சந்திர கிரகணம் அன்று.. வானில் தெரிந்த பச்சை நிற மர்ம ஒளி! விஞ்ஞானிகள் ஷாக்
வாஷிங்டன்: சந்திர கிரகணம் அன்று நிலவு ரத்த சிவப்பு நிறத்திற்கு மாறியிருந்தது. ஆனால் அதேபோல வானில் மற்றொரு பொருள் பச்சை நிறத்தில் ஒளிர்ந்தது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நமது சூரிய குடும்பத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத ஒரு பொருள் திடீரென பூமிக்கு அருகே வருவதை விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். இந்த பொருளுக்கு 3I ATLAS என்றும் அவர்கள் பெயர் சூட்டினர். இது ஏலியன் ஸ்பேஸ் ஷிப்பாக இருக்கலாம் என்று சிலர் கூறி வந்த நிலையில், இது ஒரு வால்நட்சத்திரம் என்று நாசா உறுதி செய்தது.

வால் நட்சத்திரமா? ஸ்பேஸ் ஷிப்பா?
நாசா உறுதி செய்தாலும், இந்த வால்நட்சத்திரம் வழக்கத்திற்கு மாறானதாக இருப்பதாகவும், அவ்வப்போது வித்தியாசமாக தெரிவதாகவும் சில விஞ்ஞானிகள் எச்சரித்து வந்தனர். இப்படி இருக்கையில்தான் இவர்களின் சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, 3I ATLAS வால்நட்சத்திரம் பச்சை நிறத்தில் ஒளிர்ந்திருக்கிறது. வழக்கமாக வால்நட்சத்திரங்கள் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். பச்சை நிறத்தில் இருக்கிறது எனில், அதில் பேரியம் அல்லது நிக்கல் தனிமங்கள் அதிகமாக இருக்கிறது என அர்த்தம்.
ஆனால் பச்சை நிறம் என்பது தொடக்கம் முதல் தெரியும். அதாவது வால்நட்சத்திரம் கண்டுபிடிக்கப்படும்போதே அது பச்சை நிறத்தில்தான் இருக்கும். 3I ATLAS வால்நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டபோது வெள்ளை நிறத்திலும், சந்திரகிரகணத்தின்போது மட்டும் பச்சை நிறத்திலும் ஒளிர்ந்துள்ளது.
பச்சை நிறத்தில் தெரிந்த வால் நட்சத்திரம்
கடந்த 7ம் தேதி நடந்த சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் பூமி நிழலால் மறைக்கப்பட்டு, ரத்தச் சிவப்பாக மாறியது. இந்த இருண்ட சூழலானது, 3I/ATLAS வால்நட்சத்திரத்தை தெளிவாகப் படம் பிடிக்க விஞ்ஞானிகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. அப்போது போட்டோ எடுத்து பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். காரணம் இந்த வால்நட்சத்திரம் பச்சை நிறத்தில் தெரிந்ததுதான்.
பச்சை நிறத்திற்கு காரணம் என்ன?
இந்த பச்சை நிற ஒளியின் காரணம் குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளன. சூரிய ஒளியால் தூண்டப்படும் போது பச்சை நிறத்தில் ஒளிரக்கூடிய டையட்டோமிக் கார்பன் (C2) மூலக்கூறுகளின் இருப்புதான் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம், அரிசோனாவில் உள்ள கிட் பீக் ஆய்வகத்தில் வானியலாளர்கள் நடத்திய ஆய்வில், 3I/ATLAS வால்நட்சத்திரத்தில் டையட்டோமிக் கார்பன் மூலக்கூறுகள் மிகக் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அப்படியெனில் பச்சை நிற ஒளிக்கு காரணம் என்ன?
மர்மமான ஒளி
ஒரு மாதத்திற்கு முன்பு இல்லாத இந்த பச்சை நிறம் இப்போது எப்படி தோன்றியது என்ற கேள்வி எழுந்துள்ளது. வால்நட்சத்திரங்கள் என்பத பெரிய சைஸ் பனிகட்டிகள். எனவே சூரிய வெப்பத்தால் இந்த பனிக்கட்டி உருகி, அதிலிருந்து டையட்டோமிக் கார்பன் மூலக்கூறுகள் வெளிப்பட்டிருக்கலாம். அல்லது, சூரிய ஒளியால் ஒளிரக்கூடிய வேறு சில மூலக்கூறுகளால் இந்த பச்சை நிற ஒளி உருவாகியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
3I/ATLAS என்பது ஒரு வால்நட்சத்திரம். வால்நட்சத்திரங்கள் நமக்கே தெரியாத பல வேதிப்பொருட்களை இது கொண்டிருக்கலாம். எனவே பச்சை நிறத்தில் தெரிந்திருக்கலாம். ஏனெனில் அவை பூமியிலிருந்து உருவாவது கிடையாது. சூரிய குடும்பத்தில் எங்கோ ஒரு மூலையில் உருவாகி, சூரியனை நோக்கி வருகிறது. அதிலும் இந்த 3I/ATLAS வால்நட்சத்திரம், சூரியக்குடும்பத்திலிருந்த வந்தது கிடையாது.
எப்படி பார்த்தாலும் இந்த வால்மீனின் பல அம்சங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளன. சூரிய குடும்பத்தை கடந்து செல்லும் இந்த வால்மீனை வானியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம், பிரபஞ்சத்தைப் பற்றிய புதிய தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாருக்கு தெரியும் ஒருவேளை இது உண்மையாகவே ஸ்பேஸ்ஷிப்பாக கூட இருக்கலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications