டர்ட்டி பாம்மை இறக்கும் ஈரான்.. அமெரிக்கா தலைநகரிலேயே தாக்குதல் நடத்த ஈரான் சதி? உளவுத்துறை வார்னிங்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் டர்ட்டி பாம் அல்லது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி, டிரம்ப் அரசில் உள்ள மூத்த அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பேசுபொருளாகியுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே நேரடி தாக்குதல்கள் இல்லை என்றாலும் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான ஒரு சூழலே தொடர்ந்து நிலவி வருகிறது. இரு நாடுகளுமே மிக பெரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் பதற்றத்தை அதிகரிக்கவே செய்கிறது.

US Iran

பகீர் தகவல்

இதற்கிடையே அமெரிக்க தலைநகர் வாஷிங்டனிலேயே பெரிய தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டர்ட்டி பாம் அல்லது ரசாயன ஆயுதங்களை ஈரான் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் டிரம்ப் அரசில் உள்ள மூத்த அதிகாரிகளை குறிவைத்து இந்த தாக்குதலை ஈரான் நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க உளவு துறையே எச்சரித்துள்ளது.

ஒரு பக்கம் இந்த தாக்குதல் திட்டம் தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை கூடுதல் தகவல்களை சேகரித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் அமெரிக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள். வெடி குண்டு தயாரிக்க தேவையான பொருட்கள் அமெரிக்காவுக்குள் ஏற்கெனவே கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. அணுசக்தி தொடர்பான பொருட்கள் அல்லது கெமிக்கல்களை ஈரான் எடுத்து வரும் என்று சில அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அனைத்து அச்சுறுத்தல்களையும் அமெரிக்கா கண்காணித்து வருகிறது என்றும் இருப்பினும் தற்போது அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் லாரன் பிஸ் தெரிவித்துள்ளார்.

டர்ட்டி பாம் என்றால் என்ன?

டர்ட்டி பாம் என்பது அணு ஆயுதம் அல்ல. இதில் சாதாரண வெடிபொருட்களுடன் கதிரியக்க பொருட்கள் இணைக்கப்பட்டிருக்கும். வெடிப்பு நிகழும்போது கதிரியக்க பொருட்கள் சுற்றுப்புற பகுதிகளில் பரவுவதால் மக்கள் பாதிக்கப்படலாம். அணுக்கரு பிளவு மூலம் பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களுடன் ஒப்பிடும்போது, இதன் அழிவுத்திறன் முற்றிலும் வேறுபட்டது.

இந்த வகை வெடிகுண்டு அதிகபட்சமே சில கிமீ தொலைவுக்கு மட்டுமே கதிரியக்கப் பொருட்களை பரப்பக்கூடும். இருப்பினும், கதிர்வீச்சை காட்டிலும் வெடிப்பினால் ஏற்படும் பாதிப்புகளே அதிக உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கும். இருப்பினும், சாதாரண வெடிகுண்டை விட இது தயாரிப்பதும் கடினம். தேவையான கதிரியக்க பொருட்கள் ஈஸியாக கிடைக்காது. இருப்பினும், இது மக்களிடையே மிக பெரிய அச்சத்தை ஏற்படுத்தும்.

கெமிக்கல் தாக்குதல்

இதற்கிடையே மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவம் மீதும் ஈரான் கெமிக்கல் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் தனியாக எச்சரிக்கை வந்துள்ளது. அது தொடர்பாகவும் அமெரிக்கா கண்காணித்து வருகிறது. ஒருவேலை அப்படி தாக்குதல் நடந்தால் மத்திய கிழக்கில் உள்ளது வீரர்களிடம் அதை சமாளிக்க போதிய பாதுகாப்பு உபகரணங்களும் பயிற்சியும் உள்ளதா என்ற கவலையும் அதிகாரிகளிடையே எழுந்துள்ளது.

ஈரான் தூதரகமும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதை ஈரான் சட்டவிரோதமானதாகக் கருதுவதாகவும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் தெரிவித்துள்ளது.

தொடரும் பதற்றம்

அமெரிக்கா ஈரான் இடையே நேரடி தாக்குதல்கள் இல்லை என்றாலும் போர் பதற்றம் நீடிக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார தடைகள், கடல்வழி முற்றுகையை முடிவுக்கு கொண்டுவருவது, ஹார்முஸை மீண்டும் திறப்பது உள்ளிட்ட விவகாரங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+