ஈரான் என்ற நாடே இருக்காது.. மொத்தமாக அழிப்பேன்! கண்சிவந்த டிரம்ப், ஆலோசகர்களுக்கு அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: என்னை படுகொலை செய்ய முயன்றால் ஈரான் மொத்தமாக அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்கள் சிவக்க கடும் வார்னிங் கொடுத்துள்ளார். இது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபாராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. இதில் கமலா ஹாரிசை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.

donald trump us iran

அதன்பிறகு கடந்த மாதம் 20ம் தேதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக முறைப்படி பொறுப்பேற்றார். அவர் அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்றது முதல் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதனால் பல நாடுகளும் கலங்கி போய் உள்ளன.

இந்நிலையில் தான் அமெரிக்காவின் பகையாளியாக நீண்ட காலமாக இருக்கும் ஈரானுக்கு, டொனால்ட் டிரம்ப் திடீரென்று கடும் வார்னிங் விடுத்துள்ளார். நேற்று டொனால்ட் டிரம்ப் முக்கிய உத்தரவுகளை பிறப்பிப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்பிறகு தான் அவர் கண்கள் சிவக்க ஈரானுக்கு கடும் எச்சரிக்கை செய்தார். இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப், ‛‛என்னை ஈரான் படுகொலை செய்ய முயன்றால் அந்த நாடு இருக்காது. மொத்தமாக ஈரான் அழிக்கப்படும். அந்த நாட்டில் ஒன்றுமே இல்லாத அளவுக்கு அழிக்கப்படும். இந்த நடவடிக்கை தொடர்பாக ஆலோசகர்களுக்கு அறிவுரைகளை வழங்கி உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் ஒருவேளை படுகொலை செய்யப்பட்டால் துணை அதிபர் ஜேடி வான்ஸ் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்பார். அப்படி அவர் பொறுப்பேற்கும்போது டொனால்ட் டிரம்பின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. ஈரானின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

அதோடு டொனால்ட் டிரம்ப், ஈரானை வார்னிங் செய்ததன் பின்னணியில் சில முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அதாவது ஈரான் - அமெரிக்கா மோதல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டில் ஈராின் படை தளபதி காசிம் சேலைமணியை அமெரிக்கா கொன்றது. அவரை கொல்ல உத்தரவு பிறப்பித்தவர் டொனால்ட் டிரம்ப். இது இருநாடுகள் இடையேயான உறவை சீர்குலைத்தது. மோதல் வலுக்க தொடங்கியது.

அதன்பிறகு கடந்த ஆண்டு ஜுலை மாதம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொண்டார். பென்சில்வேனியாவில் டொனால்ட் டிரம்ப் பிரசாரத்தின்போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் காதில் காயமடைந்த டொனால்ட் டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அப்போது அந்த கொலை முயற்சியின் பின்னணியில் ஈரான் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அமெரிக்க அதிகாரிகள் அதனை உடனடியாக உறுதி செய்யவில்லை.

ஆனால் கடந்த நவம்பர் மாதம் அதிபர் தேர்தலுக்கு முன்பாக நீதித்துறை சார்பில் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது. டொனால்ட் டிரம்பை கொல்ல முயன்ற ஈரானின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது துப்பாக்கிச்சூடு சம்பவம் அல்ல. இன்னொரு சம்பவம். அதாவது ஈரான் அதிகாரிகள் 51 வயது நிரம்பி பர்ஹத் ஷாகேரி என்பவரை வைத்து டொனால்ட் டிரம்பை கண்காணித்து கொலை செய்ய முயன்றனர். ஆனால் அது நடக்கவில்லை.

பர்ஹத் ஷாகேரி ஈரானில் தலைமறைவாக உள்ளார் என்று தெரிவித்தது. இதனை ஈரான் முற்றிலுமாக மறுத்தது. அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இ்மாயில் பாகாய் ‛‛ஈரான் - அமெரிக்காவின் உறவை சீர்குலைக்க இஸ்ரேல் தொடர்புடைய கும்பல் தான் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளது'' என்று கூறினார். ஆனால் அதனை அமெரிக்கா ஏற்கவில்லை.

அதாவது பர்ஹத் ஷாகேரி ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர். அவர் ஈரானில் வசித்து வருகிறார். இவர் கொள்ளை வழக்கில் அமெரிக்கா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது கிரிமினல்களுடன் தொடர்பு இருந்தது. அந்த நெட்வொர்க்கை பயன்படுத்தி தான் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக ஸ்கெட்ச் போட்டுள்ளார். இதற்காக அமெரிக்காவில் இருப்பவர்களை கூலிப்படை போல் செயல்பட வைத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தது.

மேலும் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ, அவரது உதவியாளர் பிரையன் ஹுக் மற்றும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் உள்ளிட்டோருக்கு ஈரானால் மிரட்டல் இருப்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் 3 பேருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு கடும் வார்னிங்கை செய்துள்ளார்.

மேலும் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஈரான் தற்போது ரஷ்யாவுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் அமெரிக்கா இஸ்ரேலுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா மீது போர் தொடுத்து வருகிறது. இந்த போருக்கு காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது காரணம். அதன்பிறகு தான் இஸ்ரேல் போரை தொடங்கியது.

இதில் ஹமாஸ் அமைப்பு என்பது ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. அதேபோல் இஸ்ரேல் - காசா போரில் அமெரிக்கா இஸ்ரேல் பக்கம் உள்ளது. இஸ்ரேலும், அமெரிக்காவும் நெருங்கிய கூட்டாளிகள் இதுதவிர லெபானில் இருந்து இஸ்ரேலை தாக்கிய ஹெஸ்புல்லா ஈரான் ஆதரவு அமைப்பாகும். மேலும் செங்கடலில் அமெரிக்காவின் கப்பல்களை குறிவைத்து தாக்கும் ஹவுதிகளும் ஈரான் ஆதரவில் தான் செயல்படுகின்றன. இப்படி ஈரானால் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பிரச்சனை உள்ளது. நேற்றைய தினம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் பேசினர். இந்த 2 நாடுகளும் ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளன. இதனால் ஈரானை கட்டுப்படுத்துவது தொடர்பாக இருதலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் என்பது வலுப்பெற தொடங்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+