டேஞ்சர்.. சிவப்புக் கொடியை ஏற்றிய ஈரான்.. இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
தெஹ்ரான்: ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் மத முக்கியத்துவம் வாய்ந்த கும் நகரில் உள்ள ஜம்கரான் மசூதியின் கோபுரத்தில் சிவப்பு நிற 'பழிவாங்கும் கொடி' ஏற்றப்பட்டது. மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்கும் நிலையில், இக்கொடி கமேனி ஆதரவாளர்களின் கோபத்தையும் பழிவாங்கும் உணர்வையும் காட்டுவதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன.
சிவப்பு நிறக் கொடி என்பது நீதியையும் பழிவாங்கலையும் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது. தெஹ்ரானில் நடந்த அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு வான் வழித் தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனை ஈரானும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரான் முழுக்க போராட்டம்
கமேனி படுகொலை செய்யப்பட்டதையடுத்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. கமேனி கொல்லப்பட்டது இஸ்லாமியர்களுக்கு எதிரான போர் என்று ஈரான் அதிபரும் கூறியுள்ளார்.
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் மிக உயர்ந்த அரசியல் தலைவரும், உலகளவில் ஷியா மதத்தின் முக்கிய தலைவருமான ஒருவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பது என்பது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக, குறிப்பாக ஷியா பிரிவினருக்கு எதிரான, வெளிப்படையான போர் அறிவிப்பாக கருதப்படுகிறது" என்று கூறினார்.
சிவப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது
இதையடுத்து, அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியுள்ள ஈரான், வளைகுடாவில் அமெரிக்காவின் நேச நாடுகள் மீது இதுவரை இல்லாத அளவிற்கு தாக்குதலை முன்னெடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பும் ஈரானை கடுமையாக எச்சரித்துள்ளார்.
கமேனி கொலைக்கு பழிவாங்குவது எங்கள் கடமை என ஈரான் அதிபர் ஆவேசமாக கூறிய நிலையில், தற்போது ஈரானில் இந்த சிவப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்ப்படு வந்த நிலையில் அவர் கொல்லப்பட்டு உள்ளார். அவரை கொல்ல முடிவு செய்த அமெரிக்கா, இஸ்ரேலின் உதவியுடன் அதை செய்து முடித்து உள்ளது.
ஈரானிய ஆக்டோபஸின் தலைவன்
கமெனியின் இருப்பிடம், அன்றாட நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப் பட்டுள்ளது. இதற்கு இஸ்ரேல் உளவுத்துறை தகவல்களை வழங்கியது. இதன்மூலம் அயதுல்லா அலி கமெனி தனது அலு வலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று இருப்பது தெரியவந்ததும் அந்த கட்டிடம் மீது தாக்கு தல் நடத்தப்பட்டு அவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கமேனி மட்டுமின்றி அவரது மகள், மருமகன் ஆகியோரும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) வெளியிட்டுள்ள அறிக்கையில், "இஸ்ரேல் நாட்டை அழிக்கும் திட்டத்தை வகுத்தவர் கமேனி. மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேல் எல்லைகள் வரை தன் கரங்களை விரித்த 'ஈரானிய ஆக்டோபஸின் தலைவன்' என்றும் அவர் அறியப்பட்டார்" என்று குறிப்பிட்டது.
மூன்று பேர் கொண்ட தற்காலிக தலைமை
கமேனியின் மரணத்திற்குப் பிறகு, ஈரான் ஒரு புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நாட்டை நிர்வகிக்க மூன்று பேர் கொண்ட தற்காலிக தலைமை கவுன்சிலை அமைத்துள்ளது. 66 வயது மதகுரு ஒருவரும் இக்கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அலிரேசா அராஃபி அதன் தற்காலிக தலைமை கவுன்சிலின் நீதி உறுப்பினராக நியமிக்கப்பட்டதாக அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
-
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்.. விமானியை உயிருடன் பிடித்து கொடுப்பவருக்கு பரிசு அறிவிப்பு -
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்.. விமானிகளின் நிலை என்ன? ஷாக் தகவல்! -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
அமெரிக்காவுக்கு அடிமேல் அடி! சக்தி வாய்ந்த போர் விமானத்திற்கு நேர்ந்த கதி.. கெத்து காட்டும் ஈரான்! -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்?












Click it and Unblock the Notifications