Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டொனால்ட் டிரம்ப் தலையில் விழுந்த தீர்ப்பு.. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாதா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக கொலராடோ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் 2024 அமெரிக்க தேர்தலில் அவர் எதிர்கொள்ளும் சாதக பாதகங்கள் என்ன என்று விரிவாக பார்ப்போம்.

அமெரிக்காவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிபர் ஜோ பைடனிடம் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். இதனை ஏற்க முடியாமல் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்திலேயே அத்துமீறலிலும், வன்முறையிலும் ஈடுபட்டனர். இதில் டொனால்டு டிரம்பின் பங்கு உள்ளது என்று கூறப்பட்டது. இது தொடர்பாக கொலராடோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவிக்கே தகுதியற்றவர் என்ற தீர்ப்பை அளித்தது.

Is Colorado court verdict hurt Donald Trump in US presidential election?

குடியரசு கட்சிக்கான அதிபர் வேட்பாளர் தேர்வுக்கான வாக்குச்சீட்டில் டிரம்ப் பெயர் இடம்பெறக் கூடாது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அது அளித்தது. அதே சமயம், அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று உத்தரவு வரவில்லை. இதை எதிர்த்து டிரம்ப் தரப்பு மேல்முறையீடு செய்யப்பட இருப்பதால் ஜனவரி 4 ஆம் தேதி வரை இந்த தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

கொலராடோ நீதிமன்ற தீர்ப்பு அதிபர் தேர்தலில் டிரம்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு, உள்நாட்டுப் போருக்குப் பிறகு இயற்றப்பட்டு அரிதாகவே பயன்படுத்த 14 வது திருத்தத்தின் 3 வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு சட்ட சிக்கல்களை உள்ளடக்கியதாக கூறப்படும் இந்த திருத்தத்தின் கீழ் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு தொடர்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதே கேள்வியாக உள்ளது.

மறுபக்கம், இந்த வழக்கில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என்று உறுதியாகாத நிலையில் அவரது அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் தீர்ப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கொலராடோ நீதிமன்றம் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்தாலும், 2024 அதிபர் தேர்தலில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே கூறப்படுகிறது. காரணம், குடியரசு கட்சியின் முன்னணி வேட்பாளர் கொலோரடோவில் வெற்றிபெறவும் தேவையில்லை. அதேபோல் ஜனநாயகக் கட்சி ஆதரவு அதிகம் உள்ள மாகாணம் அது என்பதால் அங்கு வெற்றிவாய்ப்பும் குறைவு.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 தேர்தல் வாக்குகள் தேவைப்படும் நிலையில், கொலோரடோவில் 9 தேர்தல் வாக்குகள் உள்ளன. 2020 தேர்தலில், பைடன் இந்த மாநிலத்தில் 13 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். எனவே, டிரம்புக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள மாகாணங்களிலும் இதேபோன்ற வழக்குகள் தொடர்ந்து அவருக்கு செக் வைக்கும் முயற்சிகள் நடைபெறலாம். இது ஒருபுறம் இருக்க தனக்கு எதிரான நடவடிக்கைகளை அனுதாபமாக மாற்றி வாக்குகளை பெறுவதில் டிரம்ப் கெட்டிக்காரர் என்று கூறப்படுகிறது.

கடந்த ஓரு ஆண்டுக்கு முன்பு இருந்த நிலையை விட தற்போது டொனால்டு டிரம்ப் அதிபர் ஜோ பைடனை வீழ்த்தும் அளவுக்கு வலுவான நிலையில் உள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டிரம்புக்கு எதிராக கொலோரடோ மற்றும் பிற பல மாகாண நீதிமன்றங்களில் தொடரப்படும் தகுதி நீக்க வழக்குகள் ஜனநாயகத்துக்கு எதிரானவை மற்றும் டிரம்பின் அரசியல் எதிரிகள் அவரை ஆட்சிக் கட்டிலில் அமர விடாமல் தடுக்க இதுபோன்ற திட்டமிட்ட சதியை செய்வதாக அவரது ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+