அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக ஜோ பிடனும் துணை அதிபராக கமலா ஹாரிசும் இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு பதவியேற்க உள்ளார்கள்.
ஜனவரி 6-ம் தேதியன்று நடைபெற்ற அமெரிக்க கேப்பிடல் கட்டிடம் மீதான தாக்குதல் மற்றும் கலவரத்துக்கு பின்னர் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் ஜோ பிடன் பதவியேற்பு விழாவுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவை கேக் பால்மர் தொகுத்து வழங்குகிறார். தேசிய கீதத்துடன் தொடங்கும் நிகழ்ச்சியில் அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் லேடி என்றழைக்கப்படும் ஜில் பிடன் (ஜோ பிடன் மனைவி) தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசுவார். இது அந்நாட்டு மரபுகளில் ஒன்றாகும்.
அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் ஜோ பிடனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். இதேபோல் துணை அதிபராக பொறுப்பேற்கும் கமலா ஹாரிசுக்கு சோனியா சோடோமேயர் என்ற மற்றொரு உச்சநீதிமன்ற நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சி உலகின் அனைத்து முன்னணி செய்தி நிறுவனங்களிலும் நேரலையாக ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. அந்தவகையில் நமது ஒன் இந்தியா குழுமமும் ஜோ பிடன் பதவியேற்பு நிகழ்வின் அனைத்து சுவாரஸ்யங்களையும் நேரலையாக சுடச்சுட உடனுக்குடன் தரவிருக்கிறது.
இதனால் நாளை இரவு 8 மணி முதல் ஒன் இந்தியா தமிழ் இணையப்பக்கத்துடன் இணைந்திருங்கள். உங்களுக்கு நொடிக்கு நொடி அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா குறித்த தகவல் கிடைக்கும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications