‛‛ஓய்வு வேண்டாம்’’.. மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் போட்டி.. வெளியான புதிய அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மீண்டும் ஜனநாயக கட்சி சார்பில் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக தற்போதைய அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார். குடியரசு கட்சி சார்பில் ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில் ஜோபைடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் கவனம் பெற தொடங்கி உள்ளது.
அமெரிக்கா அதிபராக ஜோபைடன் உள்ளார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் உள்ளார். அமெரிக்காவை பொறுத்தமட்டில் அதிபரின் பதவிக்காலம் என்பது 4 ஆண்டுகள் மட்டுமே. கடந்த 2020ல் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவர் குடியரசு கட்சி சார்பில் களமிறங்கினார்.

டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோபைடன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்றார். இதையடுத்து 2021ம் ஆண்டு முதல் ஜோபைடன் அமெரிக்க அதிபராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு ஜோபைடனின் பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது.
இதனால் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன. 2024 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜோபைடன் விரும்புவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் அந்த தேர்தலில் தான் போட்டியிட விரும்புவதாக ஜோபைடன் இன்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், 2021 ஜனவரியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவின் ஜனநாயகத்தை பாதுகாப்பதே எனது வேலை என ஜோபைடன் கூறுகிறார். 4 ஆண்டுகளுக்கு முன்பு நான் அதிபர் பதவிக்கு போட்டியிட்டபோது அமெரிக்காவின் ஆன்மாவுக்கான போரில் நாங்கள் இருக்கிறோம் என்றேன். இப்போது இன்னும் இருக்கிறோம் என்கிறோம். இது ஓய்வுக்கான நேரம் இல்லை. இதனால் தான் நான் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்'' என ஜோபைடன் அறிவித்தார்.

இதன்மூலம் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் போட்டியிட தயாராகி உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோவில் அமெரிக்காவை டொனால்ட் டிரம்பிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். இந்த பணியை நம்மால் சிறப்பாக முடிக்க முடியும் என்பது எனக்கு தெரியும் எனவும் ஜோபைடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தல் ஜனநாயக கட்சி சார்பில் அவர் போட்டியிடலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக ஜோபைடன் இன்று அறிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக தான் அவர் ஆபாச நடிகையுடன் நெருக்கமாக இருந்தது மற்றும் அதனை வெளியே கூறாமல் மறைக்க பணம் கொடுத்தது உள்ளிட்ட சர்ச்சைகள் விஸ்வரூபமடைந்த நிலையில் டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டார்.
இதனால் குடியரசு கட்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க நிக்கி ஹேலி என்பவர் 2024 அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல் இன்னும் சிலர் ஆர்வமாக உள்ளனர். இதற்கிடையே தான் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக ஜோபைடன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications