அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கேன்சரா? அதிர வைக்கும் காரணம்! குணமடைந்ததாக வெள்ளை மாளிகை விளக்கம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனக்கு கேன்சர் நோய் இருப்பதாக பேசும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அது குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் அளித்து இருக்கிறது.
உலகம் முழுவதும் பருவ நிலை மாற்றம் பிரச்சனைகள் பூதாகரமாகி இருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் பணிகளில் அமெரிக்க அரசு தீவிரமாக இறங்கி வருகிறது.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள சோமர்செட் பகுதியில் பருவ நிலை மாற்றத்தை கையாள்வது தொடர்பாக அங்கு வந்த நிலக்கரி சுரங்கத்தை ஆய்வு செய்ய அதிபர் ஜோ பைடன் சென்றார்.

கேன்சர் பாதிப்பு
அப்போது பேட்டியளித்த ஜோ பைடன், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். அப்போது, "என்ன செய்வதென்றே தெரியாமல் அம்மா எங்களை வளர்த்தார். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் கழிவுகள் எங்கள் வீட்டு ஜன்னல்களில் ஒட்டிக்கொள்ளும். அதை துடைக்க வைபர்களை ஜன்னலில் வைத்திருக்க வேண்டும். அதனால்தான் நான் மற்றும் பலர் கேன்சருடன் வளர்ந்தோம். நாட்டிலேயே டெலாவர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு கேன்சர் பாதிப்பு அதிகம்." என்றார்.

சமூக வலைதளங்கள்
ஜோ பைடனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களிலும், அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச அரங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் ஜோ பைடன் உடல் நலம்பெற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட தொடங்கினர். அதிபருக்கு கேன்சர் பாதிப்பு இருப்பதை இதுவரை வெளியிடாமல் இருந்தது ஏன் என்று சமூக வலைதளங்களில் பலர் கேள்விகளை முன்வைத்தனர்.

வெள்ளை மாளிகை விளக்கம்
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து அமெரிக்க வெள்ளை மாளிகை இது குறித்து விளக்கம் அளித்து இருக்கிறது. அதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு முன்பு தோல் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே முறையான சிகிச்சை பெற்று அவர் அதிலிருந்து குணமடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உடல்நிலை
ஜோ பைடனுக்கு ஏற்பட்ட தோல் புற்றுநோய் காரணமாக அலர்ஜி போன்ற சில பிரச்சனைகள் ஏற்படும் என்றும், அதற்கு சில சிகிச்சைகளை அவர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, 78 வயதாகும் அதிபர் ஜோ பைடன் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், அதிபராக தனது பணிகளை ஆற்றுவதில் அவருக்கு எவ்விதமான பிரச்சனைகளும் இல்லை எனவும் கூறப்பட்டு உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications