ஜில் பைடன் மட்டும் வராம இருந்திருந்தா! அந்த பெண்ணை என்ன செய்திருப்பார் ஜோ பைடன்? உண்மை என்ன?
வாஷிங்டன்: மனைவி என நினைத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வேறு ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கச் சென்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து சமூகவலைதளங்களில் விவாதங்கள் நடந்துள்ளன.
டோம் லுக்ரே என்ற டிவிட்டர் பயனாளிதான் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தொற்று காரணமாக லேசான சுவாச பிரச்சினைகளை அனுபவித்து வருகிறார். அவர் பாக்ஸ்லோவிட் உடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

பைடனின் மருத்துவர் டாக்டர் கெவின் ஓ கானர், அதிபருக்கு காய்ச்சல் இல்லை என்றும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரு பெண்ணை நீண்ட நேரமாக பார்த்தார். அப்போது தனது மனைவி ஜில் பைடன் என நினைத்து அருகே சென்றார். பிறகு ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் வந்து அவர்களை பிரித்து விடுகிறார். அவர் மனைவி மட்டும் சரியான நேரத்திற்கு வந்திருக்காவிட்டால் அந்த பெண்ணுக்கு அவர் முத்தமிட்டிருப்பார் என தெரிகிறது.
ஆனால் இந்த வீடியோவுக்கு இரு வேறு கருத்துகள் உலா வருகின்றன. ஒரு சாரார் அந்த வீடியோவை பார்த்துவிட்டு அவர் சாதாரணமாக பேசச் சென்றுள்ளார். அவர் முத்தமிடுவது போல் எந்த அறிகுறியும் இல்லையே என்கிறார்கள். இந்த சம்பவம் வெள்ளை மாளிகையில் ஒரு விழாவின் போது நடந்தது.
அடர் நீல நிறத்தினாலான உடையை அணிந்திருந்தார். அதே போன்ற லைட் நீல நிறத்தில் ஜில் பைடனும் அணிந்திருந்தார். மேடையை விட்டு இறங்க சென்ற பைடன் பின்னால் இருந்த அந்த பெண்ணை பார்த்ததும் ஆச்சரியமடைந்தார். இந்த வீடியோ மார்ச் 18 ஆம் தேதி எடுக்கப்பட்டது என்கிறார்கள்.
அதாவது பெண்களின் வரலாற்று மாதத்தை கொண்டாடும் வகையில் வெள்ளை மாளிகையில் ஒரு நிகழ்ச்சி நடந்ததாகவும் அந்த நிகழ்ச்சியின் போது இந்த வீடியோ எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 4 ஆண்டுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு இறுதியில் நடந்த இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப்பை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வீழ்த்தினார்.
இந்த நிலையில் ஜோ பைடனின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய போகிறது. இந்த நிலையில்தான் இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மீண்டும் டொனால்ட் களமிறங்க போவதாக தெரிவித்துள்ளார். அது போல் ஜோ பைடனும் போட்டியிடுவேன் என பிடிவாதமாக தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜோ பைடனுக்கு தற்போது 81 வயதாகிறது. அத்துடன் அவர் அவ்வப்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுகிறார். இதனால் அவர் போட்டியிட வேண்டாம் என ஜனநாயக கட்சியினர் விரும்புகிறார்கள். அது போல் சில நாட்களுக்கு முன்பு குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புடன் ஜோ பைடன் நேரடி விவாதத்தில் பங்கேற்றார். அதிலும் ஜோ பைடன் சரியான வாதங்களை முன் வைக்கவில்லை.
இதுதொடர்பாக ஜனநாயக கட்சியின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறுகையில், ‛‛ஜோ பைடனின் வெற்றி பெறும் தன்மை என்பது குறைந்து விட்டது. இதனால் அவர் வெற்றி பெற முடியுமா? என்பதையும், தேர்தலில் போட்டியிடுவது பற்றியும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications