சீன தோழியை வைத்து.. கிளப்பப்பட்ட பஞ்சாயத்து! என்விடியா CEO விஷயத்தில் அமெரிக்காவின் கேம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகின் முன்னணி செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனமான என்விடியாவின் சிஇஓ ஜென்சன் ஹுவாங், திருமணத்தை மீறிய உறவு மற்றும் சீன உளவாளியுடன் தொடர்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக பதவி விலகியிருக்கிறார். ஆனால், இந்த பதவி விலகளுக்கு பின்னால்.. இஸ்ரேலை சேர்ந்தவரை உள்ளே கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் கேம் இருக்கிறது என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன.

சீன தோழி ஆலிஸ் ஹுவாங்குடன், ஜென்சன் பழகி வந்திருக்கிறார். ஆலிஸ் ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது. சிங்கப்பூரில் இயங்கி வரும் 'மெகாஸ்பீட்' நிறுவனத்தின் இயக்குநராவார். வேலபார்க்கும் நிறுவனம்தான் சிங்கப்பூரை சேர்ந்தது. மற்றபடி ஆலிஸ் சீனாவை சேர்ந்தவர். எனவேதான் அவர் சீன உளவாளியாக இருப்பார் என்று அமெரிக்கா சந்தேகத்தை கிளப்பியிருந்தது.

Jensen Huang

முதலில் இந்த பஞ்சாயத்தை கிளப்பியது அமெரிக்க உளவு நிறுவனங்கள்தான். மொத்தமாக 2.40 லட்சம் சிப்களை மெகாஸ்பீட் நிறுவனத்தால் வாங்கப்பட்டு, அது சீனாவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் அமெரிக்காவின் புகார். என்விடியாவிடமிருந்து சிப்புகளை வாங்க ஆர்டர் கொடுத்ததற்கு ஆதாரம் இருக்கிறது. அதேபோல, சிப்புகளை வாங்கியதற்கும் ஆதாரம் இருக்கிறது. ஆனால், அந்த சிப்கள்.. சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதற்கு மட்டும் ஆதாரம் இல்லை.

இருப்பினும் இந்த குற்றச்சாட்டு காரணமாக ஜென்சன் ராஜினாமா செய்திருக்கிறார். என்விடியா பங்குகள் 30%க்கும் மேல் சரிந்துள்ளன. ஆனாலும் இப்போது வரை, ஆலிஸ் சீன உளவாளி என்றோ.. சீன உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தார் என்றோ அமெரிக்காவால் நிரூபிக்க முடியவில்லை.

அதேபோல இந்த விஷயத்தை பொறுத்தவரை இன்னொரு சந்தேகமும் எழுகிறது. அதாவது, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலில்தான் என்விடியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி யூனிட் இருக்கிறது. மட்டுமல்லாது அடுத்த சிஇஓவுக்கான ரேசில் 6 பேர் இருக்கின்றனர். இதில் 3 பேர் இஸ்ரேலை சேர்ந்தவர்கள்.

முதல் நபர் மைக்கேல் ககன். இவர் தற்போது என்விடியாவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உள்ளார். 2020ல் என்விடியா 7 பில்லியன் டாலருக்கு வாங்கிய இஸ்ரேலிய நிறுவனமான மெலனாக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் இவர். ஏஐ டேட்டா சென்டர் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

2வது இடத்தில் ஜானி ஸ்ரூஜி என்பவர் இருக்கிறார். இஸ்ரேலின் ஹைஃபா நகரில் பிறந்த இவர், தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஹார்டுவேர் தொழில்நுட்ப பிரிவின் மூத்த துணை தலைவராக இருக்கிறார். ஆப்பிளின் சொந்த சிப்களை உருவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது. வெளியிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனில்.. இவருக்குதான் அதிக வாய்ப்பு உள்ளது என தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.

3வதாக இயால் வால்ட்மேன் இருக்கிறார். இவரும் மெலனாக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் சிஇஓ ஆவார். பெரிய சிப் நிறுவனத்தை வழிநடத்திய அனுபவம் இவருக்கு உண்டு.

இப்படியாக நிறுவனம் அடுத்தக்கட்டமாக யார் கைக்கு போக இருக்கிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. நிறுவனம் இஸ்ரேல் கைக்கு போக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்புகிறாரோ? அதனால்தான் சீன தோழி கதையை உளவு நிறுவனங்கள் கிளப்பி விட்டதோ? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எது நடந்தாலும்.. பலி ஆடு ஆனது என்னவோ ஜென்சன் ஹுவாங்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+