என்விடியா விஷயத்தில்.. ஸ்கெட்ச் சீனாவுக்குதானா? அமெரிக்க நடவடிக்கையில் எழும் சந்தேகம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சிஇஓவாக இருந்த ஜென்சன் ஹுவாங், சீன உளவாளி என்று சந்தேகிக்கப்படும் நபருடன், திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இது தனிப்பட்ட உறவு விஷயம் என்பதை தாண்டி.. அமெரிக்கா-சீனா விஷயமாக வெடித்திருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நோக்கம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

திருமணத்தை தாண்டிய உறவு என்பது, ஜென்சன் வாழ்க்கையை பொறுத்தவரை வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால், அது எப்படி அமெரிக்கா-சீனா என இரு நாடுகளுக்கு இடையேயான பஞ்சாயத்தாக மாற முடியும்?

Jensen Huang

அமெரிக்க இதை இப்படித்தான் அணுகியிருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே.. தேச நலனுக்கு ஆபத்து என்றுதான் அமெரிக்கா அலறியிருக்கிறது. அமெரிக்கா சொல்லும் குற்றச்சாட்டு இதுதான்.. அதாவது ஜென்சன் பழகிய ஆலிஸ் என்பவர் சீனாவை சேர்ந்தவர். எனவே அவர் சீன உளவு அமைப்புடன் தொடர்பில் இருக்கிறார்.

ஒரு நிறுவனத்தின் மீது சந்தேகப்பட இதெல்லாம் ஒரு காரணமா? என்விடியாவுக்கு உலகம் முழுவதும் கஸ்டமர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு கஸ்டமர்தான் மெகாஸ்பீட் நிறுவனம். சிங்கப்பூரை சேர்ந்த இந்த நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்தவர்தான் ஆலிஸ் ஹுவாங். ஆனால், இவரது பூர்வீகம் சீனாவை சேர்ந்தது.

இருப்பினும் இந்த ஒரே காரணத்திற்காக மட்டுமே இவரை உளவாளி என்று சொல்வதெல்லாம் உச்சக்கட்ட அபத்தம். அப்படியெனில், அமெரிக்காவுடன் பிசினஸ் டீலிங் கொண்டிருக்கும் சீன நிறுவனங்களை அனைத்தையும், அந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் அனைவரையும் உளவாளிகள் என்று அமெரிக்கா முத்திரை குத்துமா? அப்படி நடந்தால்.. இனி வரும் காலங்களில் இரு நாடுகளுக்கு இடையில் எப்படி வணிகம் நடக்கும்?

சரி இதெல்லாம் கூட விட்டுவிடுவோம். அமெரிக்கா சொன்னது போல.. ஆலிஸ், சீன உளவு அமைப்புடன் தொடர்பில் இருக்கிறார் எனில், அதை அமெரிக்கா நிரூபிக்க வேண்டியதுதானே! இந்த நிமிடம் வரை அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை என்றுதானே அமெரிக்கா சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆக ஆதாரமும் இல்லை, எதுவும் இல்லை! ஆனால் வாய் மட்டும் காது வரைக்கும் கிழியும்.

இதில் இன்னொரு மேட்டரையும் சந்தேகப்பட வேண்டி இருக்கிறது. சீனா AI துறையில் பெரிய உச்சத்திற்கு போய்விடக்கூடாது என்பதால், அந்நாட்டுக்கு ஹைபிரிட் செமிகண்டக்டர் சிப்புகளை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்திருக்கிறது. இப்படி விதிக்கப்பட்ட தடை காரணமாக சீனாவால் சிப்புகளை வாங்க முடியவில்லை. உலகமே AI நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்.. கிரிஞ்சு தனமா, இப்படியெல்லாம் தடை போடாதீங்க என்று அமெரிக்காவின் முடிவுக்கு ஜென்சன் ஹுவாங் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

சீனாவுக்கு சிப் ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருந்தார். இவரது பூர்வீகமும் சீனாவை சேர்ந்தது என்பதாலும்.. இவர் சீனாவுக்கு சப்போர்ட் செய்கிறார் என்பதாலும்தான், அமெரிக்கா திட்டமிட்டு கேம் ஆடி.. ஜென்சனை காலி செய்ததோ? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில்.. ஜென்சன் இடத்திற்கு முக்கிய போட்டியாளர்களாக இஸ்ரேலை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அடுத்து என்விடியா இஸ்ரேலியர்களின் கைக்கு போகத்தான் இவ்வளவு பிளான? என்கிற கேள்வியும் எழுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+