வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அசத்தல்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் முறையாக.. அதிக ஓட்டு வாங்கி சாதித்த ஜோ பிடன்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: 80 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை, ஜோ பிடன் பெற்றுள்ளார்.

ஏற்கனவே 80 மில்லியனுக்கும் அதிக ஓட்டுக்களை பெற்ற நிலையில், இன்னும் வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளதால், ஓட்டு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, பிடென் 80,011,000 க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார், அதிபர் டொனால்ட் டிரம்ப் 73,800,000 க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.

உலகம் முழுக்க எதிரொலித்த ஒரே பெயர்.. டாப் நியூஸ் மேக்கர் ஜோ பிடன்! உலகம் முழுக்க எதிரொலித்த ஒரே பெயர்.. டாப் நியூஸ் மேக்கர் ஜோ பிடன்!

காரணம் என்ன

காரணம் என்ன

இதன் மூலம், 80 மில்லியனுக்கும் அதிகமான பொது வாக்குகளை பெற்ற முதல் அதிபர் என்ற பெருமை ஜோ பிடனுக்கு கிடைத்துள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பு, வாக்கு எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவையும், அதிக மக்கள் ஓட்டுப்போட ஒரு காரணம் என்பதால் இந்த சாதனை ஜோ பிடனுக்கு கிடைத்தது என்பதையும் மறுக்க முடியாது.

ஜோ பிடன் வெற்றி

ஜோ பிடன் வெற்றி

ஜோ பிடென் 306 தேர்தல் வாக்குகளையும், டிரம்ப் 232 வாக்குகளையும் பெற்றுள்ளார். அதிபராக வருவதற்கு 270 தேர்தல் வாக்குகள் தேவை. ஜோ பிடன் ஏற்கனவே வெற்றி இலக்கை கடந்து ஓடிக் கொண்டு இருக்கிறார்.

வீட்டிலிருந்து ஓட்டு

வீட்டிலிருந்து ஓட்டு

கொரோனா வைரஸுக்கு பயந்து, அமெரிக்கர்கள் இந்த ஆண்டு மெயில் மூலம் அதிக அளவு வாக்களித்தனர். எனவே வாக்குப் பதிவு அதிகரித்துள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பும் ஒரு காரணம்.

 அதிபர் தேர்தல்

அதிபர் தேர்தல்

ஒரு பக்கம் முரண்டு பிடித்த டிரம்ப் அதிகாரத்தை விட்டுத்தர இறங்கி வர ஆரம்பித்துள்ளார். அமெரிக்காதான் முதலில் என டுவிட் போட்டுள்ளார். பென்சில்வேனியா மற்றும் நெவாடா உட்பட பல மாகாணங்கள், தங்கள் தேர்தல் முடிவுகளை சான்றாக அளிக்கத் தொடங்கியுள்ளன.

English summary
Joe Biden has become the first presidential candidate to win more than 80 million votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X