குத்தும் டிரம்ப்? -
அமெரிக்காவிற்கு மிகப்பெரிய லாபம்... தங்கம் விலை உயராமல் இருக்க என்ன காரணம் தெரியுமா? -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக!












Click it and Unblock the Notifications