கலாய்த்து டிவீட் போட்ட நடிகருக்கு.. கலகலப்பாக பதிலடி கொடுத்த டிரம்ப் மகள்.. இவாங்காவா.. கொக்கா!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்காவை தாஜ்மஹாலுக்கு அழைத்து சென்ற நடிகருக்கும் மாட்டு வண்டி, சைக்கிளில் அழைத்து சென்ற இந்திய நண்பர்களுக்கும் நன்றி என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி, மகள், மருமகனுடன் கடந்த வாரம் இந்தியாவுக்கு வருகை தந்தார். அவர்களது இருநாட்கள் பயணித்தில் அதிகமாக கவனிக்கப்பட்டவர் இவாங்கா.
வெள்ளை மாளிகையின் சம்பளம் பெறாத ஆலோசகராக உள்ள இவாங்கா இந்திய பயணத்தின் போது தாஜ்மஹாலுக்கு சென்றிருந்தார். அங்கு ஒரு பக்கம் டிரம்பும் மெலானியாவும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

போட்டோஷாப்
அவர்களுக்கு போட்டியாக இவாங்காவும் அவரது கணவர் ஜெரேட்டும் புகைப்படம் எடுத்தனர். இந்த நிலையில் தனியார் தாஜ்மஹால் முன்பு எடுத்த புகைப்படத்தை இவாங்கா தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அதில் இடதுபக்கம் இடுப்பு பகுதியை போட்டோஷாப்பில் குறைத்து வெளியிட்டிருந்தார். இதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துவிட்டனர்.
|
தில்ஜித்
இந்த நிலையில் இவாங்காவை போட்டோஷாப் செய்து ஏராளமான புகைப்படங்கள் உலா வருகின்றன. அதில் முக்கியமானது பஞ்சாபி நடிகரும் பாடகருமான தில்ஜித் தனது ட்விட்டர் பக்கத்தில் இவாங்காவுடன் தாஜ்மஹாலில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் என் வாழ்க்கையில் இவாங்கா வந்தவுடன் அவரை தாஜ்மஹாலுக்கு அழைத்து சென்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
|
புகைப்படம்
இதற்கு இவாங்கா தனது ட்விட்டரில் நன்றி என தெரிவித்துள்ளார். என்னை தாஜ்மஹாலுக்கு அழைத்து சென்ற தில்ஜித்திற்கு நன்றி என தெரிவித்த இவாங்கா, தாஜ்மஹால் சென்று வந்ததை நான் மறக்கவே மாட்டேன் என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். அது போல் தில்ஜித்திற்கு முன்னதாக ஏற்கெனவே இருவர் இவாங்காவை தாஜ்மஹாலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தில்ஜித்திற்கு அனுப்பியுள்ளனர்.
Recommended Video
|
போட்டோஷாப் இமேஜ்கள்
அதில் நீங்கள் ரொம்ப லேட் பாஜி என குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதில் ஒருவர் இவாங்காவை சைக்கிளில் அழைத்து செல்வது போன்றும் இன்னொருவர் மாட்டு வண்டியில் அழைத்து செல்வது போன்றும் புகைப்படம் உள்ளது. இவாங்காவின் தோள் மீது கை போட்டுக் கொண்டு ஜெரேட் எடுத்த புகைப்படத்தையும் மக்கள் விடவில்லை. அதில் அவரது முகத்துக்கு பதிலாக வேறு ஒருவர் தனது முகத்தை வைத்துள்ளார். இது போன்று போட்டோஷாப்பில் ஏகப்பட்ட படங்கள் வைரலாகி வருகிறது. இதற்கும் இலாங்கா பதிலளிக்கையில் இந்திய மக்களின் வரவேற்புக்கு நன்றி. எனக்கு ஏராளமான நண்பர்கள் கிடைத்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications