திருமணத்தை மீறிய உறவு! சிக்காமல் இருக்க.. உயர் அதிகாரிகளையும் உள்ளே இழுத்த என்விடியா முன்னாள் CEO

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: என்விடியாவின் முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங், சிங்கப்பூரின் 'மெகாஸ்பீட்' நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான 'ஆலிஸ் ஹுவாங்' உடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில்.. இந்த உறவை மறைக்க ஜென்சன், தனது உயர் அதிகாரிகளையும் உடந்தையாக பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான்.

என்விடியா என்பது செமிகண்டக்டர் சிப்புகளை உருவாக்கும் உலகின் மிகப்பெரிய நிறுவனம். கம்பெனினு ஒன்னு இருந்தா.. கஸ்டமர்ஸ் இருப்பார்கள்தானே! 'மெகாஸ்பீட்' டேட்டா சென்டர் நிறுவனம், என்விடியாவின் கஸ்டமர்ஸில் ஒன்று.

Jensen Huang

அப்புறம் என்ன? இந்த ஒரு காரணம் போதுமே! பிசினஸ் மீட்டிங் என்று சொல்லிக்கொண்டு, ஆலிஸ் உடன் ஊர் சுற்றியிருக்கிறார் ஜென்சன். வழக்கமாக பிசினஸ் மீட்டிங் எனில் அது ஆபிசில்தான் நடக்கும். ஆனால், இவர் ஆலிஸை ஸ்டார் ஓட்டலுக்கு வரவைத்து.. பிரமாண்ட பார்ட்டி செய்து மீட்டிங் வைத்திருக்கிறார். கேட்டால் கார்ப்பரேட் கல்ச்சர் என்று காதில் பூ சுற்றியிருக்கிறார். ஆனால், ரகசியம் என்று ஒன்று கிடையாது என்பதை ஜென்சன் வசதியாக மறந்துவிட்டார் போல.

கடந்த 2023ம் ஆண்டு முதலே இந்த பஞ்சாயத்து வெளி உலகத்திற்கு அரசல் புரசலாக தெரிய வந்தது. அமெரிக்கா, சீனா என பல ஊர்களுக்கு ஆலிஸை அழைத்துக்கொண்டு ஜென்சன் சுற்றியிருந்தது, சோஷியல் மீடியாக்களில் போட்டோ, வீடியோக்களாக தெரிய வந்தது. இதை தொடர்ந்து.. கடந்த ஆண்டு விஷயம் ரொம்பவே சீரியஸாக வெடித்தது. அப்போது மீடியாக்கள் கேள்வி எழுப்பின. அதேபோல இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மீடியாக்கள் கேள்வி எழுப்பின.

இந்த கேள்விகள் காரணமாக, என்விடியா உயர் அதிகாரிகள்.. ஜென்சனிடம் விசாரிக்க தொடங்கினர். இதற்கு அவர் சொன்ன பதில்தான் ஹைலைட்! என்விடியாவின் பொது ஆலோசகர் டிம் டெட்டர் மற்றும் தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரி, ஆலிசன் வாகன்ஃபெல்ட் ஆகியோரிடம், மெகாஸ்பீட் ஆலிஸ் உடனான சந்திப்பு என்பது மிகவும் பொதுவானது. வர்த்தக ரீதியாகத்தான் நாங்கள் சந்தித்துக்கொண்டோம் என்று கூறியிருக்கிறார் ஜென்சன். இருவருக்கும் இடையே இருந்த திருமணத்தை மீறிய உறவை மறைத்து.. அதை வெறும் தனிப்பட்ட உறவாகத்தான் ஜென்சன் காட்டிக்கொண்டார்.

அட இதுகூட பரவால்லைங்க.. கடந்த ஆண்டு நியூயார்க் டைம்ஸ் செய்தி ஊடகம், ஆலிஸ், ஜென்சன் உறவு குறித்து சந்தேகம் வருவதாக எழுதியிருந்தது. உடனே கொந்தளித்த ஜென்சன், நியூயார்க் டைம்ஸ் செய்தி ஊடகம் மீது மான நஷ்ட வழக்கு தொடுக்கப்போவதாக மிரட்டியிருந்தார். அடேங்கப்பா.. ஜென்சன் ரொம்ப ரோசக்காரரா இருப்பாரு போல.. என்று மொத்த டெக் உலகமும் மிரண்டது. ஆனால், இப்போது வரை அப்படி எந்த வழக்கையும் ஜென்சன் தொடுக்கவில்லை. மட்டுமல்லாது, இவர்களது உறவு திருமணத்தை மீறியதுதான் என்பதும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

ஆலிஸ் மட்டுமல்லாது, தனது ஆபிசிலேயே மேலும் 2 பெண்களுடன் ஜென்சன் தொடர்பில் இருந்திருக்கிறார். இந்த விஷயம் எல்லாம் வெளியில் வந்த நிலையில்.. வேறு வழியின்றி அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+