கட்டாய மதமாற்றம்? மனைவி உஷா குறித்து.. அமெரிக்க துணை அதிபர் சொன்னதை கவனிச்சீங்களா!
வாஷிங்டன்: "எனது மனைவி பிறப்பால் இந்துவாக இருந்தாலும்.. விரைவில் கிறிஸ்தவத்தில் நம்பிக்கை வைத்து, அதன் பக்கம் வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் பேசியிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. ஏற்கனவே கட்டாய மதமாற்றம் குறித்து சர்ச்சைகள் இருக்கும் நிலையில், வேன்ஸின் பேச்சு அமெரிக்கா வாழ் இந்துக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் நேற்று, டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ என்கிற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசிய வேன்ஸ், மாணவர்களின் கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.

ஒரு மாணவி, "நீங்கள் கிறிஸ்தவர். மட்டுமல்லாது அமெரிக்கர்களாக இருப்பவர்கள் வெறுமென தேசிய கொடியை மட்டும் வணங்குவது உண்மையான தேசப்பற்று அல்ல. கிறிஸ்தவ பாரம்பரியத்தை பாதுகாப்பதுமாகும் என்று பேசி வருகிறீர்கள். இப்படி இருக்கையில் உங்கள் இந்து மனைவி கிறிஸ்தவராக மாறிவிட்டாரா? அமெரிக்காவை நேசிக்க நான் ஏன் கிறிஸ்தவளாக இருப்பதை நிரூபிக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு வேன்ஸ் கூறுகையில், "நான் நம்பும் கிறிஸ்தவ சுவேஷத்தை எனது மனைவியும் ஒருநாள் நம்புவாள். அவள் இறுதியில் அங்குதான் வருவாள் என்று நான் நம்புகிறேன். உஷா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என்னுடன் சர்ச்சுக்கு வருகிறார். அவள் சிறு வயது முதல் இந்துவாக வளர்க்கப்பட்டாள். இப்போது மத நம்பிக்கையற்றவராக இருக்கிறார். சர்ச்சில் என்னை தூண்டிய விஷயம், ஒருநாள் அவளையும் தூண்டும் என்று நான் நம்புகிறேன். இறுதியில் அவள் கிறிஸ்தவத்தை நம்பாவிட்டாலும், அவளுக்கு சுதந்திரமான விருப்பம் இருக்கிறது. இதை கடவுளும் கூறியிருக்கிறார். எனவே, எனக்கு இது பிரச்சனை இல்லை" என்று கூறியுள்ளார்.
தற்போது வரை வேன்ஸ் மற்றும் உஷா தம்பதியின் குழந்தைகள் கிறிஸ்தவ முறைப்படி வளர்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் கிறிஸ்தவ பள்ளியில் பயின்று வருகிறார்கள்.
அமெரிக்காவில் ஏற்கெனவே இந்து மதத்திற்கு பரவலாக எதிர்ப்பு இருக்கிறது. குறிப்பாக இந்திய வம்சாவளிகளான துளசி கப்பார்ட், காஷ் படேல் போன்றோர் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும்போது, "தீபாவளி அமெரிக்கனுக்கு எதிரானது. எங்களது நாட்டை விட்டு செல்லுங்கள்" என்றும், "இயேசுவை தேடுங்கள் அவர்தான் ஒரேவழி" என்றும் சோஷியல் மீடியாக்களில் பரவலாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வேன்ஸின் கருத்துக்கள் அமெரிக்காவில் விவாதங்களை கிளப்பியிருக்கின்றன.
குறிப்பாக வேன்ஸ்-உஷா திருமணம் இந்த வேத முறைப்படிதான் நடந்தது என்றும், ஆனால் இப்போது வந்து உஷாவை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற வேன்ஸ் முயற்சிப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
-
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications