மணிக்கு 653 கி.மீ வேகத்தில் பறந்த JCB.. ஹைட்ரஜனில் புதிய சாதனை! மொத்த உலகமும் திரும்பி பாக்குது
வாஷிங்டன்: ஜேசிபி (JCB) என்றால் ஆமை வேகத்தில் நகர்ந்து.. மண்ணை வாரி போடும் பொக்லைன் இயந்திரம் என்றுதான் நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால், இந்நிறுவனம் உலகின் அதிவேக ஹைட்ரஜன் காரை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது. இந்த கார் மணிக்கு 653 கி.மீ வேகத்தில் சென்று புதிய உலக சாதனையை படைத்திருக்கிறது.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஜேசிபி நிறுவனம், பொக்லைன் இயந்திரங்கள் தயாரிப்பில் உலக புகழ் பெற்றது. இந்நிலையில் இந்நிறுவனம் தற்போது அதிவேக ஹைட்ரஜன் காரை உருவாக்கியிருக்கிறது.

'JCB ஹைட்ரோமேக்ஸ்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த காரை, அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் உள்ள பொன்னேவில் உப்பளப்பகுதியில் இயக்கி காட்டியிருக்கிறது. இந்த கார் சராசரியாக மணிக்கு 653.9 கி.மீ வேகத்தில் பாய்ந்திருக்கிறது. இதற்கு முன்னர் ஹைட்ரஜன் கார்களில் அதி வேகமானது எனில்.. அது BMW H2R கார்தான். தற்போது இந்த காரின் சாதனை 'JCB ஹைட்ரோமேக்ஸ்' தட்டி தூக்கியிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், 653.9 கி.மீ வேகத்தில் கார் சென்றபோதும்.. அதிலிருந்து எந்த நச்சு வாயுவும் வெளியேறவில்லை என்பதுதான்.
நம்மூரில் பள்ளம் தோண்ட பயன்படுத்தப்படும் ஜேசிபி பொக்லைன் இயந்திரங்களில் உள்ள என்ஜினை அடிப்படையாக கொண்டுதான் இந்த 'JCB ஹைட்ரோமேக்ஸ்' காரின் என்ஜினும் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில்.. டீசல் ஜேசிபி பொக்லைன் இயந்திரங்களின் என்ஜினை லைட்டாக மடிஃபை செய்து.. ஹைட்ரஜனில் இயக்கும் பொக்லைன் வாகனங்களை கொண்டுவர முடியும் என்பதை ஜேசிபி நிரூபித்திருக்கிறது.
The speed was record-breaking. The reactions? Priceless. Watch as the JCB Hydromax team react to the car making history. pic.twitter.com/u8g9WaSVSU
— JCB (@JCBmachines) August 12, 2026
இப்படி செய்வதால், பெரிய செலவு இல்லாமல் ஹைட்ரஜன் பொக்லைன்களை சந்தையில் சீக்கிரமாகவே ஜேசிபி அறிமுகப்படுத்தும். இதனால் ஹுண்டாய், ஹிட்டாச்சி, கொமாட்சு, வோல்வோ உள்ளிட்ட நிறுவனங்களின் மார்கெட் காலி ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தற்போது சோஷியல் மீடியா முழுவதும் சீறிப்பாயும் JCB-ன் புதிய காரின் வீடியோதான் டிரெண்டிங்காக இருக்கிறது.
இந்த சாதனை குறித்து ஜேசிபியின் நிறுவன தலைவர் ஆண்டனி பாம்ஃபோர்ட் கூறுகையில், "20 ஆண்டுகளுக் முன்பு டீசல் என்ஜின் மூலம் சாதனை படைத்தோம். இன்று ஹைட்ரஜன் மூலம் சாதனை செய்திருக்கிறோம். ஹைட்ரஜன் தொழில்நுட்பம்தான் எதிர்காலத்திற்கு ஏற்றது என்பது இதன் மூலம் நிரூபனமாகியிருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications
