களைகட்டிய வெள்ளை மாளிகை.. ஜோ பைடன் கொண்டாடிய தீபாவளி.. புறக்கணித்த கமலா ஹாரிஸ்.. ஏன்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இல்லத்தில் தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் 600 அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர். அதன்பிறகு ஜோ பைடன் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் கோலாகலமாக தீபாவளி பண்டிகை என்பது கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் இருப்பது தான். குறிப்பாக அமெரிக்க அதிபர் மாளிகையில் கூட தவறாமல் தீபாவளி பண்டிகை என்பது கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை என்பது ஜோ பைடன் தலைமையில் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதையடுத்து வெள்ளை மாளிகையில் உற்சாகமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஜோ பைடன் தலைமை வகித்தார். குத்து விளக்கு ஏற்றி அவர் தீபாவளியை கொண்டாடினார். அதன்பிறகு அனைவரும் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர். இந்த விழாவில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் 600 பேர் வரை பங்கேற்றனர்.
அதன்பிறகு ஜோ பைடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்க அதிபராக வெள்ளை மாளிகையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய தீபாவளி வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவதில் பெருமை அடைகிறேன். என்னை பொறுத்தவரை இது ஒரு பெரிய விஷயம். செனட்டர், துணைத் தலைவர் மற்றும் ஜனாதிபதியாக தெற்காசியவை சேர்ந்த அமெரிக்கர்கள் என்னுடன் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளனர்.

கமலா (அதாவது கமலா ஹாரிஸ்) முதல் டாக்டர் மூர்த்தி வரை உங்களில் பலர் என்னுடன் பணியாற்றி உள்ளீர்கள். அமெரிக்காவை போல் ஒரு நாட்டில் நான் எனது நிர்வாகத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் பெருமைப்படுகிறேன்’’ என்றார். இருப்பினும் இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஷ் மற்றும் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவில்லை.
அவர்கள் 2 பேரும் விழாவில் பங்கேற்காமல் இருந்ததற்கு முக்கிய காரணம் உள்ளது. அதாவது நவம்பர் 5ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜோ பைடனுக்கு பதில் கமலா ஹாரிஷ், டொனால்ட் டிரம்பை எதிர்த்து களமிறங்கி உள்ளார். தேர்தல் தேதி நெருங்குவதால் கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் அவர்களால் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.
முன்னதாக நாசாவை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ளார். விண்வெளியில் இருந்தபடி அவர் தீபாவளி வாழ்த்து செய்தியை பகிர்ந்து இருந்தார். அந்த வாழ்த்து செய்தியும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications