வாயை திறந்தால் பல பிரமுகர்கள் காலி.. சிறுமிகளை சீரழித்த எப்ஸ்டீன் தற்கொலை இல்லை கொலை? பகீர் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவை அதிர வைத்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இருப்பினும், அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தடயவியல் நிபுணர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் போட்டோக்களை ஆய்வு செய்ததில், எப்ஸ்டீன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பல்வேறு முக்கியப் பிரமுகர்களுடன் தொடர்பில் இருந்த எப்ஸ்டீன். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலர் உடனும் நெருக்கமாக நட்பை இவர் கொண்டிருந்தார். இவர் சிறுமிகள் மற்றும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு சிறுமிகளை அனுப்பியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

எப்ஸீடன்
இவர் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இவரிடம் விசாரணை நடத்தினால் பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள்.. மிக பெரிய பூகம்பமே வெடிக்கும் என்று சொல்லப்பட்டது. இந்த சூழலில் 2019 ஆகஸ்ட் மாதம் எதிர்பாராத விதமாக சிறையிலேயே உயிரிழந்தார். விசாரணைக்கு முன்பே அவர் உயிரிழந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இதற்கிடையே ஜர்னல் ஆஃப் ஃபோரென்சிக் அண்ட் லீகல் மெடிசின் இதழின் தலைமை ஆசிரியரும் தடயவியல் நிபுணருமான மைக்கேல் ஃப்ரீமேன் சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். அதாவது எப்ஸீடன் மரணம் தொடர்பாக பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வரும் அவர், எப்ஸ்டீனின் மரணம் குறித்த புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
கொலை செய்யப்பட்டு இருக்கலாம்
இது தொடர்பாக அமெரிக்க ஊடகத்திடம் பேசிய அவர், "எப்ஸ்டீனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் போட்டோக்களை ஆய்வு செய்தபோது, அவரது உடலில் காணப்பட்ட காயங்கள் தற்கொலை செய்து கொண்டவர்களின் உடலில் காணப்படும் காயங்களுடன் ஒத்துப்போகவில்லை. அவரது உடலில் இருந்து காயங்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவரின் அறிகுறிகளுடன் பொருந்தவில்லை.
மேலும், அனைத்து ஆதாரங்களையும் ஒன்றாக பார்க்கும்போது, பின்னால் இருந்து யாரோ அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம். அதற்கான அறிகுறிகளே அதிகமாக உள்ளது. துணியை கழுத்தில் சுற்றி நெரித்திருக்கலாம். பின்னர் அதே துணியை வைத்து தற்கொலை செய்து கொண்டது போல செட் அப் செய்து இருக்கலாம்" என்றார்.
சந்தேகம்
2019 ஆகஸ்ட் 10ஆம் தேதி, நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் கரெக்ஷனல் சென்டரில் எப்ஸ்டீன் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அப்போது நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அறிக்கை வந்தது. ஆனால், எப்ஸ்டீனின் மரணம் பல ஆண்டுகளாக பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது. முக்கிய பிரமுகர்களுடன் தொடர்புடைய பாலியல் குற்றங்கள் குறித்து அவர் பல்வேறு தகவல்களை வெளியிடுவார் என்ற அச்சத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சிலர் கூறி வருகின்றனர்.
மேலும், எப்ஸ்டீனின் சிறை அறைக்கு வெளியே இருந்த கண்காணிப்பு கேமராக்கள் சரியாக அவர் உயிரிழந்த நாளில் வேலை செய்யவில்லை. இதுவும் கூட சந்தேகங்கள் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. ஆனால், அந்த சிறையில் கண்காணிப்பு கேமராக்களில் நீண்டகாலமாகவே பிரச்சினைகள் இருந்ததாக அமெரிக்க நீதித்துறை 2023ல் அறிக்கை வெளியிட்டு இருந்தது.
மீண்டும் விவாதம்
தடயவியல் நிபுணர் மைக்கேல் ஃப்ரீமேன் வெளியிட்டுள்ள இந்த கருத்துகளை தொடர்ந்து, எப்ஸ்டீனின் சகோதரர் மார்க் எப்ஸ்டீன், அவரது மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், எப்ஸீடன் தற்கொலை செய்து கொண்டதாக சொன்ன நியூயார்க் மருத்துவமனை தனது அறிக்கையில் மாற்றம் இல்லை என்று சொல்லி வருகிறது. மைக்கேல் ஃப்ரீமேனின் இந்த கருத்து எப்ஸ்டீனின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற விவாதத்தை மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications
