தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவுடன் ஒழுங்கா ஒத்துழைப்பு கொடுங்க! பாகிஸ்தானுக்கு ஜே.டி.வான்ஸ் வார்னிங்
வாஷிங்டன்: ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் தீர்வு காண இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பாகிஸ்தான் ஒத்துழைப்பு கொடுக்காமல் ஓவராக போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருக்கிறது.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இதுபற்றி கூறுகையில், "இந்தியாவுக்கு பாக் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

நேற்று பாக்ஸ் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும் அவர் பேசியதாவது, "இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா அளிக்கும் பதிலடி, இரு பிரதேசங்களுக்கு இடையே போரை தூண்டிவிடாதவாறு இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணமாக இருப்பின், அதை ஒழிக்க இந்தியாவுடன் இணைந்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
தாக்குதல் நடந்த தேதி ஏப்.22. அன்றைய தினம் ஜே.டி.வேன்ஸ் இந்தியாவில்தான் இருந்தார். அமெரிக்க துணை அதிபர் இந்தியாவுக்கு வந்திருக்கும்போது இப்படியான தாக்குதல் நடந்திருப்பது நமக்கு கௌரவ பிரச்சனையாக இருந்தது.
இது பற்றி தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ள வான்ஸ், "இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நானும், மனைவி உஷாவும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியா எங்களை கடந்த சமீப காலமாக வெகுவாக கவர்ந்திருந்தது. இந்நிலையில், இந்த துயரமான நேரத்தில் நாங்கள் இந்திய மக்களுடன் நிற்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.
பயங்கரவாத தாக்குதலுக்கு டிரம்ப் உட்பட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தாக்குதல் மனிததன்மையற்றது என்றெல்லாம் கூறியிருந்தனர். இதனை தொடர்ந்து துணை அதிபரின் கண்டனம் வெளியாகியுள்ளது. இந்த கண்டன அறிக்கையில், பாகிஸ்தான் இந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்கிற பாயிண்ட் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.
ஏனெனில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் அமைச்சர்கள் பேசிய விஷயங்கள் அவ்வளவு நன்றாக இல்லை. போரை தூண்டும் விதமாகவே இந்த பேச்சு இருந்திருக்கிறது. அமைச்சராக இருக்கிறோம் என்கிற பொறுப்பு இல்லாமல் உளறி தள்ளியிருக்கின்றனர். குறிப்பாக அந்நாட்டின் ரயில்வே துறை அமைச்சர், "எங்களிடம் ஏராளமான அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் இந்தியாவுக்காகத்தான் இருக்கிறது" என்று கொக்கரித்திருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுவிடக்கூடாது என உலக நாடுகள் மனக்கெட்டுக்கொண்டிருக்கையில், இவர் இப்படி பேசி பதற்றத்தை அதிகரித்திருப்பது பாகிஸ்தானின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாக இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில்தான் ஜே.டி.வான்ஸ் பாகிஸ்தானுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.
முன்னதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பாகிஸ்தான் பிரதமருக்கு வெளிப்படையாகவே இதுபற்றி அறிவுறுத்திருந்தார். பாக் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்பை போனில் தொடர்பு கொண்டு பேசிய அவர், இந்தியா மேற்கொள்ளும் அனைத்து விசாரணை நடவடிக்கைகளுக்கும் பாகிஸ்தான் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இரு நாடுகளும் பதற்றங்களை குறைத்து தெற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதை தொடர்ந்து ஐநா மனித உரிமை அமைப்பும், பாகிஸ்தானின் பலுஸ்சிஸ்தான் பகுதியில் நடந்து வரும் தீவிரவாத, மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை எழுப்பியிருந்தது. பலுசிஸ்தான் பிரச்சனைக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என்றும் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications