வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத மிகக் கடுமையான எச்சரிக்கையை பிறப்பித்திருந்த சூழலில், இப்போது மிக பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. போரை அடுத்த இரு வாரத்திற்கு நிறுத்த அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளன.
Apr 08, 2026, 5:37 pm IST
போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும் கூட ஈரானின் லவான் தீவில் உள்ள எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகத்தை தாக்கும் வகையில் ஈரான் ட்ரோன், ஏவுகணைகளை ஏவி உள்ளது.
Apr 08, 2026, 4:38 pm IST
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கூட ஈரானில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தை தாக்கும் வகையில் ஏவுகணை, டிரோன்கள் பறந்து வருவதாகவும், அது வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்கப்பட்டு உள்ளதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இதனால் பதற்றம் நிலவி வருகிறது.
Apr 08, 2026, 3:19 pm IST
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இரண்டு வார கால போர்நிறுத்தத்தை இந்திய வெளியுறவு அமைச்சகம் வரவேற்றுள்ளது. மேற்கு ஆசியாவில் அமைதிக்கு இது வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்த வெளியுறவு துறை, மோதலை முடிவுக்குக் கொண்டுவரப் பதற்றத்தைத் தணித்தல், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் ஆகியவை அவசியம் என வலியுறுத்தியது.
Apr 08, 2026, 2:24 pm IST
சீனாவின் அறிவுறுத்தல் காரணமாகவே ஈரான் போர் நிறுத்தம் செய்யச் சம்மதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிராந்தியத்தில் அமைதி திரும்ப வேண்டும் எனச் சீனாவின் கேட்டுக் கொண்டதன் பெயரிலேயே தற்காலிக போர் நிறுத்தம் செய்ய ஈரான் சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Apr 08, 2026, 1:32 pm IST
போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களிடம் இருந்து சுங்க கட்டணத்தை வசூலிக்க ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Apr 08, 2026, 12:28 pm IST
சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை. போர் நிறுத்த அறிவிப்பு வந்தது முதலே சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. நண்பகல் 12.20 மணியளவில் தங்கம் விலை சர்வதேச மார்கெட்டில் 120 டாலர் உயர்ந்து, 4,822 டாலருக்கு வர்த்தகமாகிறது.
Apr 08, 2026, 11:17 am IST
போர் நிறுத்தம் தொடர்பாக ஆங்கிலம் மற்றும் பார்சி என இரு மொழிகளில் ஈரான் அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில் ஃபார்சி மொழி செய்திக்குறிப்பில் மட்டுமே யுரேனியம் செறிவூட்டல் குறித்த கண்டிஷன் இருந்தது. ஆங்கிலப் பதிப்பில் இது இல்லை.. இந்த முரண்பாடு விவாதத்தை கிளப்பியுள்ளது.
Apr 08, 2026, 10:09 am IST
ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு வந்தவுடன் தங்கம் விலை இன்று தாறுமாறாக உயர்ந்தது. சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.2720 உயர்ந்து, ரூ.1,13,600க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.340 உயர்ந்து, ரூ.14,200க்கு விற்பனை செய்யப்படுகிறது
Apr 08, 2026, 9:36 am IST
இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் உயர்வு. இந்திய பங்குச்சந்தைகளும் காலை முதலே உயர்வு
Apr 08, 2026, 9:01 am IST
போர் நிறுத்த அறிவிப்பு வந்த பிறகும் தாக்குதல் தொடர்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல், ஈரான், ஐக்கிய அமீரகம், கத்தார், பஹ்ரைன் நாடுகளில் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்வதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
Apr 08, 2026, 8:44 am IST
போர் நிறுத்தம் அமலில் இருக்கும் அடுத்த 14 நாட்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது
Apr 08, 2026, 8:41 am IST
போர் நிறுத்தம் அமலில் இருக்கும் அடுத்த 14 நாட்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது
Apr 08, 2026, 8:10 am IST
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளை வீழ்த்திவிட்டதாகச் சொல்லி, ஈரான் முழுக்க அந்நாட்டு மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
BREAKING: IRAN CELEBRATES!
Iranians across the country have taken to the streets to celebrate the DEFEAT of the US and Israel pic.twitter.com/UXxuxtBDKI
ஈரான் போர் முடிவுக்கு வந்துள்ள சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்தது. போர் நிறுத்த அறிவிப்பு வெளியான உடனேயே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 15% வரை குறைந்துள்ளது.
Apr 08, 2026, 7:29 am IST
ஈரான் - அமெரிக்கா இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகள் வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்கவுள்ளது.
Apr 08, 2026, 7:05 am IST
சீனாவின் தலையீட்டை தொடர்ந்தே ஈரான் தற்காலிக போர் நிறுத்தம் செய்யச் சம்மதித்ததாக நியூயார்க் டைம்ஸ் தகவல். பதற்றத்தைத் தணிக்கத் தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்கும்படி சீனா கோரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Apr 08, 2026, 6:45 am IST
ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதாக ஈரான் அறிவிப்பு
போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுகிறது
ஹார்முஸ் ஜலசந்தி திறப்பால் கச்சா எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
Apr 08, 2026, 6:41 am IST
ஈரான் மீதான தாக்குதல்களை அடுத்த இரு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் மூலம் ஈரான் தனது முன்மொழிவை அனுப்பியுள்ளதாகவும் இரு வாரங்களில் நிரந்தர ஒப்பந்தம் போட முயல்வோம் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
Apr 08, 2026, 1:53 am IST
பாதுகாப்புக்காக சைரன் ஒலிக்கப்படுகிறது. சைரன் சத்தம் கேட்டால் உடனே, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் - துபாய் காவல்துறை
Apr 08, 2026, 1:41 am IST
தற்போது வளைகுடாப் பகுதியில் நிலைமை என்ன?
பஹ்ரைனில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துள்ளன.
தங்கள் நாட்டை இலக்காகக் கொண்ட ஏவுகணைத் தாக்குதலை வெற்றிகரமாக இடைமறித்ததாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களைத் தங்கள் வான் பாதுகாப்புப் படைகள் எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
"முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக", நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு குவைத் தனது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
Apr 08, 2026, 1:30 am IST
ஈரானுடனான ஒப்பந்தத்தை இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கும் பாகிஸ்தானின் முன்மொழிவு குறித்து டிரம்ப் அறிந்துள்ளார் என்றும் பதில் விரைவில் வரும் எனவும், வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லெவிட் கூறியிருக்கிறார்.
Apr 08, 2026, 1:25 am IST
பாகிஸ்தானின் இரண்டு வார போர்நிறுத்த முன்மொழிவை ஈரான் பரிசீலித்து வருகிறது என பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த ஈரான் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
Apr 08, 2026, 1:18 am IST
பஹ்ரைனில் ஒலித்த எச்சரிக்கைச் சைரன்கள்
பஹ்ரைனில் எச்சரிக்கைச் சைரன்கள் ஒலித்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடிமக்கள் அமைதி காத்து, அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என்று அமைச்சகம் 'X' தளத்தில் தெரிவித்துள்ளது.
Apr 08, 2026, 1:16 am IST
ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கான காலக்கெடுவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Apr 08, 2026, 1:09 am IST
அமெரிக்கா தனது உள்கட்டமைப்புகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அரம்கோவின் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் வார்னிங்.
Apr 08, 2026, 1:07 am IST
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பீப்பாய்க்கு 144 டாலர் என்கிற விலையை எட்டியது
Apr 08, 2026, 1:06 am IST
கத்தாரில் உள்ள தங்கள் குடிமக்களை, அடுத்த சில நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு ஸ்பெயின் அறிவுறுத்தியுள்ளது.
Apr 08, 2026, 1:03 am IST
ஈரானிய நாகரிகத்தை அழித்துவிடுவோம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த மிரட்டல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று போப் தெரிவித்துள்ளார்.
Apr 08, 2026, 12:45 am IST
ஈரானின் நாகரிகத்தையே அழிப்பேன் என்று டிரம்ப் பேசியதற்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு. நாகரிகத்தின் அழிவைக் கருத்தில் கொள்ளும் எந்தவொரு செயலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அணு ஆயுதங்களின் பயன்பாட்டை எந்தச் சூழ்நிலையிலும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Apr 08, 2026, 12:36 am IST
அதிபர் ட்ரம்ப், "ஈரானின் நாகரிகத்தையே அழிப்பேன்" என்று விடுத்த மிரட்டலுக்கு எதிராக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
READ MORE
6:42 PM, 7 Apr
ஈரான் மீது சரமாரியான தாக்குதல்
ஷிராஸில் உள்ள ஒரு பெட்ரோ கெமிக்கல் தளம் உட்பட, ஈரான் முழுவதும் பரவலான தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. காஷானில் உள்ள யஹ்யா அபாத் ரயில்வே பாலத்தின் மீதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.
6:43 PM, 7 Apr
இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரின் (IRGC) ஆயுதப் போக்குவரத்தைத் தடுக்கும் நோக்கில், ஈரான் முழுவதும் சுமார் 10 முக்கிய ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் மீது இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக 'தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' தெரிவித்திருக்கிறது.
6:49 PM, 7 Apr
ஈரான் மீது இன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களில் 35 பேர் உயிரிழப்பு
6:51 PM, 7 Apr
ஈரான் மீது இன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களில் 35 பேர் உயிரிழப்பு
7:18 PM, 7 Apr
ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, வடக்கு மற்றும் தெற்கு இஸ்ரேலின் சில பகுதிகளில் அபாய ஒலி எழுப்பப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
7:47 PM, 7 Apr
இஸ்ரேல்-ஈரான் போர்: ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்களை 48 மணி நேரத்திற்கு வீட்டிலேயே இருக்குமாறு இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு வீட்டிலேயே இருக்குமாறு தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
8:41 PM, 7 Apr
அமெரிக்காவுடனான நேரடித் தூதரக உறவுகளை ஈரான் துண்டித்தது - வால் ஸ்ட்ரீட் ஜர்னல்!
நேரடித் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும், போர்நிறுத்த மத்தியஸ்தர்கள் மூலமான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்கின்றன என்றும், இதன் மூலம் டிரம்பின் இரவு 8 மணி காலக்கெடுவிற்கு முன்னதாகப் பேச்சுவார்த்தைகள் நீடிக்கிறது என்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளது.
9:35 PM, 7 Apr
கடத்தப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் விடுவிப்பு
அமெரிக்கப் பத்திரிகையாளர் ஷெல்லி கிட்டில்சனை விடுவிக்கப்போவதாக 'கதாயிப் ஹிஸ்புல்லா' அறிவிப்பு. கடத்தப்பட்ட அமெரிக்கப் பத்திரிகையாளர் ஷெல்லி கிட்டில்சனை விடுவிக்கப்போவதாக ஈராக்கைச் சேர்ந்த 'கதாயிப் ஹிஸ்புல்லா' அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், விடுவிக்கப்பட்ட உடனேயே அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
9:40 PM, 7 Apr
ஈரான் மீது தாக்குல் உறுதியாக நடத்தப்படும்
அதிகாலை 5.30 மணிக்கு ஈரான் மீது நிச்சயம் தாக்குதல் நடக்கும் என டிரம்ப் கூறியுள்ளார். ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்பட்டால், காலக்கெடு மாறக்கூடும். தற்போதைய நிலையில், எங்களிடம் உள்ள திட்டங்களின்படி படைகள் முன்னேறி வருகின்றன என்று டிரம்ப் கூறியுள்ளார்.
10:16 PM, 7 Apr
டிரம்பை பதவி நீக்கம் செய்க
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் கூறியது சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் இருக்கிறது என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கன்னா விமர்சனம். டிரம்பை நீக்க 25-வது சட்டத்திருத்தத்தைப் பயன்படுத்தவும் வலியுறுத்தல்.
10:43 PM, 7 Apr
நிலைமை எப்படி இருக்கிறது?
ஈரான் விஷயத்தில், நிலைமை எப்படி இருக்கிறது என்பது டிரம்புக்கு மட்டுமே தெரியும். ஒருவேளை அமெரிக்காவின் டிமாண்டை ஏற்க மறுத்தால், எப்படி பதிலடி கொடுக்கப்படும் என்பதும், டிரம்புக்கு மட்டுமே தெரியும் என்று வெள்ளை மாளிகை விளக்கம்.
11:03 PM, 7 Apr
டூம்ஸ்டே விமானம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அவசரகாலக் கட்டுப்பாட்டு விமானமான "டூம்ஸ்டே பிளேன்", நெப்ராஸ்காவில் உள்ள அமெரிக்காவின் அணு ஆயுதக் கட்டுப்பாட்டு மையத்திற்கு மேலே வட்டமடித்த செய்தி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11:34 PM, 7 Apr
இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். ஈரானிலிருந்து இஸ்ரேலியப் பகுதியை நோக்கி மேலும் பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணைகளை இடைமறித்துத் தடுப்பதற்காக, இஸ்ரேலின் தற்காப்பு அமைப்புகள் இயங்கி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருக்கிறது.
12:02 AM, 8 Apr
இன்றிரவு யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். குவைத் மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை. இரவு 12 மணி தொடங்கி அதிகாலை 6 மணி வரை யாரும் வெளியே வர வேண்டாம் - குவைத் அரசு
12:36 AM, 8 Apr
அதிபர் ட்ரம்ப், "ஈரானின் நாகரிகத்தையே அழிப்பேன்" என்று விடுத்த மிரட்டலுக்கு எதிராக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
12:45 AM, 8 Apr
ஈரானின் நாகரிகத்தையே அழிப்பேன் என்று டிரம்ப் பேசியதற்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு. நாகரிகத்தின் அழிவைக் கருத்தில் கொள்ளும் எந்தவொரு செயலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அணு ஆயுதங்களின் பயன்பாட்டை எந்தச் சூழ்நிலையிலும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
1:03 AM, 8 Apr
ஈரானிய நாகரிகத்தை அழித்துவிடுவோம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த மிரட்டல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று போப் தெரிவித்துள்ளார்.
1:06 AM, 8 Apr
கத்தாரில் உள்ள தங்கள் குடிமக்களை, அடுத்த சில நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு ஸ்பெயின் அறிவுறுத்தியுள்ளது.
1:07 AM, 8 Apr
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பீப்பாய்க்கு 144 டாலர் என்கிற விலையை எட்டியது
1:09 AM, 8 Apr
அமெரிக்கா தனது உள்கட்டமைப்புகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அரம்கோவின் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் வார்னிங்.
1:16 AM, 8 Apr
ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கான காலக்கெடுவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
1:18 AM, 8 Apr
பஹ்ரைனில் ஒலித்த எச்சரிக்கைச் சைரன்கள்
பஹ்ரைனில் எச்சரிக்கைச் சைரன்கள் ஒலித்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடிமக்கள் அமைதி காத்து, அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என்று அமைச்சகம் 'X' தளத்தில் தெரிவித்துள்ளது.
1:25 AM, 8 Apr
பாகிஸ்தானின் இரண்டு வார போர்நிறுத்த முன்மொழிவை ஈரான் பரிசீலித்து வருகிறது என பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த ஈரான் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
1:30 AM, 8 Apr
ஈரானுடனான ஒப்பந்தத்தை இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கும் பாகிஸ்தானின் முன்மொழிவு குறித்து டிரம்ப் அறிந்துள்ளார் என்றும் பதில் விரைவில் வரும் எனவும், வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லெவிட் கூறியிருக்கிறார்.
1:41 AM, 8 Apr
தற்போது வளைகுடாப் பகுதியில் நிலைமை என்ன?
பஹ்ரைனில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துள்ளன.
தங்கள் நாட்டை இலக்காகக் கொண்ட ஏவுகணைத் தாக்குதலை வெற்றிகரமாக இடைமறித்ததாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களைத் தங்கள் வான் பாதுகாப்புப் படைகள் எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
"முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக", நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு குவைத் தனது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
1:53 AM, 8 Apr
பாதுகாப்புக்காக சைரன் ஒலிக்கப்படுகிறது. சைரன் சத்தம் கேட்டால் உடனே, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் - துபாய் காவல்துறை
6:41 AM, 8 Apr
ஈரான் மீதான தாக்குதல்களை அடுத்த இரு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் மூலம் ஈரான் தனது முன்மொழிவை அனுப்பியுள்ளதாகவும் இரு வாரங்களில் நிரந்தர ஒப்பந்தம் போட முயல்வோம் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
6:45 AM, 8 Apr
ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதாக ஈரான் அறிவிப்பு
போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுகிறது
ஹார்முஸ் ஜலசந்தி திறப்பால் கச்சா எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
7:05 AM, 8 Apr
சீனாவின் தலையீட்டை தொடர்ந்தே ஈரான் தற்காலிக போர் நிறுத்தம் செய்யச் சம்மதித்ததாக நியூயார்க் டைம்ஸ் தகவல். பதற்றத்தைத் தணிக்கத் தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்கும்படி சீனா கோரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
7:29 AM, 8 Apr
ஈரான் - அமெரிக்கா இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகள் வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்கவுள்ளது.
Stay updated on the escalating Iran-US crisis. President Trump warns of catastrophic consequences, stating a "civilization will die" without a deal. Get live news, analysis, and world reaction in tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.