ஜோ பிடன் வெள்ளை மாளிகை ஆலோசகர் செட்ரிக் ரிச்மண்டுக்கு கொரோனா
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனுக்கான வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர், காங்கிரஸ் உறுப்பினர் செட்ரிக் ரிச்மண்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஜோ பிடனுடன், ரிச்மண்ட் ஜார்ஜியா மாநிலத்திற்கு பயணம் செய்தார். இருவரும் திறந்த வெளியில், சுமார் 15 நிமிடங்கள் அருகருகே இருக்க நேரிட்டது.

இருப்பினும் ஜோ பிடனுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிடன் 78 வயதானவர் என்பதால், நோய்த் தொற்று விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
நல்லவேளையாக, ஜோ பிடனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சமீப காலமாக கொரோனா பாதிப்பு அதிகமாகி ஒரே நாளில் மொத்தம் 3 ஆயிரத்து 600 க்கும் மேலானோர் இறந்துள்ளனர். கொரோனா முதலாவது தடுப்பு திட்டம் திங்கள்கிழமை அமெரிக்காவில் தொடங்கியது.












Click it and Unblock the Notifications