இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஆகிறாரா லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர்?.. ஜோ பிடன் பரிந்துரை
வாஷிங்டன்: இந்தியாவுக்கான அமெரிக்கா தூதராக லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் மேயராக உள்ள எரிக் கார்சேட்டியின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பரிந்துரை செய்துள்ளார்.
அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோ பிடன் பொறுப்பேற்ற பின்னர் நிர்வாக ரீதியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரும் தற்போது புதிதாக நியமிக்க ஆயத்த பணிகள் நடைபெறுகின்றன.

டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த போது இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்தவர் கென்னத் ஜஸ்தர். இவர் கடந்த வாரம் முதல் வெளியுறவு துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தூதர் பதவிக்கு எரிக் கார்சேட்டியை (50) அதிபர் ஜோ பிடன் பரிந்துரை செய்துள்ளார். இதற்கு செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்த பின்னர் எரிக் தூதராக நியமிக்கப்படுவார்.

இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் மேயராக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இதுகுறித்து கார்சேட்டி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக என்னை அதிபர் ஜோ பிடன் பரிந்துரை செய்துள்ளார்.
அவரது பரிந்துரையை ஏற்று இந்த பணியில் சேவையாற்ற நான் விரும்புகிறேன். நான் லாஸ் ஏஞ்சல்ஸை மிகவும் நேசிக்கிறேன். நான் உங்கள் மேயர் என்ற எண்ணத்துடன் தினமும் எனது பணியை தொடங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications