ஆண்மை குறைபாடு + ஓரின சேர்க்கையாளர்.. ஈரான் உச்ச தலைவரின் பின்னணி! டிரம்பிடம் உளவுத்துறை ரிப்போர்ட்
டெஹ்ரான்: ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனிக்கு ஆண்மை குறைபாடு இருந்தது. மேலும் அவர் ஓரினச்சேர்க்கையாளராக இருக்கலாம் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பிடம் உளவுத்துறை அறிக்கை வழங்கி உள்ளது. இதனை கேட்டவுடன் டொனால்ட் டிரம்ப் சத்தமாக சிரித்துள்ள நிலையில் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த மாதம் 28 ம் தேதி போரை தொடங்கியது. முதல் நாளிலேயே ஈரான் உச்ச தலைவர் அயல்லா அலி கமேனி, அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் மூத்த அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

அயதுல்லா அலி கமேனி இறந்ததால் அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 28 ம் தேதி நடந்த தாக்குதலில் மொஜ்தபா கமேனி காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு ரகசிய இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மொஜ்தபா கமேனியின் தேர்வை டிரம்ப் விரும்பவில்லை. அதேபோல் இஸ்ரேலும் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளது. இருப்பினும் மொஜ்தபா கமேனி எங்கிருக்கிறார்? என்பது பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை. இதனால் மொஜ்தபா கமேனி பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணியில் அமெரிக்க உளவுத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மொஜ்தபா கமேனி ஓரினச்சேர்க்கையாளராம்
இந்நிலையில் தான், மொஜ்தபா கமேனி ஓரின சேர்க்கையாளர் என்று அமெரிக்க உளவுத்துறை டொனால்ட் டிரம்பிடம் அறிக்கை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக 'நியூயார்க் போஸ்ட்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ''கடந்த வாரம் அமெரிக்காவில் உளவுத்துறையின் ரகசிய கூட்டம் நடந்தது. அதில் உளவுத்துறை அதிகாரிகள் சேகரித்த புலனாய்வு தகவல்கள் அதிபர் டொனால்ட் டிரம்பிடம் வழங்கப்பட்டது.
அதில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல்வேறு விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக மொஜ்தபா கமேனி ஓரினச்சேர்க்கையாளராக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொஜ்தபா கமேனி தனது குழந்தை பருவ ஆசிரியராக இருந்த ஒருவருடன் நீண்டகாலமாக உறவில் இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், அந்த நபர் கமேனி குடும்பத்தில் இதற்கு முன்பு பணியாற்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இருவருக்குமான இந்த உறவு பல ஆண்டுகளாக நீடித்துள்ளது.
சத்தமாக சிரித்த டொனால்ட் டிரம்ப்
கடந்த 2024ம் ஆண்டில் ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அப்போதே மொஜ்தபாவின் உறவு குறித்த தகவல்கள் பரவ தொடங்கின. இந்த உறவு தொடர்பாக புகைப்பட ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் இந்த தகவல் நம்பகமானது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்டு டொனால்ட் டிரம்ப் கேட்டதும் சத்தமாக சிரித்துள்ளார். இதை கேட்டு அங்கிருந்த மற்றவர்களும் சிரித்துள்ளனர்'' என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த செய்தி 2 உளவுத்துறை அதிகாரிகள், அதிபர் டொனால்ட் டிரம்பின் வெள்ளை மாளிகைக்கு நெருக்கமான 2 பேர் கூறியுள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நம்ப முடியாத தகவலாக உள்ளது. ஆனால் நம்பத்தகுந்ததாக உள்ளது. ஏனென்றால் இந்த தகவல் ஈரான் குறித்த முக்கிய தகவல்களை வழங்கும் உளவு பணி செய்பவரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
ஆண்மை குறைவுக்கு சிகிச்சை
அதேபோல் மொஜ்தபா கமேனி தாமதமாக திருமணம் செய்து கொண்டார். அவர் தனது 30வது வயதில் தான் திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன்பாக பலமுறை லண்டனுக்கு சென்றார். ஆண்மை குறைபாட்டுக்கு அவர் சிகிச்சை பெறவே அவர் சென்று வந்துள்ளார். மருத்துவ சிகிச்சை பெற்று அவரது குறைபாடு சரிசெய்யப்பட்டுள்ளது. மொஜ்தபா கமேனி விரைவில் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. 4 வது முறை சிகிச்சை பெற்ற பிறகு தான் அவரது மனைவி கர்ப்பமடைந்தார்.
ஈரானை எடுத்து கொண்டால் இஸ்லாமிய சட்டங்கள் முறையாக பின்பற்றப்படும். அங்கு ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது. இதில் ஈடுபடும் நபர்களுக்கு சட்டப்படி கடும் தண்டனை விதிக்கப்படும். இப்படியான சூழலில் மெஜ்தபா கமேனியே ஓரினச்சேர்க்கையாளர் என்ற தகவலை அமெரிக்க உளவுத்துறை கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மொஜ்தபா கமேனியின் குடும்ப பின்னணி
மொஜ்தபா கமேனியின் மனைவி பெயர் சஹ்ரா. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருந்தனர். இதில் இளைய மகன் முகமது பக்கர் கமேனி மற்றும் மனைவி சஹ்ரா ஆகியோர் இறந்துள்ளனர். மொஜ்தபா கமேனி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இன்னொரு மகன், மகள் ஆகியோர் உயிருடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications