டிரம்ப்.. பாலகிருஷ்ணா.. நம்ம முதல்வர் விஜய்.. இந்த கனெக்ஷனை பாருங்க.. நக்கலடித்த ஈரான்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரானை அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஐநா பொதுச்சபையில் எச்சரிக்கை விடுத்த நிலையில், அவரை கிண்டல் செய்யும் விதமாக ஈரான் ஒரு போஸ்ட்டை பதிவிட்டுள்ளது. தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் படத்தின் காட்சியை பதிவிட்டு டிரம்ப்பை நக்கலடித்திருந்தனர். இதில் விஜய் கனெக்ஷனும் இருக்கிறது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பல மாதங்களாக மோதல் தொடர்வது அனைவருக்கும் தெரியும். இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி தாக்குதல்கள் குறைந்துவிட்ட போதிலும், மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக டிரம்ப் தொடர்ந்து ஈரானை மிரட்டும் வகையிலேயே பேசி வருகிறார். அதற்கு ஈரான் பதிலடி கொடுப்பதும் தொடர்கிறது.

Iran US Jana Nayagan

நக்கல்

அப்படி தான் சமீபத்தில் ஐநாவில் நடந்த கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஈரானுக்கு இப்போது இரண்டு ஆப்ஷன்கள் இருப்பதாகக் கூறினார். ஒன்று பேச்சுவார்த்தை நடத்துவது; இல்லையெனில் ஈரானை அமெரிக்கா மொத்தமாக அழித்துவிடும் என குறிப்பிட்டார். டிரம்பின் இந்த பேச்சு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இருப்பினும், வழக்கம் போலவே டிரம்பின் இந்த பேச்சை ஈரான் நக்கலடிக்க ஆரம்பித்தது. ஜிம்பாப்வேயில் உள்ள ஈரான் தூதரகம் டிரம்பை கிண்டல் செய்யும் வகையில் ஒரு போஸ்ட்டை பகிர்ந்தது. இது தொடர்பாக அவர், "டிரம்ப் ஈரானை அழிப்பது பற்றி பேசுகிறார். ஆனால் ஈரான் பாதுகாப்பற்ற நாடு இல்லை என்பது அவருக்குத் தெரியும்" என குறிப்பிட்டுள்ளது. மேலும், டிரம்ப் ஹாலிவுட்டுக்கு பதிலாக சமீபகாலமாக பாலிவுட் படங்களை பார்த்து வருவதாக தெரிவித்தது. அதாவது பாலிவுட் படத்தில் வருவது போல பஞ்ச் டயலாக் பேசுகிறார் என்பதையே குறிப்பிட்டது.

பாலகிருஷ்ணா

அதை குறிப்பிடும் வகையில் பாலகிருஷ்ணா படத்தின் அதிரடி காட்சியையும் பகிர்ந்தது. இந்த போஸ்ட் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. சில நெட்டிசன்கள் அந்த காட்சி பாலிவுட் திரைப்படம் அல்ல; தெலுங்கில் வெளியான 'பகவந்த் கேசரி' திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் குறிப்பிட தவறவில்லை.

அனில் ரவிபுடி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா, காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோர் நடித்த 'பகவந்த் கேசரி' திரைப்படத்தின் காட்சியையே ஈரான் தூதரகம் பாலிவுட் என குறிப்பிட்டிருந்தது.

விஜய்

பாலகிருஷ்ணா கேரியரிலேயே மிக முக்கியமான படமாக இந்த பகவந்த் கேசரி அமைந்திருந்தது. பாலகிருஷ்ணா மட்டுமின்றி நமது முதல்வர் விஜய்யின் கேரியரிலும் இது முக்கியமான படம். ஏனென்றால் இந்த படத்தை தான் தமிழில் ஜனநாயகன் என ரீமேக் செய்தனர். விஜய் இப்போது தமிழக முதல்வராகிவிட்ட நிலையில், அவர் நடிப்பில் வெளியான கடைசி படம் இதுவாகும்.

ஜனநாயகன்

இந்த படம் முதலில் தேர்தலுக்கு முன்பு கடந்த ஜனவரி மாதமே வெளியாக இருந்தது. இருப்பினும், சென்சார் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் படத்தை திட்டமிட்டபடி வெளியாகவில்லை. ரிவைசிங் கமிட்டி, நீதிமன்றம் என படம் பல சிக்கல்களை எதிர்கொண்டது. தேர்தல் முடிந்து விஜய் ஆட்சிக்கு வரும் வரை கூட படம் ரிலீஸ் ஆகவில்லை. நீண்ட தாமதத்திற்கு பிறகே படத்திற்கு சென்சார் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜனநாயகன் படம் கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+