Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்கள் தள்ளிவைப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 'பாராசூட் அட்டாக்'கிற்கு பெயர் பெற்ற அமெரிக்காவின் 3,000 முதல் 4,000 வீரர்களை மத்திய கிழக்கிற்கு அமெரிக்கா அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ஈரான் மீது தரைவழி தாக்குதலுக்கு டிரம்ப் தயாராகிவிட்டாரா என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. இந்த போர் 4வது வாரத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடி கச்சா எண்ணெய், கேஸ் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருகிறது.

iran us donald trump

இது டிரம்புக்கு பெரிய அழுத்தத்தை கொடுத்துள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் 48 மணிநேரம் கெடு விதித்தார். ஆனால் ஈரான் பணியவில்லை.

இதையடுத்து டிரம்ப் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்கள் ஒத்திவைப்பதாக அறிவித்தார். மேலும் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை ஈரானுடன் தொடங்கி உள்ளதாக தெரிவித்தார். இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை ஈரான் முற்றிலுமாக மறுத்தது. அமெரிக்கா, ஈரான் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று அந்த நாடு அறிவித்தது. இது பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது. நேற்றைய தினமும் ஈரான் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் தான் தற்போது அமெரிக்கா தனது படை வீரர்களை மத்திய கிழக்கில் அதிகரிக்க திட்டமிடடுள்ளது. குறிப்பாக அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு வாய்ந்த 82வது ஏர்போர்ன் பிரிவை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் அனுப்ப டிரம்ப் முடிவு செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசி கொண்டிருக்கிறார். இது ஒருபுறம் இருக்க அமெரிக்கா தனது படை பலத்தை மத்திய கிழக்கில் அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. அமெரிக்கா தனது 82வது ஏர்போர் பிரிவை சேர்ந்த 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வீரர்களை அனுப்ப பென்டகம் முடிவெடுத்துள்ளது. இந்த படை வீரர்கள் தற்போது வட கரோலினாவில் உள்ள ஃபோர்ட் பிராக்-கில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் எப்போது மத்திய கிழக்கில் செல்வார்கள். எங்கு நிலை நிறுத்தப்பட உள்ளனர் என்பது பற்றி அதிகாரிகள் சொல்ல மறுத்துவிட்டனர்.

தற்போது இந்த படை குவிப்பு தொடர்பாக அமெரிக்க ராணுவம் சார்பில் வெள்ளை மாளிகைக்கு (அதிபர் மாளிகை) அனைத்து விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் வெள்ளை மாளிகை ஒப்புதல் வங்கவில்லை. டிரம்பின் இந்த திடீர் படை குவிப்பு நடவடிக்கை ஈரானுக்கு பிரச்சனையாக மாறலாம். ஏனென்றால் இந்த படை வீரர்களை ஈரானையொட்டிய பகுதிக்குள் நிலைநிறுத்தினால் பதற்றத்தை இன்னும் அதிகரிப்பதோடு, போரை இன்னும் வலுவாக்கும். அதோடு உலகளவில் கச்சா எண்ணெய், கேஸ் தட்டுப்பாட்டை இன்னும் அதிகரிக்கலாம்.

மேலும் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து வருகிறது. அதில் தற்போது முக்கிய விஷயமாக இருப்பது ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய், கேஸ் வர்த்தகத்தை தொடங்குவது தான். இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா கைப்பற்றி தனது படைகளின் பாதுகாப்பில் வர்த்தக கப்பல்களை அனுமதிப்பது பற்றி டிரம்ப் ஆராய்ந்து வருகிறார்.

அதேபோல் ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 90 சதவீதம் நடக்கும் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்குள் அமெரிக்க படையை இறக்குவது பற்றியும் டிரம்ப் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படியான சூழலில் தான் அமெரிக்கா தனது 82வது ஏர்போர் பிரிவின் படை வீரர்கள் துல்லியமான தாக்குதலுக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் மின்னல் வேகத்தில் செயல்படுவார்கள். பாரசூட் தாக்குதல்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

இவர்கள் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி திடீரென்று 'பாராசூட்'களில் பறந்து சென்று குறிப்பிட்ட இடத்தில் துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் படைத்தவர்கள். இதனால் தான் ஈரானுக்குள் அமெரிக்காவின் படைகள் இறங்குகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படியான சூழலில் அந்த படையை சேர்ந்த 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்புவதாக தெரிவித்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+