"நீல நிற ஸ்கிரீன்.." திடீரென அடுத்தடுத்து முடங்கும் கணினிகள்.. சரி செய்வது எப்படி! இது ரொம்பவே ஈஸி
வாஷிங்டன்: உலகெங்கும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் நிறுவனம் இன்று பலருக்கும் முடங்கின. இதனால் பயனாளர்கள் அனைவரும் பதறிய நிலையில், அதற்கு கிளவுட்ஸ்டிரைக் அப்பேட் தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே இந்த சிக்கலை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. இந்த வழிமுறையை அப்படியே செய்தால் போதும் விண்டோஸ் பிரச்சினை சரியாகிவிடும்.
உலகெங்கும் விண்டோஸ் ஆப்ரேடிங் சிஸ்டமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இன்று திடீரென உலகெங்கும் பல்வேறு பயனாளர்களின் விண்டோஸ் சிஸ்டம் முடங்கியது.

பலரும் தங்கள் கணினி நீல நிறத்தில் மாறியதால் பதறினர். இதை போட்டோவாக எடுத்தும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர். விமானச் சேவை, மருத்துவமனை செயல்பாடுகள் என அனைத்தும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
என்ன காரணம்: இதற்கிடையே இந்த பிரச்சினைக்கு கிரவுட்ஸ்டிரைக் அப்டேட் தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே கிரவுட்ஸ்டிரைக் நிறுவனமும் இந்த பிரச்சினைக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து அதில் மாற்றங்களை மாற்றியது. மேலும், விண்டோஸ் முடங்கி இருந்தால் அதைச் சரி செய்யப் பயனாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கி இருக்கிறது.
சரி செய்வது எப்படி:
* முதலில் உங்கள் கணினியை Safe Mode or the Windows Recovery Environmentஇல் ஸ்டார்ட் செய்யவும்.
* அடுத்து அதில் C:\Windows\System32\drivers\CrowdStrike என்று இருப்பதைக் கண்டறியவும்.
* அதில், C-00000291*.sys என்ற இருக்கும் கோப்பை கண்டறிந்து அதை டெலிட் செய்யவும்.
* அதன் பிறகு வழக்கம் போலக் கணினியை ஸ்டார்ட் செய்தால் போதும் அது ஸ்டார்ட் ஆகிவிடும்.
மைக்ரோசாப்ட்: முன்னதாக இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனமும் விளக்கமளித்திருந்தது. அதில் "பயனர்கள் பல்வேறு மைக்ரோசாப்ட் செயலிகளை மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். இதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். பிரச்சினையைச் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் தற்போது வரை பாசிட்டிவ் முடிவுகளே கிடைத்து வருகிறது. இந்த சிக்கல் படிப்படியாக விரைவில் சரியாகும்" என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications